DO III Past Paper

Wednesday, September 8, 2021

வெளிநாட்டு பிரயாணங்கள் - வினாவிடைகள் தொடர் 20 - Overseas trips



 

அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் கல்வி அல்லது பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு பிரயாணத்தினை எவ்வாறான செலவில் செல்கிறார்?

அ) தனது சொந்தச் செலவில், அல்லது 

ஆ) வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றின் அல்லது முகவர் நிறுவனமொன்றின் செலவில், அல்லது

இ) இலங்கை அரசாங்கத்தின் செலவிலாகும்.

 

உத்தியோகத்தர் ஒருவர் கல்விக்காக வெளிநாட்டு பிரயாணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் விடுமுறை வழங்கல் தொடர்பான ஏற்பாடுகள் தாபன விதிக்கோவையின் எத்தனையாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 14, 15 மற்றும் 16 ஆம் பிரிவுகளாகும்.

 

கற்கை அல்லது பயிற்சிக்கான வெளிநாட்டு பயணம் ஒன்றிற்கான செலவினத்தை வெளிநாட்டு அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்கக்ககூடிய நிபந்தனைகளை குறிப்பிடுக.

 

அ) வெறுமனே அரசாங்க உத்தியோகத்தர்ளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல், பொதுமக்களுக்கும் சேர்த்து வெளியிடப்படுகின்ற விளம்பரமொன்றின் மூலம் விண்ணப்பப் பத்திரங்களைக் கோருவதன் மூலம்.

ஆ) புலமைப் பரிசிலை வழங்குகின்ற நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் 

இ) இலங்கை அரசாங்கத்திற்கு புலமைப் பரிசிலொன்றாக அல்லது நன்கொடை ஒன்றாக அன்பளிப்புச் செய்யப்படுகின்ற கற்கை, பயிற்சி அல்லது சுற்றுப் பயணத்திற்காக இலங்கை அரசாங்கத்தினால் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் பெயரிடப்படுவதன் மூலம்,

 

அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் கல்வி அல்லது பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளிநாடொன்றிற்கு அனுப்பப்படுவதற்கு அனுமதி வழங்கப்படுதற்கான தகைமைகள் எவை?

அ) தனது நியமன நிபந்தனைகளின் பிரகாரம் தொழிலில் நிரந்தரமாக்கப்படுவதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய யாதேனுமொரு பயிற்சியினைப் பெற்றுக்கொள்வதற்காக தகுதிகாண் நிலையில் உள்ள உத்தியோகத்தரொருவரை அனுப்பலாம்.

 

ஆ) வேறு எந்தவொரு காரணமாகவும் தகுதிகாண் நிலையில் உள்ள உத்தியோகத்தரொருவரை கற்கை அல்லது பயிற்சிக்காக வெளிநாட்டுக்கு அனுப்பக்கூடாது.

 

இ) தற்காலிக அடிப்படையிலான உத்தியோகத்தர் ஒருவரை கற்கை அல்லது பயிற்சி நெறிகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது. 

 

முழுச் சம்பளத்துடனான கற்கை விடுமுறைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் அரச உத்தியோகத்தர் ஒருவர் அவசியமாக கையொப்பமிடப்பட வேண்டிய ஒப்பந்த  முறி எது?

 

கற்கை அல்லது பயிற்சிக்காக ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலப் பகுதிக்கென (பயணத்திற்காக எடுக்கும் காலம் உட்பட) வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பப்படும் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இங்கு இதன் பின்னர் “கட்டாய சேவைக் காலம்” எனக் குறிப்பிடப்படுகின்ற ஒப்பந்தத்தில் காணப்படும் ஆகக் குறைந்த சேவைக் காலத்திற்கு அரசாங்கத்தில் பணியாற்றுவதாக முறியொன்றில் கைச்சாத்திடுதல் வேண்டும்.

அரச இல்லமொன்றில் வசிப்பதற்காக அரச உத்தியோகத்தரின் சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வாடகை எவ்வளவு?

