DO III Past Paper

Wednesday, September 8, 2021

தலைவர்களிடம் காணப்பட வேண்டிய பண்புகள் - வினாவிடைகள் Characteristics to be found in leaders Q/A 05



தலைவர்களிடம் காணப்பட வேண்டிய முகாமைத்துவ பண்புகள்

 
தலைமைத்துவம் என்பதன் செயற்திறன்களை குறிப்பிடுக.
 
 
அ) தலைமைத்துவம் ஆனது தெளிவான குறிக்கோள்களை அடையும் பொருட்டு மக்களை ஈடுபடுத்தல் மற்றும் வழிநடத்துதல். 
 
ஆ) ஒரு நிறுவனம் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கு அதன் உறுப்பினர்களை முன்கொண்டு வரவும், அர்ப்பணிக்கவும், புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதற்குமான ஆற்றலை பெற்றுக் கொடுத்தல் 
 
இ) தலைமைத்துவமானது முறையொழுங்கோ அல்லது தொழிநுட்ப திறனோ அன்று. ஒரு மனதை திறத்தல் தொடர்பான காரணியாகும். இதன் மூலம் மற்றவர்களுக்கும் உத்வேகமளிக்கின்றது. 
 
ஈ) சிறந்த தலைமைத்துவம் என்பது பின்பற்றக் கூடிய வழிமுறையன்று. அது மனதில் தோன்றுவதுடன், ஏனையோருக்கும் பகிந்தளிக்கின்ற உளவியல் தொடர்பான தொழிற்பாடாகும். 
 
 
சமூகத்தில் தலைமைத்துவத்தை இனங்காணக்கூடிய சந்தர்ப்பங்கள் எவை? 
 
குடும்பத்தில் – பெற்றோர், மூத்த பிள்ளைகள் 
 
பாடசாலையில் – அதிபர், பிரதி அதிபர் 
 
சமூகத்தில் – சமயத்தலைவர்கள், நிறுவனத்தலைவர்கள் 
 
 
தலைவர்களிடம் காணப்பட வேண்டிய பண்புகள் எவை?
 
 
1) தொடர்பாடல் திறன் – முன்வைத்தல், விளக்கமளித்தல், பேச்சாற்றல், ஒழுங்கு முறையை கட்டியெழுப்புதல், செவி மடுத்தல், நிலையான தன்மை 
 
2) பிரச்சினைகளை தீர்க்கும் திறன்- பிரச்சினைகயை உரிய வகையில் அறிந்து கொள்ளல், தகவல் சேகரித்தல், ஆராய்தல், தீர்வினை தேடுதல், நடைமுறைப்படுத்தல் 
 
3) திட்டமிடும் திறன் – குறிக்கோளை முடிவு செய்தல், ஒழுங்கு படுத்துதல், தீர்மானத்திற்கு வருதல். 
 
4) நடைமுறைப்படுத்தும் திறன் – குறிக்கோளை தீர்மானித்தல், குழுக்களை ஏற்படுத்தல்,நிருவகித்தல், இலக்கினை அடைதல். 
 
5) மனித தொடர்புகள் – சமூகமயத்தன்மை, வசீகரம், பரஸ்பரத் தொடர்பு, மற்றும் ஆளிடை தொடர்புகளை பேணுதல். 
 
6) மனவெழுச்சி திறன்கள் – புரிந்துணர்வு, உணர்வு பூர்வமாக செயற்படல், முகமலர்ச்சியுடன் செயற்படல். 
 
 
தலைவர் ஒருவரின் அவசியத்தன்மைக்கான காரணங்கள் எவை?
 
 
1) உரிய இலக்குகளுடன், நிறுவனங்கள் அல்லது நாட்டினை கட்டியெழுப்புதல்
 
2) குறிக்கோள்களை தீர்மானிப்பதற்கும், அவற்றை நோக்கி வழிநடாத்துவதற்கும், 
 
3) உரிய முறையில் திட்டமிடுதல் 
 
4) சவால்களையும், எதிர்ப்புக்களையும் வெற்றி கொள்ளல் 
 
5) சவால்களையும், எதிர்ப்புகளையும் ஜனனநாயக ரீதியாக நிருவகித்தல் 
 
6) பின்பற்றுவோருக்கு வேலைகளை பகிந்தளித்தல் 
 
7) வளங்களை உரிய வகையில் பகிர்ந்தளிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும், 
 
8) முரண்பாடுகளை குறைத்துக் கொள்ளலும், தீர்த்துக் கொள்ளலும். 
 
