DO III Past Paper

Friday, September 3, 2021

தொடர்புகளைப் பேணல் தாபன விதிக்கோவை வினாவிடைகள் 11 Maintaining contacts E Code Q&A



சட்டமா அதிபர் சட்டமா அதிபர் நேரடியாக யாருடன் கடித தொடர்புகளை வைத்திருப்பார்?

சனாதிபதி, பிரதம அமைச்சர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் என்போருடன் கடிதத் தொடர்புகளை வைத்திருப்பார்.

 

அமைச்சு செயலாளர் ஒருவரின் செயற்பாடுகள் யாவை?

 

அ) அமைச்சரின் பொதுப் பணிப்புரைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைவாகத் தனது அமைச்சின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத் திணைக்களங்களின் நடிவடிக்கைகளை மேற்பார்வை செய்வார்.

 

ஆ) அமைச்சரால் தெரிக்கப்படும் அரசாங்கத்தின் கொள்கைகளை தனது அமைச்சின் கீழுள்ள திணைக்களத் தலைவர்கள் ஊடாக செயல்படுத்துதல் செயலாளரின் பொறுப்பாகும்.

 

இ) திணைக்களமொன்றிற்குரித்தான அமைச்சரவைத் தீர்மானங்களை அமைச்சின் செயலாளர் அத்திணைக்களத்துக்கு அறிவிப்பார். இத்தீர்மானங்கள் செயல்படுத்தப்படுகின்றமைக்குப் பொறுப்பாயிருத்தல் செயலாளரின் பணியாகும்.

 

ஈ) செயலாளர் திணைக்களமொன்றின் கோப்பில் அமைச்சரின் கவனத்துக்கென குறிப்பெழுதுவாராகில் அமைச்சர் தனது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அக்கோப்பில் எழுத வேண்டும். 

உ) செயலாளரொருவர் தனது மேற்பார்வையின் கீழுள்ள திணைக்களமொன்றிற்குரிய எல்லாத் தாபன விடயங்களுக்கும் பொதுவாகப் பொறுப்புக் கூறுதல் வேண்டும்.

 

ஊ) தாபன விடயங்கள் தொடர்பான அதிகாரங்கள் ஒழுங்குவிதிகளை திணைக்களங்கள் முறையாகப் பின்பற்றுகின்றமை தொடர்பாக செயலாளர் பொறுப்புக் கூறுதல் வேண்டும்.

 

எ) தாபன விதிக்கோவையின் XLVIII ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக செயலாளர் அரசாங்க சேவை ஆணைக்குழுவுடன் தொடர்புகளை மேற்கொள்வார்.

 

ஏ) தனது அமைச்சைப் பாதிக்கின்ற முக்கிய விடயங்கள் எல்லாவற்றையும் ஒரு செயலாளர் தானே நேரில் செயல்படுத்துதல் வேண்டும். .

 

ஐ) தன்னால் முடிந்த சில அதிகாரங்களை மேலதிகச் செயலாளரொருவருக்கு அல்லது சிரேட்ட உதவிச் செயலாளரொருக்கு செயலாளரால் கையளிக்க முடியும்.

 

அமைச்சரொருவர் அல்லது செயலாளரொருவர் வேறு அமைச்சரொருவரின் சாதாரண கட்டுப்பாட்டின் கீழுள்ள திணைக்களமொன்றுடன் கடிதத் தொடர்பினைப் பேண வேண்டிய சாதாரண நடைமுறை யாது? 

 

உரிய அமைச்சருக்கு அல்லது செயலாளருக்கு கடிதம் அனுப்பலாம். நேரடியாக திணைக்களத் தலைவருக்கோ அல்லது வேறு உத்தியோகத்தரொருவருக்கோ எழுதியனுப்ப முடியாது.

திணைக்களத் தலைவர் ஒருவரின் செயற்பாடுகள் யாவை?

 

1) செயலாளரால் அறிவிக்கப்படும் அரசாங்கக் கொள்கைகளையும் அமைச்சரின் பணிப்புரைகளையும் செயல்படுத்துவது தொடர்பாக திணைக்களத் தலைவர் பொறுப்பாதல் வேண்டும்.

 

2) அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டிய பிரச்சினையொன்று எழுகின்ற போது திணைக்களத் தலைவரொருவர் அப்பிரச்சினையோடு தொடர்புடைய முக்கிய விடயங்கள், தனது பரிந்துரைகள் அடங்கிய எழுத்து மூல அறிக்கையொன்றைத் தயாரித்து செயலாளருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

 

3)  திணைக்களத் தலைவரே தனது திணைக்களத்தின் நிருவாகம் தொடர்பாக செயலாளருக்குப் பொறுப்புக் கூறுதல் வேண்டும். 

 

4) தாபன விதிக்கோவையிலும் நிதிப்பிரமாணங்களிலும் குறிப்பாக வேறு எழுத்திலான ஒழுங்கு விதிகள் மூலம் தனக்குக் கையளிக்கப்படுகின்ற அலுவல்களை அவர் விசேடமாக செயற்படுத்தல் வேண்டும்.

 

5) திணைக்களத்தின் தொழிநுட்பக் கடமைகளை ஆற்றுவதற்கும் திணைக்களத் தலைவரே பொறுப்பாயிருப்பார். 

 

6) தனது திணைக்களத்தால் செயல்படுத்தப்படுகின்ற விடயங்கள், தொடர்பாக பிற அமைச்சுக்களுக்கும் திணைக்களங்களுக்கும் முடியுமான எல்லா விதத்திலும் உதவி செய்வதும் இவரது கடமையாகும்.

7) திணைக்களமொன்றின் தலைவரொருவர் பொதுமக்களிடையே கருத்து மோதலொன்றை ஏற்படுத்தக் கூடிய ஏதேனுமொரு நிருவாக செயற்பாட்டை எடுப்பதற்குமுன் இவ்விடயத்தைச் செயலாளருக்கு அறிவிக்க வேண்டும்.

 

8) திணைக்களத் தலைவரொருவருக்கும் செயலாளருக்குமிடையிலான தொடர்புகள் கூடியவரை குறிப்பு முறை வடிவத்தில் இருக்க வேண்டும். திணைக்களத் தலைவரொருவர் செயலாளர்களுக்குக் கடிதங்கள் எழுதுவதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.

 

மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் யாருக்கு பொறுப்புக் கூற வேண்டியவராகிறார்?

 

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்குப் பொறுப்புக் கூற வேண்டிய அவர், அச்செயலாளரின் வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் செயலாற்றுவார்.

 

மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் ஒருவரின் செயற்பாடுகளை குறிப்பிடுக?

 

அ) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரை உசாவி வேறு அமைச்சொன்றினால் கையளிக்கப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வமைச்சின் முகவராகவும் மாவட்ட செயலாளர் அரசாங்க அதிபர் செயலாற்றுவார்.

 

ஆ) தனது மாவட்டத்திற்குள் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் இணைப்பது மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் ஒருவரின் பொறுப்பாகும்.

 

இ) அமைச்சொன்றிற்கு கையளிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக அவ்வமைச்சின் செயலாளரோடு நேரடியாகவோ அல்லது உரிய திணைக்களத் தலைவரூடாகவோ கடிதத் தொடர்புகளை மேற்கொள்ள மாவட்ட செயலாளருக்கு அரசாங்க அதிபருக்கு முடியும்.