 

அட்டவணைப்படுத்தப்பட்ட இல்லமொன்றைப் பெறுவதற்கு உரித்தற்ற உத்தியோகத்தர் ஒருவர் எனின் 

அ) நிரந்தர இல்லங்கள் – மணமுடித்த உத்தியோகத்தரொருவரின் சம்பளத்தில் 12 1/2 % (பன்னிரெண்டரை சதவீதம்) மணமாகாத உத்தியோகத்தரின் சம்பளத்தில் 7 % % (ஏழரை சதவீதம்) ஆகும்.

 

ஆ) அரை நிரந்தர இல்லங்கள் – உத்தியோகத்தர் மண முடித்தவராயினும் அல்லது மணமுடிக்காதவராயினும் இல்லத்தின் மதிப்பீட்டு வாடகை.

 

இ) கூடி வசிக்கும் இல்லங்கள் (Summary) – அங்கு வசிக்கின்ற அனைத்து உத்தியோகத்தர்களிடமிருந்தும் சம அளவாக அறவீடு செய்யப்படுகின்ற சிக்கன வாடகை.

 

ஈ) கூடாரம் போன்ற தற்காலிக இல்லங்கள் – அறவீடு இல்லை.

 

அட்டவணைப்படுத்தப்பட்ட இல்லமொன்றைப் பெற்றுக்கொள்ள உரித்துடைய உத்தியோகத்தர் ஒருவர் எனின் கீழ்வருமாறு வாடகை அறவிடப்படும்.

 

அ) திருமணமான  உத்தியோகத்தர் ஒருவரின் சம்பளத்தில் 10% (பத்து) திருமணமாகாத உத்தியோகத்தர் ஒருவரின் சம்பளத்தில் 05% (ஐந்து) ஆகும்.

 

இ) அரச உத்தியோகத்திலீடுபட்டுள்ள கணவன், மனைவி இருவரும் அரச இல்லமொன்றில் வதிகையில் அட்டவணைப்படுத்தப்பட்ட இல்லமொன்றைப் பெறுவதற்கு உரிமையற்றவர்களாயின், 
 
அவ்விருவரில் அதிக சம்பளத்தைப் பெறுகின்ற உத்தியோகத்தரின் சம்பளத்திலிருந்து 12 1/2%, உம், குறைந்த சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தரின் சம்பளத்திலிருந்து 5%  உம், அறவிடப்படல் வேண்டும்.
 
 
ஈ) அவர்களில் ஒருவருக்கேனும் அட்டவணைப்படுத்தப்பட்ட இல்லமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான உரித்தொன்று காணப்படுமாயின் 
 
கூடுதலான சம்பளத்தைப் பெறுகின்ற அலுவலரின் சம்பளத்திலிருந்து 10% மும். குறைந்த சம்பளத்தைப் பெறுகின்ற உத்தியோகத்தரின் சம்பளத்திலிருந்து 2  1/2% மும் அறவீடு செய்யப்படல் வேண்டும்.
 
 
உ) இல்லமொன்றில் கூட்டாக வசிக்கும் ஒவ்வொரு கூட்டுக் குடியிருப்பாளரிடமிருந்தும் சம்பளத்தில் 10% த்தை அறவிட்டுக் கொள்ளல் வேண்டும். 
 
 
 
அரச பணிகளுக்காக இல்லத்தின் ஒரு பகுதியைப் பாவிக்கும் போது, வாடகையைக் குறைக்குமாறு யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்?
 
 
செயலாளரிடம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும், வாடகையைத் தீர்மானிப்பதற்கு முன்னர் பிரதம மதிப்பீட்டாளரின் அறிக்கையைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
 
 
 
அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவியொன்றுக்குரிய இல்லமொன்றை ஏற்க மறுக்கும் போது அது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளை குறிப்பிடுக.
 