 
தலைமைத்துவ பாங்குகள் எவை என்பதையும் அவற்றுக்கான உதாரணங்களையும் தருக.
 
 
சர்வாதிகார தலைமைத்துவ பாங்கு
 
1. பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமை 
 
2. மாற்றத்தை விரும்பாமை 
 
3. மிகவும் கொடூரமாக செயற்படுதல்
 
4. தனித்து தீர்மானமெடுத்தல்
 
5. அச்சுறுத்துதல், பீதியை உண்டு பண்ணுதல்
 
6. திறன்களை விருத்தி செய்து கொள்ள வாய்ப்பளிக்காமை 
 
 
முறைகேடான தலைமைத்துவ பாங்கு
 
1. பொது வளங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துதல்
 
2. ஊழல், மோசடி, துஸ்பிரயோகங்களில் ஈடுபடல்
 
3. பிழையான முன்னுதாரணமாக விளங்குதல்
 
4. சட்டதிட்டங்கள், சம்பிரதாயங்களை மதிக்காமை
 
5. தனிப்பட்டவர்களுக்கு கூடுதலான கவனிப்பை செலுத்துதல் 
 
 
பெயரளவிலான தலைமைத்துவ பாங்கு
 
1. மக்கள் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை
 
2. சிறந்த தலைமைத்துவ பண்புகளிலிருந்து நீங்கியவராக இருத்தல்
 
3. தெளிவான குறிக்கோளற்றவராக விளங்குதல்
 
4. மாற்றங்களை ஏற்படுத்த விரும்பாமை
 
5. தம்மை முன்னேற்றுவதற்கு முயற்சித்தல் 
 
 
ஜனனாயக தலைமைத்துவ பாங்கு
 
1. மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலும், மதித்தலும்
 
2. மக்களுடன் மிகவும் நெருக்கமாக பழகுதல் 
 
3. பிரச்சினைகளை செவிமடுத்தலும், தீர்வு காணுதலும் 
 
4. மக்கள் ஆற்றல்களை விருத்தி செய்வதற்கு இடமளித்தல் 
 
5. மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளலும், மதித்தலும் 
 
6. சுதந்திரம், சமத்துவம் என்பவற்றை மதித்தலும், உறுதி செய்தலும். 
ஜனநாயரீதியாக தலைவர் ஒருவரிடம் காணப்பட வேண்டிய பண்புகள் எவை? 
 
 
மனிதநேயம், நேர்மை, சமத்துவம், அர்ப்பணிப்பு, ஆக்கத்திறன், தன்னம்பிக்கை, உறுதிப்பாடு, செவிமடுத்தல், பாரபட்சம் காட்டாமை, சமூகப்பற்று 
 
தலைவரினதும் பின்பற்றுபவரினதும் செயற்பாடுகள் எவை?
 
 
1) தலைவர் குழுவை வழிநடத்துவார்
 
2) பின்பற்றுபவர் தலைவரின் வழிகாட்டலுக்கு ஏற்ப செயற்படுவார்.
 
3) தலைவர் குழுவை வழிநடாத்தும் போது பின்பற்றுபவர் நம்பிக்கையுடன் செயற்படுவதற்கு ஆயத்தமாக இருத்தல் வேண்டும்.
 
4) தலைவர் சரியான இலக்கினை அடைவதற்கு பின்பற்றுபவர் பிரதிபலனை எதிர்பாராது உதவுதல் கடமையாகும்.
 
5) சிறந்த தலைவர் ஒருவராக மாறுவதற்கு சிறந்த பின்பற்றுபவராக செயற்படுதல் வேண்டும்.
 
6) தலைவரும் பின்பற்றுபவரும் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூறல் அடிப்படையில் பிணைக்கப்பட்டுள்ளனர். 
 
 
சிறந்த முகாமையாளர் ஒருவரின் குணவியல்புகள் எவை?
 
 
1) சிறந்த ஒழுங்கமைப்பாளராக இருத்தல்
 
2) சிறந்த தலைமைப்பண்பு உள்ளவராக இருத்தல்
 
3) பொருத்தமாக ஆளணியை தெரிவு செய்வதிலும், பயிற்றுவிப்பதிலும் திறமையுள்ளவராக இருத்தல்
 
4) சொத்துக்களை பெறுவதிலும் பேணுவதிலும் திறமையுள்ளவராக இருத்தல். 
 
