DO III Past Paper

Saturday, September 11, 2021

ஆசிரியர்களுக்கான விடுமுறைகள் - வினாவிடைகள் 25 Leaves for Teachers Est Code Q&A 25



ஆசிரியர் (Teacher) ஒருவருக்கு பொதுவாக ஓய்வு லீவுகளைப் பெற்றுக்கொள்ள முடிவது எக்காலப்பகுதியில் என்பதை குறிப்பிடுக.

தாபன விதிக்கோவையின் 12ம் அத்தியாயத்தின் 24ம் பிரிவில் உள்ள உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் தவிர, ஆசிரியர் ஒருவருக்கு பொதுவாக ஓய்வு லீவுகளைப் பெற்றுக்கொள்ள முடிவது பாடசாலை விடுமுறை காலப்பகுதியில் (School Leave Period)  மாத்திரமேயாகும். பொதுவாக ஆண்டின் ஏனைய காலப் பகுதிகளில் அவர்களுக்கு அந்த லீவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துக் கிடையாது.

 

தீவிற்கு வெளியே கழிப்பதற்காக ஆசிரியர் ஒருவருக்கு லீவினைப் பெற்றுக் கொள்கின்ற நிபந்தனைகளை குறிப்பிடுக.

அ) அத்தகைய சம்பளத்துடன் கூடிய லீவினைப் பெற்றுக் கொள்ளக் கூடியது தனியானதும் தொடர்ச்சியானதுமான காலப்பகுதிக்கு மாத்திரமேயாகும்.

ஆ) அவ்வாறு வழங்கப்படுகின்ற முழு அளவிலான சம்பளத்துடனான லீவு (Full Pay Leave) ஆரம்பிக்கப்பட வேண்டியது அனுமதிக்கப்பட்ட முழு லீவுக் காலப்பகுதி ஆரம்பிக்கின்ற போதேயாகும்.

 

தீவிற்கு வெளியே கழிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் லீவினைப் பெற்றுக் கொள்கின்ற போது அதனை கணக்கிடும் முறையினை குறிப்பிடுக.

அந்த லீவுக் காலப் பகுதியினுள் வருகின்ற பாடசாலை விடுமுறை நாட்களின் மொத்தக் கூட்டுத் தொகை, அந்த லீவு ஆரம்பிக்கப்பட்டு பத்து மாதங்களுக்குள் வருகின்ற பாடசாலை விடுமுறை காலப் பகுதிகளின் மொத்தக் கூட்டுத்தொகை என்ற இரண்டில் எது குறைவாகக் காணப்படுகின்றதோ அந்தக் காலப்பகுதிக்கு சமமான ஒரு காலப்பகுதியை முழுச் சம்பளத்துடனான லீவாகப் பெற்றுக் கொள்ள முடியும்,

ஆசிரியர் ஒருவருக்கு மிகவும் அத்தியாவசிய தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது சுகவீனம் காரணமாகவோ லீவு தேவைப்படுகின்றவிடத்து, பெற்றுக்கொள்ளக் கூடிய விடுமுறை கால அளவினை குறிப்பிடுக.

 

அ) திணைக்களத் தலைவரின் தற்றுணிபுக்கு ஏற்ப முழுச் சம்பளத்துடனான அமய லீவுகள் ஒருதடவையில் ஆறு (06) நாட்கள் வீதம் வழங்க முடியும். ஓர் ஆண்டு காலப் பகுதியில் அவ்வாறு பெற்றுக் கொள்ளக்கூடிய உச்ச லீவுகளின் எண்ணிக்கை 21 நாட்களாகும். (Maximum Leave)

ஆ) சுகயீனமொன்று காரணமாக பாடசாலை தவணைக் காலப் பகுதியினுள் 21 நாட்களிலும் பார்க்க அதிகமாக லீவு தேவைப்படுகின்றவிடத்து, எந்தவொரு வருடத்திலும் ஆகக் கூடியது ஒருமாதம் வரை முழுச் சம்பளத்துடனான லீவினை வழங்குவதற்கு திணைக்களத் தலைவருக்கு முடியும்.

இ) அனைத்து லீவுகளும் முடிவடைந்ததன் பின்னர், ஆசியர் ஒருவருக்கு சுகவீனம் காரணமாக பாடசாலைத் தவணையினுள் மேலும் லீவினைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளவிடத்து, ஏதேனும் ஒரு வருட காலப் பகுதியினுள், அடுத்துறும் இரண்டு வருடங்களுக்குரிய மீதமாக உள்ள லீவுகளை திணைக்களத் தலைவர் தனது தற்றுணிபுக்கிணங்க வழங்க முடியும்.

 

ஆசிரியர் ஒருவருக்கு திடீர் விபத்தொன்று காரணமாக அல்லது கடமையாற்றிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட சுகவீனம் ஒன்று காரணமாக லீவு தேவைப்படுமிடத்து  எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும்?

 

தாபன விதிக்கோவை XIIம் அத்தியாயத்தின் 9ம் பிரிவின் கீழ் லீவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

ஆசிரியர்களுக்கான பிரசவ லீவு எவ்வாறு வழங்கப்படும்? 

தாபன விதிக்கோவை XIIம் அத்தியாயத்தின் 18ம் பிரிவின் கீழ் லீவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நாட்சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தர் (Day Pay Officer) ஒருவருக்கான பிணி லீவு வழங்கப்படுவதற்கான ஏற்பாட்டினை குறிப்பிடுக.