 
அ) அவ்வுத்தியோகத்தருக்குப் பதிலாக வேறொரு உத்தியோகத்தரை அவ்வில்லத்தில் குடியிருக்கச் செய்ய இல்லங்களை ஒதுக்கும் அதிகாரி அனுமதிக்காத போது இல்லத்தை மறுத்த உத்தியோகத்தர் உண்மையாகவே அங்கு குடியிருப்பதாகக் கொள்ளப்பட்டு அவரிடமிருந்து வாடகை (Rent)  அறவிடப்படல் வேண்டும்.
 
 
சில அலுவலர் வகுதியினருக்கு அலுவலக சீருடை வழங்குவதற்கான காரணம் என்ன?
 
கடமையில் ஈடுபட்டுள்ள போது, எச்சேவையில் ஈடுபட்டுள்ளனரென்பதனை இலகுவில் அடையாளம் காணத்தக்கவாறு உத்தியோகத்தர்களுக்கு சீருடைகளை வழங்கப்படுகிறது.
 
 
பாதுகாப்பு உடைகளை வழங்கப்படக் கூடிய கடமைகள் எவை?
 
 
1) கட்டாயமாக திறந்த வெளியில் ஆற்றப்பட வேண்டியவையும் மோசமான காலநிலையிலும் கூட நிறைவேற்றப்படாமலிருக்க முடியாதவையுமான கடமைகள்.
 
2) அவர்களது உடைகள் அழுக்கடைவதிலிருந்தும் சேதங்களுக்குட்படுவதிலுமிருந்தும் பாதுகாப்பு அளிக்கத்தக்க உடைகள் தேவைப்படும் விதத்திலான கடமைகள்.
 
3) பணியாற்றுகின்ற போது விசேட பாதுகாப்பான உடைகள் அல்லது வாய்மூடிகள், கண் மறைப்புக்கள் போன்ற பிற உபகரணங்கள் என்பவற்றை உபயோகிக்காவிடின் சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படக் கூடிய அல்லது வேறு விதத்தில் உடலுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய கடமைகள்.
 
 
சீருடைகள் மற்றும் / அல்லது பாதுகாப்பு உடைகள் என்பவற்றை வழங்கக்கூடிய அலுவலர் தரத்தினர் யாவர்?
 
 
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இவர்கள் நிரந்தர பணியாளர்களாதல் வேண்டும். அவ்வாறின்றேல் ஆகக் குறைந்தது ஒருவருட சேவைக் காலத்தை உடையவர்களாகவும், அவ்வாறே ஆகக் குறைந்தது மேலுமொரு வருட, காலமேனும் சேவையில் தரித்திருக்கும் சாத்தியமுள்ளவர்களாகவுமுள்ள தற்காலிக ஊழியர்களாக இருத்தல் வேண்டும்.
 
சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் : Laborer
 
கார்/வான்/ஜீப் என்பவற்றின் சாரதிகள் Car, Jeep Drivers
 
அலுவலகப் பணியாளர்கள், Officer Employee,
 
காவற்காரர்கள், Watcher,
 
சைக்கிள் செய்தியாளர்கள் : Bicycle Messenger, 
 
இணைப் பிரதி பண்ணும் இயந்திர இயக்குநர்கள் Photo copy machine operators,
 
லொறி சுத்தம் செய்வோர் Lorry Cleaners, 
 
 
 
சிலவகை நோய்களுக்கான முழுச் சம்பளத்துடனான விசேட லீவுகள் வழங்கக்கூடிய உத்தியோகத்தர் வகுதியினர் யாவர்?
 
 
அ) அரசாங்க சேவையில் உள்ள நிரந்தர உத்தியோகத்தர் ஒருவருக்கும், 
 
ஆ) மாதாந்த சம்பளத்தின் அடிப்படையில் அல்லது நாட்சம்பளத்தின் அடிப்படையில் அல்லது நாட்சம்பளம் மற்றும் மாதச் சம்பளத்தின் அடிப்படையில் ஒருவருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்துள்ள தற்காலிக ஊழியர் ஒருவருக்கும் 
 
இ) தொடர்ச்சியான ஒரு வருட சேவைக் காலமுள்ள அமய ஊழியர் ஒருவருக்கும்