DO III Past Paper

Saturday, September 4, 2021

அரச உத்தியோகத்தர்களின் கடன் அறவீடு வினாவிடைகள் 14 Loan Recovery of Public Servant



அரச உத்தியோகத்தர்களின் கடன் அறவீடு

சேவை முடிவுறுத்தப்பட்ட பிணையாளிக்கு பதிலாக கடன் மீதியை மீளச் செலுத்தும் வரை அல்லது வேறு ஏற்றுக்கொள்ளக் கூடிய பிணையாளரை முன்வைக்கும் வரை கடனாளிக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை குறிப்பிடுக.

 

அ) அவரின் மாதாந்த தவணைப் பணத்தை இரு மடங்காக உயர்த்தி, வட்டி வீதத்தையும் 5 சத வீதத்தால் அதிகரிக்கச் செய்தல் வேண்டும்.

 

ஆ) மேலும் தாமதித்தால் அட்டோனி தத்துவம் உள்ள எந்தவோர் ஆதனமாயினும் அதனை உடமை கொள்ள திணைக்களத் தலைவர் உரிய நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

 

இ) பிரதான கடனாளி வேறு ஏற்றுக்கொள்ளக் கூடிய பிணையாளர் ஒருவரைச் சமர்ப்பிக்கும் வரை, பிணையாளராக இருக்கும் எவ்வுத்தியோகத்தருக்கும் அவரின் சுய விருப்பத்தின் பேரில் கேட்டு விலகுவதற்கு அல்லது ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்கவோ அல்லது அவரை சேவையிலிருந்து இடைநிறுத்தவோ அல்லது பிணையாளர் என்ற நிலையிலிருந்து அவரை விடுவிக்கவோ கூடாது.

 

கடன் தொகை ஒன்றினைப் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு வெளிநாட்டுத்தொழில் ஒன்றுக்காக அல்லாது வேறேதேனும் பணியொன்றிற்காக சம்பளமற்ற விடுமுறையை வழங்க முன்னர், கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை குறிப்பிடுக.

 

அ) அத்தகைய விடுமுறையிலிருக்கின்ற காலப்பகுதியில் கடன் தொகை தொடர்பாக மாதாந்தம் செலுத்த வேண்டிய தவணைக் கட்டணத்தை செலுத்துவதற்கு அவ்வுத்தியோகத்தர், திருப்திகரமான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமைக்கு திணைக்களத் தலைவர் பொறுப்பாதல் வேண்டும்.

 

ஆ) இது தொடர்பான பிரதான பொறுப்புச் சார்ந்திருப்பது, கடன் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தருக்காதலால் அத்தகைய நடவடிக்கையொன்றை மேற்கொள்கின்ற தேவைப்பாட்டிலிருந்து அவர் விடுபட முடியாது.

 

கடன் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு வெளிநாட்டுத்தொழில் ஒன்றுக்காக சம்பளமற்ற விடுமுறையை வழங்க முன்னர், கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை குறிப்பிடுக.

 

வெளிநாட்டுத் தொழிலொன்றுக்குப் போவதற்கு சம்பளமற்ற லீவைக் கோருகின்ற உத்தியோகத்தர் ஒருவர், அந்த லீவை எடுப்பதற்கு முன்னர், கடன் பணத்தை மீளச் செலுத்தி விடுதல் வேண்டும்.

சேவையில் நிரந்தரமாக்கப்படாத உத்தியோகத்தர் ஒருவருக்கு கடனொன்றை வழங்குவதற்கு திணைக்களத் தலைவரால் அத்தாட்சிப் படுத்தப்பட வேண்டிய விடயங்கள் யாவை?

 

அ) அவரின் கடன் நடவடிக்கைகள் மற்றும் நடத்தை என்பன திருப்திகரமானவையெனவும், 

 

ஆ) அவர் சேவையில் நிரந்தரமாக்கப்பட மாட்டார் என எண்ணுவதற்கான காரணமெதுவும் கிடையாதெனவும், திணைக்களத் தலைவர் அத்தாட்சிப்படுத்தல் வேண்டும்.

 

பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையினை முழுமையாக அறவிட்டுக் கொள்வதற்கு முன்னர், உத்தியோகத்தரொருவர் மரணிக்குமிடத்து அவரிடமிருந்து அரசிற்கு அறவிடப்பட வேண்டிய அனைத்துத் தொகைகளையும் எவ்வாறு அறவிட முடியும்?

 

அ) அவருடைய பின்னுரிமைக்காரர்களுக்கு வழங்கப்படவுள்ள எந்தவொரு பணத்திலிருந்தும் அறவிட்டுக் கொள்ளுமாறு ஓய்வூதியப் பணிப்பாளரை உடனடியாகக் கேட்டுக் கொள்ளல் வேண்டும்.

 

ஆ) அறவிடப்பட வேண்டிய அனைத்துத் தொகையினையும் உரியவாறு அறவிட்டுக்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில், அத்தொகையினை பின்னுரிமைக்காரர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்வதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

 

இ) செயன்முறையை பிணையாளர் தொடர்பாகவும் பின்பற்றி அத்தொகையை பிணையாளரிடமிருந்து அறவிட்டுக் கொள்ள முடியும்.

