DO III Past Paper

Thursday, September 9, 2021

நாட்டிற்கு வெளியே கழிப்பதற்கான விடுமுறை - வினாவிடைகள் தொடர் 22 Holiday to spend outside the country



நாட்டிற்கு வெளியே கழிப்பதற்கான விடுமுறைகள், மற்றும் ஏனைய விடயங்கள் வினாவிடைகள்

ஒரு வருடத்தில் ஒரு உத்தியோகத்தர் பெற்றுக் கொள்ளக்கூடிய ஓய்வு விடுமுறைகள் எத்தனை?

அ) ஓர் உத்தியோகத்தர் ஆண்டு தோறும் ஆகக் கூடியது 24 நாட்கள் ஓய்வு லீவினை பெற்று கொள்ளலாம். 

ஆ) வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்ற வேண்டியவர்களின் விடயத்தில் (உதாரணம் மருத்துவ உத்தியோகத்தரகள் (Medical Officers), தாதிமார்கள் (Nurses), பொலிஸ் உத்தியோகத்தர்கள் (Police Officers), சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் (Prison Officers) ஆகியோர்) இந்த உச்ச எல்லை 28 நாட்களாகும்.

 

இ) இரண்டு வருடங்களுக்குரிய திரண்ட லீவு, அதாவது லீவு பெற்றுக் கொள்ளப்படுகின்ற வருடத்தினதும், அதற்கு முன்னைய இரண்டு வருடத்தினதும் பயன்படுத்தப்படாது மீதமுள்ள ஓய்வு லீவுகளை அவருக்குப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்க முடியும்.

 

ஈ) லீவினை நாட்டிற்கு வெளியே கழிப்பதாயின், லீவினைப் பெற்றுக் கொள்கின்ற வருடம் மற்றும் அதற்கு முந்திய இரண்டு வருடங்கள் என்ற மூன்று வருடங்களுக்குமுரிய திரண்ட லீவினைப் பெற்றுக்கொள்வதற்கு பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவர் இடமளிக்க முடியும். இதன் பிரகாரம் அவருக்கு ஆகக்கூடியது 72 நாட்கள் ஓய்வு லீவினை நாட்டிற்கு வெளியே கழிப்பதற்காக பெற்றுக் கொள்வதற்கு உரித்துண்டு.

 

நாட்டிற்கு வெளியே கழித்த லீவின் பின்னர் மீண்டும் கடமைக்குத் திரும்பிய உத்தியோகத்தர் ஒருவர், கடமைக்கு மீளத்திரும்பிய அதே ஆண்டில் அல்லது அதை அடுத்து வரும் ஆண்டில் தொடர்ச்சியான 9 மாதச் சேவையினைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர், மீண்டும் ஒரு முறை நாட்டிற்கு வெளியே கழிப்பதற்காக மீண்டும் எவ்வாறு லீவினை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படும்?

 

அ) நாட்டிற்கு வெளியே லீவிலிருந்து விட்டு மீண்டும் கடமைக்குத் திரும்பிய அதே ஆண்டில் அவர் அது வரையில் ஓய்வு லீவு எதனையும் பெற்றிராத சந்தர்ப்பத்தில், அவ்வாண்டிலே அவர் பணியாற்றியுள்ள ஒவ்வொரு மாதத்திற்காகவும் அவரது வருடாந்த ஓய்வு லீவுகளில் இருந்து 1/9 என்ற விகிதத்திலான லீவுகளையும், அதையடுத்த ஆண்டில் சேவையாற்றியுள்ள ஒவ்வொரு முழுமையான மாதத்திற்காகவும் வருடாந்த ஓய்வு லீவுகளில் 1/3 பகுதி என்ற வீதம் அவ்வாண்டிற்காக ஆகக் கூடியது 24 நாட்கள் வரையிலான லீவின் கூட்டுத் தொகையினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

முதல் முறையாக நியமனம் பெற்றுள்ள ஒருவர் சம்பளத்துடனான ஓய்வு லீவினைப் பெற்றுக் கொள்வதற்கான தகைமைகள் எவை?

 

அ) முதல்முறையாக நியமனம் பெற்றுள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு முழுச் சம்பளத்துடனான ஓய்வு லீவினைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் 9 மாதக் காலத்திற்கு அவர் பணியாற்றியிருத்தல் வேண்டும்.

