DO III Past Paper

Monday, September 13, 2021

அரசாங்கத்துக்கு ஆற்றிய சேவைக்காக கட்டணங்கள் - வினாவிடைகள் 26 Charges for service rendered to the Government

அரசாங்கத்துக்கு எவ்வாறான சேவைகளை ஆற்றியமைக்காகச் கட்டணங்கள் செலுத்தப்படும்?



1) சுங்கத் திணைக்களத்தின் மேலதிக நேரப்படிகள். (Overtime of the Customs Department)

2) பரீட்சை வினாத்தாள்களைத் தயாரித்தல் மற்றும் விடைத்தாள்களைத் திருத்துதல். (Making of Exam Paper and Marking of Exam Papers)

3) உத்தியோகத்தரின் பதவிக்கு மற்றும் கடமைகளுக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற வானொலி தொலைக்காட்சி பிரச்சாரங்களுக்கான கட்டணங்கள். (Charges for campaigns of Radio and Television) 

4) அரசாங்கத்திற்கு ஆற்றப்படும் சேவைகளுக்காகத் தாபன பணிப்பாளரின் முன்னனுமதியுடனான கொடுப்பனவுகள்.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு கடமைகளை ஆற்றியமைக்காகச் உத்தியோகத்தருக்கு வழங்கப்படும் கட்டணங்களின் அளவினை குறிப்பிடுக. (Percentage of Amount)

அ) தாபன விதிக்கோவையின் XXX ஆம் அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளவாறு தனியார் தரப்பினருக்கு யாதேனுமொரு பணியினை நிறைவேற்றுவதற்கு அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படுமிடத்து, கட்டணத்தில் எந்தளவு சதவீதம் திரண்ட நிதியத்துக்கு வைப்புச் செய்யப்படுதல் வேண்டுமென உரிய செயலாளரினால் தீர்மானிக்கப்படும். 

ஆ) அப்போது மீதித் தொகையினை உத்தியோகத்தரின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள முடியும்.

இ) இருந்த போதிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆகக் குறைந்தது ரூ.250/ அல்லது கட்டணம் ரூ.250/- இலும் குறைவாயின் முழுத் தொகையினையும் பயன்பாட்டுக்காக எடுத்துக்கொள்ள குறித்த உத்தியோகத்தருக்கு அனுமதி வழங்கப்படலாம். 

திரண்ட நிதியத்துக்கு வைப்புச்செய்யப்பட வேண்டிய வீதத்தையும், உத்தியோகத்தர் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும் வீதத்தையும் தீர்மானிக்கும் போது செயலாளரினால்  கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் யாவை? 

 

அ) அரசாங்க சேவையிலிருந்து பெற்றுக் கொண்ட விசேட அறிவினைப் பயன்படுத்தாது, சாதாரண கடமைகளுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாதவண்ணம், அலுவலக நேரத்துக்கு அப்பால் ஆற்றிய அலுவலகம் சாராத பணிகளுக்காகக் கிடைக்கப்பெறுகின்ற மொத்தத் தொகையினையும் உத்தியோகத்தரின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வதற்கு இடமளிக்க முடியும்.

ஆ) அரசாங்க சேவையில் இருந்து பெற்றுக் கொண்ட பயிற்சியினைப் பயன்படுத்தி, கடமைப்பணிக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு, அலுவலக நேரத்துக்குப் பின்னர் ஆற்றிய அலுவலகம் சாராத பணிகளுக்காக கிடைக்கப்பெறுகின்ற கட்டணத்தில் 10% திரண்ட நிதியத்தில் வைப்புச் செய்தல் வேண்டும்.

இ) முழுமையாகவே அரச சேவையில் இருந்து பெற்றுக்கொள்ளாத போதிலும், அரச சேவையுடன் தொடர்புடைய அறிவினைப் பயன்படுத்தி கடமைக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு, அலுவலக நேரத்தினுள்ளேயே ஆற்றிய அலுவலகம் சாராத பணிகளுக்காக கிடைக்கப்பெறும் கட்டணத்தில் 10% திரண்ட நிதியத்துக்கு வைப்புச்செய்தல் வேண்டும்.

ஈ) அரசாங்க சேவையில் இருந்து பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் பயன்படுத்தி, கடமைக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு, அலுவலக நேரத்தினுள்ளேயே ஆற்றிய அலுவலகம் சாராத பணிகளுக்காகக் கிடைக்கும் கட்டணத்தில் 25 வீதத்தினை திரண்ட நிதியத்துக்கு வைப்புச்செய்தல் வேண்டும்.