 

அ) ஆகக்குறைந்தது இரண்டு வருடங்கள் அவரது சேவையினைக் கருத்தில் கொண்டு முறையான மருத்துவச் சான்றிதழ் (Validity Medical Certificate) ஒன்றினைச் சமர்ப்பிக்குமிடத்து, ஆகக் கூடியது ஓராண்டில் 14 நாட்களுக்கு மேற்படாதவாறு முழுச் சம்பளத்துடான பிணி லீவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆ) உத்தியோகத்தர் ஒருவருக்குரித்தான விடுமுறைகள் முடிவடைந்ததன் பின்னர்,  நோயொன்றுக்காக அவருக்கு மேலும் விடுமுறை தேவைப்படுமிடத்து, கடந்த ஆண்டிலே பயன்படுத்தாது மீதமுள்ள பிணி லீவுகள் இருப்பின் அவற்றையும், எவையேனும் அடுத்துறும் அல்லது அடுத்துறாத இரண்டு வருட காலப் பகுதிக்குரிய காலங்கடந்த பிணி லீவுகள் காணப்படின் அவற்றையும் பெற்றுக் கொடுக்க முடியும்.

இ) இவ்வாறான காலங்கடந்த பிணி லீவுகளின் கூட்டுத்தொகை 28 நாட்களுக்கு மேற்படலாகாது. 

 

நாட்சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தர் ஒருவருக்கான அமைய லீவு (Casual Leave) வழங்கப்படுவதற்கான ஏற்பாட்டினை குறிப்பிடுக.

அ) திணைக்களத் தலைவரின் தற்றுணிபுக்கமைய இந்த லீவு பெற்றுக் கொள்ள முடியும்.

ஆ) 21 நாட்கள் என்ற முழுக் காலப்பகுதி பெற்றுக் கொடுக்கப்படுவது கடந்த 12 மாதக் காலப்பகுதியினுள் குறித்த உத்தியோகத்தர் ஆகக் குறைந்தது 250 நாட்கள் சேவைக்கு சமுகமளித்திருந்தால் மாத்திரமேயாகும். 

இ) சேவைக்கு சமுகமளித்திருந்த நாட்களின் எண்ணிக்கை 250 இலும் பார்க்க குறைவாகவிருக்குமிடத்து அவ்வாறு குறைகின்ற ஒவ்வொரு மூன்றுநாள் காலப்பகுதி அல்லது அதன் ஒரு பகுதிக்கு ஒருநாள் வீதம் அந்த 21 நாளிலிருந்து குறைக்கப்படும்.

நாட்சம்பள உத்தியோகத்தரின் சேவைக்கு சமூகமளித்த நாட்கள் எவ்வாறு கணக்கிடப்படும்?

முழுச் சம்பளத்துடன் சேவைக்கு சமூகமளிக்காத நாட்கள், (பிணி லீவுகள் மற்றும் அமய லீவுகள் உட்பட) பணியாற்றிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட காயமொன்று காரணமாக சமூகமளிக்காத நாட்கள் மற்றும் இரவு சேவையின் பின்னர் சேவைக்கு சமுகமளிக்காமல் விட்ட அடுத்த நாள் ஆகிய இந்நாட்களை கடமைக்கு சமூகமளித்த நாட்களாக கணக்கெடுத்தல் வேண்டும்.

வருடம் ஆரம்பிக்கின்ற போது பன்னிரெண்டு மாதகாலப்பகுதியினை பூர்த்தி செய்யாத உத்தியோகத்தர் ஒருவருக்கு விடுமுறை எவ்வாறு கணக்கிடப்படும்?

 

வருடம் ஆரம்பிக்கின்ற போது பன்னிரெண்டு மாதகாலப்பகுதியினை பூர்த்தி செய்யாத உத்தியோகத்தர் ஒருவருக்கு பன்னிரெண்டு மாத சேவைக் காலமானது செப்தெம்பர் மாதம் 30 ஆந் திகதியாகும் போது பூர்த்தியடையுமாயின், அவருக்கு பன்னிரெண்டு மாத சேவை பூர்த்தியாகின்ற ஆண்டிற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைக்கமைய விகிதாசார லீவினைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

 

 

இளைப்பாறியதன் பின்னர் மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்ட உத்தியோகத்தரின் லீவு எவ்வாறு கணக்கிடப்படும்? 

 

அ) சேவை முறிவேதுமின்றி (Service Break) மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டால் 

(I) மீண்டும் சேவையில் அமர்த்தப்படும் பஞ்சாங்க வருடத்தில் மீண்டும் சேவையில் அமர்த்தப்படுவதற்கு முன்னர் வகித்த பதவியில் எஞ்சியுள்ள லீவுகளும்,

(II) அதற்கு பிந்திய பஞ்சாங்க வருடத்திற்கு தனது பதவிக்கு உரிய லீவும் வழங்கப்படலாம். 

 

ஆ) சேவையில் முறிவொன்று ஏற்பட்டு மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தால்,

1) மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்ட காலத்திற்காக மீண்டும் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட பஞ்சாங்க ஆண்டின் பதவிக்குரிய விகிதசம லீவுகளும்

2) அதற்குப் பிந்திய பஞ்சாங்க வருடத்திற்கு தனது பதவிக்குரிய லீவுகளும் வழங்கப்படலாம்.