 

கடன் நிலுவையாகவுள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரை அரச கூட்டுத்தாபன சேவைக்காக முழுமையாக விடுவிக்க முடியுமா? 

 

அ) அரச உத்தியோகத்தர் பெற்றுக்கொண்ட எவ்வகையைச் சார்ந்த கடனாயினும் அது நிலுவையாகவிருப்பின், அவை முழுவதையும் செலுத்தி முடியும் வரை அவரை அரச கூட்டுத்தாபன சேவைக்காக முழுமையாக விடுவிக்கக் கூடாது.

 

ஆ) உத்தியோகத்தரை விடுவிப்பதற்கு முன்னர் அவரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய பணம் தொடர்பாக அவரை விடுவிக்கின்ற திணைக்களம் பொறுப்பாதல் வேண்டும்.

அரச உத்தியோகத்தர்களுக்கு கடன் வழங்குகின்ற உத்தியோகத்தரின் பொறுப்புக்கள் யாவை?

 

1) இவ்வொழுங்கு விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களிலும் கடனாளி கையொப்பமிட்டுள்ளாரென, 

 

2) வீடொன்றைக் கட்டுவதற்கான காணியொன்றை அல்லது வீட்டு ஆதனமொன்றை அல்லது வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காகக் கடன் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில், கடன் தொகை வழங்கப்பட்டவுடன், கொள்வனவுப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு கடன் பெறுநர் தயாராயுள்ளாரென, 

 

3) வீடொன்றைக் கட்டுவதற்கான காணியொன்றை அல்லது வீட்டு ஆதனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படுகின்ற கடன் தொடர்பாயின், கொடுக்கல் வாங்கலுக்காகச் செலுத்தப்பட வேண்டிய தொகை கிடைத்தவுடனேயே உரிமை மாற்றல் உறுதியில் கைச்சாத்திடுவதற்கு ஆயத்தமாக உள்ளதாக அவ்வுரிமை மாற்றல் தொடர்பாகச் செயலாற்றுகின்ற சட்டத்தரணியிடமிருந்து அல்லது நொத்தாரிசிடமிருந்து பெற்றுக்கொண்ட கடிதம் ஒன்றைக் கடன் பெறுநர் சமரப்பிக்கின்றாரென, 

 

4) கடன் தொகை கொள்வனவு விலையிலும் பார்க்கக் குறைவாகவுள்ள போது கடனுக்கு மேலதிகமாகத் தேவைப்படுகின்ற தொகை கடன் பெறுநர் வசம் உள்ளதென

 

கடன் வழங்குவதற்கு முதல் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

 

கடன் வழங்கியதன் பின்னர், மொத்தக் கடன் தொகையும் அக்கடன் வழங்கப்பட்ட பணிக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கு, அதில் செலவு செய்யப்படாத மீதமொன்று இருக்குமிடத்து, அதனை உடனடியாக மீளச் செலுத்துவதாகவும், கடன் தொகையினை அனுமதித்த உத்தியோகத்தர் பொறுப்பாதல் வேண்டும்.

மோட்டார் வாகனம் Motor Vehicle ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக வங்கிகளூடாக கடன் வழங்குவதற்கான தகைமைகள் யாவை?

 

1) அரச சேவையின் அல்லது மாகாண அரச சேவையின் நிரந்தர உத்தியோகத்தர் ஒருவராதல் மற்றும்,

 

2) தாபன விதிக்கோவை அத்தியாயம் XIV இன் கீழ் மோட்டார் வாகன மைல் கூலி பெறுவதற்கும் அடிக்கடி உத்தியோக பூர்வ பிரயாணங்களில் ஈடுபடுவதற்கும் நேரிடுகின்ற உத்தியோகத்தர் ஒருவராதல். 

 

3) தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக மோட்டார் வாகனமொன்றை வைத்திருத்தல் வேண்டுமென விதித்துரைக்கப்பட்ட அலுவலர் ஒருவராதல். அல்லது

 

4) அத்தியாயம் XXIV  8 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் சைக்கிள் ஒன்றை / ஸ்கூட்டர் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக கடன் பெற்றுள்ளவரும் பதவி உயர்வு அடிப்படையின் பேரில் மோட்டார் வாகன மைல் கூலி பெறுவதற்கும் அடிக்கடி உத்தியோக பூர்வ பிரயாணங்களில் ஈடுபடுவதற்கும் நேரிடுகின்ற உத்தியோகத்தர் ஒருவராதல்

 

5) இத்திட்டத்தின் கீழ் 05 வருடங்களுக்கு ஒருமுறை வாகனக் கடன்களைப் பெற்றுக் கொள்ளலாமென்பதுடன், முன்னராகப் பெற்றுக் கொண்ட கடன் தொகையை முழுமையாகச் செலுத்தி முடித்திருத்தல்.