5) சுய அபிவிருத்தியை விரும்புவராக இருத்தல்
 
6) திட்டமிடுதல், முன்நிகழ்வுகளையும், எதிர்கால நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல்மிக்கவராக இருத்தல்.
7) பிரதிநிதித்துவம் செய்யும் ஆற்றல் மிக்கவராக இருத்தல் 
 
8) தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபடும் ஆற்றல்.
 
9) கிடைக்கக்கூடிய ஊழியரை செவ்வனே நெறிப்படுத்தும் திறமை
 
10) வேலை செய்யும் ஊழியருக்கு சிறந்த வசதி செய்து கொடுக்கும் ஆற்றல்
 
11) பொருத்தமான உபகரணங்களையும், இயந்திரங்களையும் உபயோகிக்கும் அறிவு
 
12) பாரபட்சமற்ற மனப்பான்மை
 
13) மற்றவரை சிறந்த முறையில் ஊக்குவிக்கும் மனப்பான்மை.
 
 
சிறந்த பொதுக்கள் உறவை பேணுவதற்கான நடவடிக்கைகள் எவை? 
 
 
1) மக்களின் அவசியத்தையுணர்தல்
 
2) தகவல்களை அல்லது கோவைகளை பேணுதல்
 
3) நிறுவனத்தை நாடி வரும் அனைவரையும் பொதுமக்கள் என்ற ரீதியல் பேணுதல்
 
4) மக்களுடன் பொறுமை மரியாதையுடன் உறவாடல்
 
5) எப்போதும் முடிந்தளவு விரைவாகவும், இலகுவாகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றல்
 
6) பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கேட்டறிதல்
 
7) பொதுமக்களின் கருத்தை மதித்தல்
 
8) பொதுமக்களின் முறைப்பாட்டை விசாரித்து ஏற்ற நடவடிக்கைகளை எடுத்தல்
 
9) கருத்தரங்கு, கூட்டங்களை நடாத்துதல்
 
10) மக்களுக்கு முன்கூட்டியே அறிவித்தல்
 
11) நேரடித் தொடர்பை மக்களுடன் பேணுதல்
 
 
பொதுமக்கள் தொடர்பினை சிறந்த முறையில் பேணக்கூடிய வழிவகைகள் எவை? 
 
 
1) கடிதத்தொடர்புகள் விரைவாகவும், தெளிவாகவும், மரியாதையுடனும் மேற் கொளளப்படல்
 
2) நேர்முக உரையாடல்கள் மரியாதையாகவும், பொறுமையாகவும், விளங்கிக்கொள்ளும் விதத்திலும் இடம்பெறல்
 
3) அலுவலகத்திற்கு சமூகமழிப்பவர்கள் தாமதிக்க விடக்கூடாது.
 
4) தொலைபேசி அழைப்புக்களுக்கு கௌரவமாக பதிலளித்தல்
 
5) பொதுமக்கள் விசாரணைப்பிரிவு ஒன்றினை அலுவலகத்தில் ஏற்படுத்துதல்
 
6) அலுவலகத்தல் பொதுமக்கள் தொடர்பு அலுவலர் ஒருவர் நியமித்தல்
 
7) வேலைகள், சேவைகள் பற்றி பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்தல்
 
8) திணைக்கள மாற்றங்கள் தொடர்பாக பொதுமக்களிடமும் அபிப்பிராயம் கோரல்
 
9) அலுவலகம் அழகாகவும் ஒழுங்காகவும் அமைதல்.
 
 
வேலை ஆய்வினால் ஏற்படும் நன்மைகள் எவை? 
 
 
1) வேலையியக்கத்தை திட்டமிடுதலும், அட்டவணைப்படுத்தலும் சாத்தியமாகும். 
 
2) ஊழியர் தேவையையும், உபகரணத் தேவையையும் தீர்மானிப்பதற்கு உதவும்.
 
3) ஊழியர்களுக்குரிய வேலையை தீர்மானிப்பதற்கு உதவும்.
 
4) சிறந்த முறையொன்றை தெரிவு செய்வதற்கு துணைபுரியும். 
 
5) வேறு இடங்களில் செய்யப்படும் அதேயளவு வேலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க உதவும்.
 
6) தாமதங்களை நீக்குவதற்கு துணைபுரியும்
 
7) ஊக்குவிப்பு திட்டங்களை ஏற்படுத்துவதற்கு வசதியாக இருக்கும் 
 
8) செலவினக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும்.