DO III Past Paper

Saturday, September 4, 2021

வங்கிக் கடன் தாபன விதிகோவை வினாவிடைகள் தொடர் 15 Bank Loan E Code Question and Answer



தாபன விதிக்கோவை அத்தியாயம் XXIV இன்படி கொள்வனவு செய்கின்ற மோட்டார் வாகனத்தை (Motor Vehicle) வங்கியில் ஈடுவைத்தல் (Mortgage in the Bank) தொடர்பில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை குறிப்பிடுக.

 

1) வாகன விற்பனையாளரின் (Vehicle Dealer) வெளிப்படுத்துகை

 

2) அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாகனத் திருத்தகத்திலிருந்து வாகனம் பற்றிப் பெற்றுக் கொள்ளப்பட்ட மதிப்பீட்டுச் சான்றிதழ். (Valuation Report) 

 

3) வாகனத்தின் காப்புறுதி உத்தரவுப் பத்திரம் (Vehicle Insurance Certificate) 

 

4) வாகனத்தின் உரிமைச் சான்றிதழ் (Vehicle Registration Certificate)

 

5) வாகனத்தின் நிகழ்கால வருமான உத்தரவுப் பத்திரம் (Vehicle License)

 

6) கொள்வனவு செய்யப்படுகின்ற மோட்டார் வாகனம், கடன் கோருபவரின் கடமை நடவடிக்கைகளுக்காக தகுந்ததென திணைக்களத் தலைவரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்.

 

7) வாகனம் கொள்வனவு செய்யப்பட்ட திகதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டிற்குமாக அகல் விரிவான காப்புறுதிப் பத்திரம் (Full Insurance)  ஒன்றைக் கடன் பெறுநர் பெற்றுக் கொள்ள வேண்டியதுடன், அக்காப்புறுதிப் பத்திரத்தை காப்புறுதியின் முதிர்ச்சிக் காலம் பூர்த்தியடைய முன்னர் திணைக்களத் தலைவரூடாக ஒவ்வோர் ஆண்டிலும் வங்கிக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

 

8) அகல் விரிவான காப்புறுதிப் பத்திரம் ஒவ்வோர் ஆண்டிலும் புதுப்பிக்கப்படாவிட்டால் (Renewal) அரசினால் செலுத்தப்படுகின்ற வட்டிச் சலுகை வழங்கப்பட மாட்டாது.

 

9) இக்காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுகின்ற போது அதனூடாக வேலை நிறுத்தங்கள், கலவரங்கள், குடிசார்கலகங்கள், பயங்கரவாத மற்றும் இயற்கை விபத்துக்கள் ஆகிய விடயங்களும் உள்ளடக்கப்படல் வேண்டும்.

கடன் தவணைக் கட்டணம் அறவிடப்பட்டு வங்கிக்கு அனுப்புதல் தொடர்பில் திணைக்களத்தின் செயற்பாடுகளை விபரிக்க. (Loan recovery sent to bank)

 

அ) உத்தியோகத்தர் சேவையாற்றுகின்ற நிறுவனம் வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட தவணைக் கட்டணத்தை உத்தியோகத்தரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படுகின்ற வட்டி, அரசாங்கம் தாங்கக் கொள்கின்ற வட்டி என்பவற்றுடன் மாதாந்தம் (Monthly) அனுப்புதல் வேண்டும்.

 

ஆ) உத்தியோகத்தர் சார்பில் அரசாங்கம் தாங்கிக் கொள்கின்ற வட்டியை அரசாங்கத்தின் செலவாக பொதுத் திறைசேரியின் ஆலோசனையின் பேரில் கணக்கு வைத்தல் வேண்டும்.

 

இ) ஏதேனும் காரணத்தினால் உத்தியோகத்தருக்கு சம்பளம் செலுத்தப்படாத ஒரு சந்தர்ப்பத்தில் தவணைக் கட்டணம் அறவிடப்படாமை பற்றி நிறுவனத் தலைவர் உரிய வங்கிக்கு அறிவித்தல் வேண்டும்.

 

ஈ) பதவி துறத்தலின் போது அல்லது பதவி நீக்கத்தின் போது கடன் மீதி தொடர்பில் வங்கியின் பொது நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.

 

உ) பணித்தடை, பதவி நீக்கம், பதவிதுறத்தல் அல்லது சேவையிலிருந்து இளைப்பாறுகை என்பவற்றின் போது உரிய கடனாளி வங்கியின் சட்டங்களுக்கு அமைவாக அரசாங்கம் தாங்கிக் கொள்கின்ற வட்டியின் வித்தியாசம் உள்ளிட்ட தவணைக் கட்டணத்தைத் தனிப்பட்ட முறையில் செலுத்துதல் வேண்டும்.

 

ஊ) பணித்தடை செய்யப்பட்ட உத்தியோகத்தர் ஒருவர் மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டால் பணித்தடை செய்யப்பட்ட காலத்திற்குள் உத்தியோகத்தரால் செலுத்தப்பட்ட தவணைக் கட்டணங்களுக்கு உரியதாக அரசாங்கத்தினால் தாங்கிக் கொள்கின்ற வட்டி பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக மீளளிப்புச் செய்யப்பட நடவடிக்கையெடுக்கப்படும்.