 

ஆ) எனினும் அவர் சுகவீனமுற்றிருப்பதாக மருத்துவச் சான்றிதழ் (Medical Certificate) ஒன்றினைச் சமர்ப்பிக்கும் சந்தர்ப்பங்களில் அல்லது வேறு மிக அவசரமான சந்தர்ப்பங்களில் இந்த விதிமுறைகளுக்கு மாற்றமாக செயற்பட முடியும். 

 

இ) அவ்வாறான சந்தர்ப்பங்களில் பணியாற்றுகின்ற முதல் வருடத்திலே கடமையாற்றியுள்ள ஒவ்வொரு மாதத்திற்காகவும் வருடாந்த ஓய்வு லீவுகளில் 1/9 பகுதி என்ற வகையில் ஓய்வு லீவினைப் பெற்றுக்கொடுப்பதற்கு திணைக்களத் தலைவருக்கு முடியும். 

 

ஈ) நியமனத் திகதியிலிருந்து இரண்டு வருட காலப் பகுதியினைப் பூர்த்தி செய்துள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு, அவ்விரண்டு வருட காலப் பகுதியினை பூர்த்தி செய்த பஞ்சாங்க வருடத்தின் மீதமுள்ள காலப் பகுதியினுள், அவர் அதுவரையில் பணியாற்றியுள்ள ஒவ்வொரு மாதத்திற்காகவும் வருடாந்த ஓய்வு லீவுகளில் 1/12 என்ற வகையில் கணிப்பிடப்பட்ட விகிதாசார ஓய்வுலீவினை அவ்வாண்டின் இறுதி வரையிலும் பெற்றுக் கொடுக்க முடியும்.

 

அலுவலர் ஒருவர் திடீர் விபத்து லீவுகளை பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை குறிப்பிடுக.

அ) அவரது கடமையை ஆற்றும் பொழுது அல்லது

(ஆ) அவர் கடமை புரியாத நேரத்திலாயினும், அவரது சாதாரண கடமைப் பரப்பெல்லைக்குள் வருகின்ற ஒரு செயலை நிறைவேற்றும் பொழுது அல்லது

(இ) அவர் கடமைகளை நிறைவேற்றுமிடத்து நிகழ்ந்த ஏதேனும் செயலின் விளைவாக அல்லது

(ஈ) தனது வேலைத்தளத்திலிருந்து கடமை நிமித்தம் வெளியே பிரயாணம் செய்யும் பொழுது காயம் ஏற்படின், மற்றும் அவ்வாறு காயம் ஏற்பட்டமை உத்தியோகத்தர் சார்பான கவனயீனம் காரணமாக அல்லாதவிடத்து, வைத்தியக் குழுவின் பரிந்துரைக்கமைய உரிய அமைச்சின் செயலாளர், ஒரு வருடம் வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறையையும் அதன் பின்னர் 06 மாதங்கள் வரை அரைச்சம்பளத்துடன் கூடிய விடுமுறையையும் அனுமதிக்க முடியும். 

உ) இவ்வாறு அனுமதிக்கப்படுகின்ற லீவு உத்தியோகத்தரின் வழமையான லீவிலிருந்து கழிக்கப்பட மாட்டாது.

எ) ஓர் உத்தியோகத்தருக்கு திடீர் விபத்து லீவுக்கு மேலதிகமாக அவருக்குரிய காலங்கடந்த ஓய்வு லீவினைப் பெற்றுக்கொள்ள அனுமதியுண்டு.

உ) திடீர் விபத்து லீவுக்காக விண்ணப்பிக்க வேண்டியது 5ஆம் பொதுப் படிவத்திலாகும்.

 

அலுவலர் ஒருவர் விசேட பிணி லீவுகளை பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை குறிப்பிடுக.

 

அ) தனது உத்தியோக கடமைகளை உண்மையில் புரியும் பொழுது நோய்வாய்ப்படும் ஓர் உத்தியோகத்தருக்கு அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் ஒருவரினால் வழங்கப்பட்ட சான்றிதழின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் 6 மாதங்களுக்கு முழுச்சம்பளத்துடனும், மேற்கொண்டு 6 மாதங்களுக்கு அரைச் சம்பளத்துடனும் லீவை மேலும் அனுமதிக்கலாம்.