உ) கடமைக்குத் தடைகள் ஏற்படுமிடத்து 25 வீதத்தினை அல்லது அதிலும் கூடிய தொகையினைத் திரண்ட நிதியத்துக்கு வைப்புச் செய்தல் வேண்டும்.

பல்கலைக்கழகம் ஒன்றில் வெளி விரிவுரையாளர் (External Lecturer at a University) ஒருவராகப் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர் ஒருவர் கொடுப்பனவை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும்? 

 

தனது விரிவுரைகளை முழுமையாகவே அலுவலக நேரத்துக்குப் புறம்பாகவும், அவ்வாறே தனது கடமைக்குப் பாதிப்புக்கள் ஏற்படாதவாறும் நடத்துவாராயின், அவருக்கு தாபனப் பணிப்பாளர் அனுமதித்துள்ள கட்டணத்துக்கு ஏற்பக் கட்டணங்களை அறவிடுவதற்கு அனுமதி வழங்க முடியும்.

 

உத்தியோகத்தர் ஒருவரின் சேவைக் காலத்தில் தனிப்பட்ட ஆதனங்களுக்கு களவு அல்லது, தீ அல்லது வேறொரு காரணத்தால் இழப்புக்கள் அல்லது சேதங்கள் ஏற்படுமிடத்து உத்தியோகத்தர் நட்டஈடு கோர முடியுமா?

அ) நட்ட ஈடு கோர உரிமை கிடையாது.

ஆ) ஆயினும், விசேட சந்தர்ப்பங்களில் கருணைச் செயன்முறை ஒன்றென்ற வகையில் அதற்காக நட்டஈடு வழங்கப்படுகின்றமை பற்றி கருத்திலெடுக்க பொது நிருவாக அமைச்சின் செயலாளருக்கு முடியும்.

இ) எனினும் உத்தியோகத்தரின் கவனயீனம் காரணமாக நிகழ்ந்திருக்குமென்றோ அல்லது காப்புறுதியினால் (Insurance) போதியளவிற்கு ஈடுசெய்யப்பட முடியுமென்றோ எண்ண முடிந்த சேதங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படமாட்டாது.

தனிப்பட்ட ஆதனங்களுக்கு இழப்புக்கள் அல்லது சேதங்கள் ஏற்படுமிடத்து உத்தியோகத்தர் நட்டஈடு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய விதத்தினை குறிப்பிடுக.

 

அ) நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்ற ஏதேனுமொரு இழப்பு அல்லது சேதம் தொடர்பாக உடனடியாக முறைப்பாடொன்று பொலிஸில் மேற்கொள்ளப்பட்டிருத்தல்,

ஆ) அவ்விழப்பு அல்லது சேதம் நிகழ்ந்து இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பதாரரின் திணைக்களத் தலைவருக்கு நட்ட ஈட்டு விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

இ) அத்தகைய விண்ணப்பமொன்று, இழப்போ அல்லது சேதமோ இடம்பெற்று ஒருமாத காலத்திற்குள் தாபனப் பணிப்பாளருக்குக் கிடைக்கத்தக்கவாறு அனுப்பப்படுதல் வேண்டும்.

 

இழப்புக்கள் அல்லது சேதங்கள் தொடர்பாக உத்தியோகத்தர் ஒருவரால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.

 

அ) தீ, விபத்து போன்றவற்றால் சேதமொன்று ஏற்பட்டிருப்பின், உரிய அலுவலகத்திற்கு பொறுப்பாக உள்ள உத்தியோகத்தர் அனைத்து சாட்சிகளினதும் ஏதேனும் நட்டஈட்டை உரிமை கோரவுள்ள ஆட்களினதும் சாட்சியங்களைப் பதிவுசெய்து உடனடியாக முழு அளவிலான விசாரணையொன்றை நடாத்துதல் வேண்டும்.

ஆ) அத்துடன் அவர் இடம்பெற்றுள்ள சேதத்தை உடனடியாக ஆராய்ந்து சேதத்தின் அளவை மதிப்பிட்டு திணைக்களத் தலைவருக்கு விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.

இ) கருணைக் கொடை ஒன்று வழங்குவது பற்றி தீர்மானிக்கப்படுமிடத்து, உத்தியோகத்தருக்கு வேண்டிய அத்தியாவசிய உபகரணப் பொருள்களை ஈடு செய்வதற்கு ஏற்ற அளவாகவே அது அமைதல் வேண்டும். 

ஈ) எவ்வாறாயினும், அத்தொகை அவரின் ஒருமாத வேதனத்திற்கு மேற்படலாகாது. (One Month Salary)