DO III Past Paper

Friday, September 10, 2021

வினாவிடைகள் தொடர் 23 - விசேட லீவு Special Leave Q and A 23



தொடர் 23 – விசேட லீவு Special Leave

ஒரு உத்தியோகத்தருக்கு காலம் கடந்த லீவு (Lapse Leave) வழங்க முடியாத காரணம் ஒன்றினை குறிப்பிடுக. 

அ) லீவுகள் முடிவடைந்ததன் பின்னர், நீண்டவொரு காலப் பகுதிக்கு தொடர்ந்தும் பணியாற்ற மீண்டும் சேவைக்குத் திரும்பாத உத்தியோகத்தர் ஒருவருக்குக் காலம் கடந்த லீவு வழங்கப்படமாட்டாது. 

 

ஆ) காலங்கடந்த லீவு பெற்றுள்ள உத்தியோகத்தர் ஒருவர் மீண்டும் சேவைக்குத் திரும்பாது ஓய்வுபெறுமிடத்து அவர் பெற்றுள்ள காலங்கடந்த லீவுகள் சுகவீனம் ஒன்றுக்காக இல்லாதிருப்பின் அதனை அரைச் சம்பள லீவொன்றாக கணக்கிடப்படுதல் வேண்டும்.

 

ஒரு உத்தியோகத்தருக்கு இளைப்பாறுகைக்கு முந்திய லீவு எவ்வாறு வழங்கப்படுகிறது? 

அ) ஒய்வு லீவுகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தகைமையுடைய அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு அவர் ஓய்வு பெறுகின்ற போது அவரால் மீதப்படுத்தப்பட்டுள்ள ஓய்வு / பிணி லீவுகளை இளைப்பாறுகைக்கு முந்திய லீவாக அவருக்கு வழங்க முடியும்.

 

ஆ) மற்றும் இந்த இளைப்பாறுகைக்கு முந்திய லீவுக்கு மேலதிகமாக நடப்பாண்டுக்காக அவருக்கு உரித்துடைய ஓய்வு / பிணி லீவுகளையும் வழங்க முடியும்.

 

இ) தனது பதவியிலிருந்து கேட்டு விலகுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்த ஓர் உத்தியோகத்தர் அவர் அவ்வாவணங்களை சமர்ப்பித்த நாளிலிருந்து ஏதேனும் ஓய்வு லீவுக்கோ அமய லீவுக்கோ தகுதி உடையவராக மாட்டார்.

உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட லீவு (Special Leave) வகைகளை குறிப்பிடுக.

 

அ) திணைக்களத் தலைவரின் தற்றுணிபிற்கிணங்க சேவையின் அவசர தேவைப்பாடுளுக்குட்பட்டு, இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு, தனது சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேற்படாத காலத்திற்கு விசேட லீவொன்றினை வழங்க முடியும்.

 

ஆ) திணைக்களத் தலைவரின் தற்றுணிபின் அடிப்படையில் உத்தியோகத்தர் ஒருவருக்கு அலுவலக நேரத்தினுள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் (Company) ஒன்றில் நடைபெறுகின்ற கற்கை நெறிகளுக்குச் செல்வதற்காக ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேற்படாத வகையில் விசேட லீவுக்கு அனுமதி வழங்கப்பட முடியும். 

இவ்வாறான விசேடலீவு காலமானது மு.ப. 9.30 மணிக்கு அப்பால் விரவிச் செல்லலாகாது. அதேபோன்று பி.ப. 3.15 மணிக்கு முன்னர் ஆரம்பிக்கவும் கூடாது.

 

இ) அமய உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட, அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு தேர்தலொன்றின் (Election) போது வாக்களிக்கச் செல்வதற்குத் தேவைப்படுகின்ற காலமொன்றிற்கு சம்பளக் குறைப்பெதுவுமின்றி விசேட லீவு வழங்கப்பட வேண்டும்.

 

ஈ) அரசாங்கம் அங்கீகரித்த விஞ்ஞான அல்லது தொழில்சார் சங்கமொன்றினால் சர்வதேச மாநாடு ஒன்றின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் அதற்காக வெளிநாடு செல்வதனை அரசாங்கம் அனுமதிக்குமாயின், முழுச் சம்பளத்துடனான லீவினைப் பெற்றுக் கொடுப்பதற்கு செயலாளரொருவருக்கு முடியும்.

 

உ) தொழிற்சங்க உறுப்பினர் (Union Member) ஒருவர் XXV ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட லீவு சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 

ஊ) தொழில் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற ஊழியர் கல்விப் பாடநெறியொன்றில் கலந்து கொள்கின்ற தொழிற்சங்க உறுப்பினர் ஒருவருக்கும் அந்த விரிவுரை நடைபெறும் நாட்களில் விசேட லீவு வழங்கப்பட முடியும்.

 

எ) சில நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் XXIII ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விசேட லீவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

தேர்தலில் வாக்களிப்பதற்காக வழங்கப்படும் விசேட லீவு காலத்தினை குறிப்பிடுக.

சனாதிபதித் தேர்தல் 4 மணித்தியாலங்கள், பாராளுமன்றத் தேர்தல் 4 மணித்தியாலங்கள், மக்கள் கருத்துக் கோடல் 4 மணித்தியாலங்கள், மாகாண சபைத் தேர்தல் 2 மணித்தியாலங்கள், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2 மணித்தியாலங்கள்

 

அனுமதிக்கப்பட்ட லீவுகளின் கீழ் தனது சேவை நிலையத்திலிருந்து வெளியே சென்றிருக்கின்ற எவரேனுமோர் உத்தியோகத்தருக்கு பிரதேசத்தின் யுத்த நடவடிக்கைகளினால் அந்த லீவின் முடிவில் குறிப்பிட்ட திகதியில் தனது சேவை நிலையங்களுக்கு சேவைக்கு சமுகமளிக்க முடியாத சந்தர்ப்பங்களில் விசேட லீவினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை குறிப்பிடுக.