ஆ) தனது கடமையின் போதல்லாது எதிர்பாராத விபத்தொன்றில் காயமடைகின்ற ஓர் அரசாங்க உத்தியோகத்தருக்கு முழுச்சம்பளத்துடனான விசேட பிணி லீவை மருத்துவ சபையின் (Medical Boad) சிபாரிசின் பேரிலும் அவ்வாறான சலுகை அத்தகைய விபத்துக்கு அவசியந்தான் எனத் தாபனப் பணிப்பாளர் நாயகம் தீர்மானிக்குமிடத்தும் ஓர் அமைச்சின் செயலாளர் வழங்கலாம்.

 

ஒரு அலுவலர் காலங்கடந்த லீவாக எத்தனை நாட்களை பெற்றுக் கொள்ள முடியும்?

 

அ) திணைக்களத் தலைவரது தற்றுணிபின் பேரில் இரண்டு வருடகாலப் பகுதிக்குரிய பயன்படுத்தப்படாத ஓய்வு லீவை அவருக்கு வழங்க முடியும். 

 

ஆ) இரண்டு வருடங்களுக்குரிய திரண்ட லீவு, அதாவது லீவு பெற்றுக் கொள்ளப்படுகின்ற வருடத்தினதும், அதற்கு முன்னைய இரண்டு வருடத்தினதும் பயன்படுத்தப்படாது மீதமுள்ள ஓய்வு லீவுகளை அவருக்குப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்க முடியும்.

 

இ) ஏதேனும் ஓர் ஆண்டிற்குள் உத்தயோகத்தர் ஒருவருக்குப் பெற்றுக் கொள்ள முடிவது, இரண்டு ஆண்டுகளுடன் கூடிய ஒரு காலப்பகுதிக்குரிய 48 நாட்கள் கடந்தகால லீவுகளை மாத்திரமே.

ஈ) சுகவீனம் அல்லது திடீர்விபத்து போன்ற காரணங்களின் நிமித்தம் எவரேனும் உத்தியோகத்தருக்கு லீவு தேவைப்படுமிடத்து, அவரது வருகை, வேலை, நடத்தை என்பன சிறப்பாக இருக்குமிடத்து செயலாளர் திருப்தியுமுற்றால், தனது தற்றுணிபின் பேரில் எவையேனும் இரண்டு ஆண்டுகளில் பயன்படுத்தப்படாமல் எஞ்சியுள்ள காலங்கடந்த லீவுகளை ஓர் ஆண்டிற்குள் இரண்டாவது முறையாகவும் பெற்றுக்கொள்ள அவருக்கு இடமளிக்க முடியும்.

 

உ) அத்தகைய சூழ்நிலையில் இரண்டு அடுத்துறும் ஆண்டுகளில் ஓர் உத்தியோகத்தருக்கு வழங்கப்படுகின்ற மொத்த காலங்கடந்த லீவுகள் நான்கு வருடங்களுக்கான அவரது வழமையான லீவுக்கான 96 நாட்கள் ஆகும்.

 

காலங்கடந்த லீவினை பெற்றுக் கொள்வதற்கான காரணங்களை குறிப்பிடுக?

 

1) உத்தியோகத்தர் சுகயீனமடைதல் 

2) குடும்ப அங்கத்தவர் ஒருவர் சுகயீனமடைதல் 

3) குடும்ப அங்கத்தவர் ஒருவர் மரணமடைதல்,

4) மேற்குறிப்பிட்ட யாதேனும் ஒன்று தொடர்பாக இடம்பெறுகின்ற சமய வழிபாடொன்று 

5) உத்தியோகத்தர் ஒருவரின் விவாகம் 

6) உத்தியோகத்தரின் வீட்டில் உள்ள ஒருவர் தொற்றுநோயொன்றால் பீடிக்கப்படல் 

7) உண்மையாகவே கடமையுடன் சம்பந்தப்படாத வழக்கு ஒன்றிற்காக அழைப்பாணை ஒன்றின்மீது நீதிமன்றத்திற்கு சமுகமளித்தல்