 

1) உத்தியோகத்தர் குற்றமற்றவரென வெளிப்படுத்தி அவர் மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டால் அவரால் செலுத்தப்பட்ட தவணைக் கட்டணங்களில் உள்ளடக்கப்பட்ட அரசாங்கத்தினால் தாங்கிக் கொள்ளப்படுகின்ற வட்டியை முழுவதுமாக அவருக்கு மீளளிப்புச் செய்தல் வேண்டும்.

 

2) உத்தியோகத்தர் மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டமை ஏதேனும் ஒரு தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட வகையிலாயின் தண்டனையின் தன்மையை கருத்தில் கொள்ளாது செலுத்தப்பட்ட தவணைக் கட்டணங்களில் உள்ளடக்கப்பட்ட அரசாங்கத்தினால் தாங்கிக் கொள்ளப்பட்ட வட்டியில் அரைவாசியை மாத்திரம் மீளளிப்புச் செய்தல் வேண்டும்.

 

3) கட்டாய லீவில் அனுப்பப்பட்ட உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பில் தவணைக் கட்டணங்களையும் வட்டியையும் வழமை போல் அனுப்ப வேண்டியதுடன் அரசாங்கம் வட்டியின் வித்தியாசத்தைத் தாங்கிக் கொள்ளும்.

4) எவரேனும் ஓர் உத்தியோகத்தருக்கு அரைச் சம்பளம் செலுத்தப்படுகின்ற போது தவணைக் கட்டணங்கள் மற்றும் வட்டி (Instalment and Interest) அறவிடல் தொடர்பாக வங்கியின் பொது சட்ட விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

 

5) எனினும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் பிரசவ லீவின் பேரில் அரைச்சம்பளம் (Half Pay Salary for Maternity Leave) பெறுமிடத்து, தவணைக் கட்டணம் மற்றும் வட்டியைத் தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டியதுடன் வட்டியின் வித்தியாசம் அரசினால் மீளளிப்புச் செய்யப்படும்.

 

6) உத்தியோகத்தர் ஒருவர் சம்பளமற்ற லீவைப் (No Pay Leave) பெறும்போது தவணைக் கட்டணம் மற்றும் வட்டி (Instalment and Interest) அறவிடல் தொடர்பாக வங்கியின் பொதுச் சட்ட விதிகளைப் பின்பற்றல் வேண்டும்.

 

உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் வாகன கொள்வனவு கடன் (Motor Vehicle Purchasing Loan) பெறுவதற்கு திணைக்களத்தலைவர் பரிந்துரை வழங்க முடியாத சந்தர்ப்பத்தினை குறிப்பிடுக.

 

அ) உத்தியோகத்தருக்கு கொள்வனவு செய்வதற்கு மிக அண்மித்த நிலையில் உத்தியோகத்தரின் துணைவருக்கு உரித்தாகவிருந்த அல்லது 

 

ஆ) உத்தியோகத்தர் கொள்வனவு (Purchasing) செய்வதற்கு அண்மித்த நிலையில் அவ்வுத்தியோகத்தரின் தாய் தந்தைக்கு அல்லது சகோதரர் ஒருவருக்கு உரித்தாகவிருந்த அல்லது 

 

இ) கடன் கோருவதற்கு உடன் முந்திய ஆறுவருட காலத்திற்குள் எச்சந்தர்ப்பத்திலேனும் உத்தியோகத்தருக்கு அல்லது அவரின் வாழ்க்கைத் துணைக்கு உரித்தாகவிருந்த 

 

ஒரு மோட்டார் வாகனத்திற்காக கடன் வழங்குவதை திணைக்களத் தலைவர் பரிந்துரைத்தலாகாது.

வங்கி கடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் பரிந்துரைத்தல் தொடர்பான நடைமுறைகளை குறிப்பிடுக.

 

1) கடன் விண்ணப்பதாரர் ஒருவர் பின்னிணைப்பு 31 இன் படி விண்ணப்பங்களை 2 பிரதிகளில் தயாரித்து திணைக்களத் தலைவரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

 

2) திணைக்களத் தலைவர் உரிய கடன் விண்ணப்பத்தை Loan Application காத்திருப்போர் பதிவேட்டில் பதிந்து வழங்க முடிந்த கடன் தொகையைத் தீர்மானித்து பின்னிணைப்பு 32 இல் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளுள் கடன் விண்ணப்பதாரர் விருப்புத் தெரிவிக்கின்ற வங்கிக்கு ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

 

3) கடன் விண்ணப்பதாரர் கடன் தொகையைப் பெறுவதற்காக குறித்த வங்கியின் சட்ட விதிகள், சுற்றறிக்கை அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தேவையான தகவல்களை 03 மாதங்கள் பூரத்தியாக முன்னர் வங்கியிடம் சமர்ப்பித்து கடன் தொகை அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வங்கி மூலம் அமைச்சு / திணைக்களத்திற்கு அறிவித்தல் வேண்டும்.

 

4) கடன்தொகை வழங்கப்பட்ட பின்னர் பின்னிணைப்பு 27 இன் படி அது பற்றி திறைசேரிக்கும், அமைச்சு / திணைக்கத்திற்கும் அறிவித்தல் வேண்டும். (Inform to Treasury and Ministry or Department)