 

இவ்வாறான லீவுகளை அனுமதிக்க முன்னராக லீவினை அனுமதிக்கின்ற உத்தியோகத்தர் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட செயலாளரை உசாவி அப்பிரதேசங்களின் நிலைமையை சான்றுறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அவ்வாறு முடியாத நிலையில் அரசாங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை உசாவுதல் வேண்டும்.

கடமை லீவுடன் அரச உத்தியோகத்தர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கான காரணங்களை குறிப்பிடுக.

 

மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளல், (Conference) 

பொருட் கொள்வனவு (Purchasing) அல்லது வழங்கல் தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றல், 

பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பரீட்சித்தல், 

ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல், 

போன்ற அரசாங்க நடவடிக்கைகளுக்கு மாத்திரம் வெளிநாடு செல்ல கடமை லீவை வழங்க முடியும்.

 

முழுச் சம்பளத்துடனான உள்நாட்டு கற்கை விடுமுறைக்காக கட்டாய சேவைக் காலம் எவ்வாறு கணிப்பிட வேண்டிம்? 

 

அ) ஆறு மாதத்திற்குக் குறைவான காலப்பகுதிக்காக கட்டாய சேவைக்காலமொன்று கிடையாது.

ஆ) ஆறு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலப்பகுதி தொடர்பிலான கட்டாய சேவைக் காலம் 05 (ஐந்து) வருடங்கள் என்ற உச்ச எல்லைக்குட்பட்ட லீவு பெறும் காலத்தைப் போன்று இருமடங்கு காலமாகவிருத்தல் வேண்டும்.

இ) கட்டாய சேவைக் காலத்தினைக் கணிப்பிட வேண்டியது, அண்மித்த முழு மாதத்திற்காகும்.

ஒப்பந்தத்தின் கீழ் கட்டாய சேவைக் காலப் பகுதியினுள் பணியாற்றுவதற்கு ஒரு உத்தியோகத்தர் தவறுமிடத்து, அதற்கான தண்டனை என்ன?

 

கட்டாய சேவைக் காலத்தில் சேவையாற்றாதுள்ள ஒவ்வொரு மாதத்திற்காகவும், உத்தியோகத்தர் சேவையை விட்டு விலகும் போது பெற்றுக்கொண்டிருந்த மாதச் சம்பளத்தில் 1/3 என்ற வகையிலான தண்டப் பணத்தினை அவர் செலுத்த வேண்டும்.

 

கடன் பெற்று மாதாந்த தவணைப்பணம் செலுத்தும் உத்தியோகத்தர் ஒருவருக்கு சம்பளமற்ற லீவு வழங்வதற்கான நிபந்தனைகள் யாவை?

 

அ) அதற்கான மாதாந்த தவணைப் பணத்தினை அறவிட்டுக் கொள்வதற்குப் பொருத்தமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு திணைக்களத் தலைவர் அவருக்கு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக் கொடுக்க முன்னர் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

ஆ) வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக சம்பளமற்ற லீவிற்காக விண்ணப்பிக்கின்ற உத்தியோகத்தர் ஒருவர், அவருக்கு லீவு அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் கடன் தொகையினை முழுமையாக மீளச் செலுத்தி முடித்தல் வேண்டும். (XXIV ஆம் அத்தியாயத்தின் 3.18.1. ஆம் உபபிரிவினைப் பார்க்க)

 

வெளிநாட்டுக் கற்கை மற்றும் / அல்லது தொழிலுக்கான சம்பளமற்ற லீவு வழங்கப்பட முடிந்த காலஎல்லை எவ்வளவு?

1) நிரந்தரமாக்கப்பட்ட ஓர் அரசாங்க உத்தியோகத்தருக்கு வெளிநாட்டில் படிப்பதற்காக அல்லது தொழில் பார்ப்பதற்காக தனது சேவைக் காலத்தில் மொத்தம் ஐந்து ஆண்டு காலத்துக்கு சம்பளமற்ற லீவு வழங்கப்படலாம்.

 

2) நிரந்தரமாக்கப்படாத அல்லது தற்காலிக உத்தியோகத்தர் ஒருவருக்கு இச்சலுகையை வழங்க முடிவது கற்கைக்காக மாத்திரமேயாகும்.

 

3) கற்கைக்காக வழங்கப்படுகின்ற தொடர்ச்சியான காலப்பகுதி மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாததாயிருக்க வேண்டுமென்பதோடு தொழில் பார்ப்பதற்காக மாத்திரம் தொடர்ச்சியான காலப்பகுதி ஐந்து ஆண்டுகள் வரையாகும்.

 

4) எவ்வாறிருப்பினும் கலைமுதுமாணி பட்டப் படிப்பொன்றின் பொருட்டு வெளிநாடு செல்கின்றவர்களுக்கு கலாநிதிப் பட்டம் ஒன்றின் பொருட்டு பயிலுவதற்கு மாத்திரம் 5 வருடங்கள் வரை சம்பளமற்ற வெளிநாட்டு லீவுகளை வழங்கலாம்.

 

5) அரசின் உடன்பாட்டுடன் இலங்கையில் அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம், உலக சுகாதார தாபனம் போன்ற வெளிநாட்டு முகவர் நிறுவனங்களில் தொழில் புரிவதற்காக சேவையில் நிரந்தரமாக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஐந்து (05) வருடங்களுக்கு மேற்படாத காலத்திற்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கலாம்.