DO III Past Paper

Saturday, September 4, 2021

திணைக்கள கடன்கள் - வங்கிகள் மூலம் சொத்துக்கடன் வழங்கல் - Department Loan - Property loans through banks Q&A 16



அலுவலர் ஒருவர் திணைக்களத்தில் மிதிவண்டி (Push Bicycle) ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கான கடன் பெற்றுக் கொள்வதற்கான தகைமைகளை குறிப்பிடுக.

அ) தனது வதிவிடம் மற்றும் கடமை புரியும் இடம் என்பவற்றிற்கிடையே பயணம் செய்வதற்கு துவிச்சக்கர வண்டி ஒன்று தேவைப்படுகின்ற உப நிலை வகுப்பைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் அல்லது கனிஷ்ட ஊழியர் வகுப்பைச் சேர்ந்த நிரந்தர உத்தியோகத்தர் ஒருவர்.

 

மிதிவண்டி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக திணைக்களத்தினால் வழங்கப்படும் கடன்தொகை எவ்வளவு? (Loan Amount for Purchasing of Push Bicycle)

 

ரூ. 6000 அல்லது மிதி வண்டியின் பெறுமதி என்ற இரண்டில் குறைந்த தொகை எதுவோ அது

 

மிதிவண்டி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக திணைக்களத்தில் கடன் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய பிணையாளர்களின் தகைமைகள் என்ன? 

 

உத்தியோகத்தருக்கு பத்து வருடங்களுக்குக் குறையாத ஓய்வூதிய உரித்துடைய சேவையொன்றிருப்பின், பிணையாளர் ஒருவர் தேவைப்படமாட்டார். அத்தகைய சேவைக்காலமொன்று காணப்படாவிடத்து 5 வருடங்களுக்குக் குறையாத ஓய்வூதிய உரித்துடைய அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர்.

 

“இடுக்கண்” கடன்” வழங்குவதற்கான காரணங்களை குறிப்பிடுக.

 

1) தீ, வெள்ளப் பெருக்கு அல்லது அத்தகைய வேறு இயற்கை அனர்த்தங்கள் மூலம் ஏற்படக்கூடிய இடுக்கன்களின் போது நிவாரணம் வழங்கல், 

 

2) மருத்துவச் செலவுகள் (Medical Expenditure), மருத்துவமனைக் கட்டணங்கள் அல்லது நோயாளர் பராமரிப்பு இல்லக் கட்டணங்கள், (Medical Expenditure)

 

3) உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் சுகயீனம் காரணமாக கடன்படுதல். 

 

4) உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் சுகயீனத்திற்காக செலவு செய்தமை காரணமாக 

5) வீட்டு வாடகை செலுத்த முடியாமற் போனமையால் வீட்டு வாடகை நிலுவையாக இருத்தல். (House Rent) 

 

6) உத்தியோகத்தரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணச் செலவினங்கள்,

 

7) உத்தியோகத்தர் அல்லது அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்ற, உத்தியோகத்தருக்கு அல்லது அவரது வாழ்க்கைக் துணைக்குச் சொந்தமான வீடொன்றின் அத்தியாவசிய திருத்தப் பணிகள், (House Repairs) 

 

8) திணைக்களத்தில் கடமையின் நிமித்தம் மோட்டார் வாகனமொன்றினைப் பயன்படுத்த முடியுமெனக் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் வாகனத்தின் அத்தியாவசிய திருத்தப் பணிகள்,.(Motor Vehicle Repairs)

 

9) மலேரியா மற்றும் யானைக்கால் நோயிலிருந்து பாதுகாப்புப்பெற நுளம்பு வலைகளைக் கொள்வனவு செய்வதற்காக,

 
10) தனது பொறுப்பில் தங்கி வாழ்கின்ற பிள்ளையொன்றிற்கு (கணித உபகரணங்கள், அடிமட்டம் மற்றும் நிறுவை உபகரணங்கள் உள்ளிட்ட) பாடசாலைப் புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்காக, (School Book)
 
 
11) உத்தியோகத்தருக்கு உடனடியாக வதிவதற்கான வீடொன்றினை வாடகைக்கு எடுப்பதற்காக செலுத்தப்பட வேண்டிய வீட்டு வாடகை முற்பணம். (Advance for House Rent)
 
 
12) உத்தியோகத்தர் விண்ணப்பித்துள்ள வீட்டுக் கடனொன்று தொடர்பாக அரசாங்க நிறுவனமொன்றிற்குச் செலுத்த வேண்டிய செலவுகள்.
 
 
13) உத்தியோகத்தரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெளிநாடு ஒன்றிற்கு செல்லும் போது விமானப் பயணச் சீட்டினை வாங்குவதற்கு. (Flight Ticket)
 
 
14) கணினி இயந்திரங்கள் மற்றும் தேவையான உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்தல். (Computer and Parts)
 
 
15) திணைக்களத் தலைவரின் கருத்துப் படி நிதியுதவிகளை வழங்கத் தகைமையுள்ள வேறு விடயங்கள்
 
 
இடுக்கண் கடன் வழங்குவதற்கான தகைமைகளை குறிப்பிடுக.
 
 
நிரந்தரமானதும், ஓய்வூதிய உரித்துடையதுமான உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் (XXIV அத்தியாயத்தின் 10.3.1 ஆம் உப பிரிவிற்குட்பட்டு) ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்கின்ற நிரந்தர அல்லது தற்காலிக உத்தியோகத்தர் ஒருவர்.
 
 
“இடுக்கண்” கடனாக வழங்கப்படும் கடன்தொகை எவ்வளவு?
 
 
மூன்று மாத சம்பள உச்ச எல்லைக்குட்பட்ட வகையில், உண்மையாகவே செலவிட்ட அல்லது செலவிட வேண்டியேற்படுகின்ற தொகை (Maximum 3 month salary) 
 
 
 
இடுக்கண் கடன் வழங்குவதற்கான பிணையாளர்களின் தகைமைகளை குறிப்பிடுக.
 
 
 
அ) 10வருடங்களுக்குக் குறைந்த சேவைக்காலத்ததையுடையவர்களும் நிரந்தர, ஓய்வூதிய உரித்துடையவர்களுமான உத்தியோகத்தர்கள் தொடர்பில் 10 வருடங்களுக்கு குறையாத சேவைக் காலத்துடன் நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய ஒரு பிணையாளி அல்லது, 
 
 
ஆ) 5 வருடங்களுக்குக் குறையாத சேவைக்காலத்தைக் கொண்ட நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய இரு பிணையாளிகளையோ முன்வைத்தல் வேண்டும்.
 
 
இ) 10 வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக் காலத்துடன் நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய உத்தியோகத்தர்களுக்கு பிணையாளிகள் அவசியமில்லை.
 
 
ஈ) அக்ரஹார காப்புறுதி முறையின் கடன் பாதுகாப்புக் காப்புறுதிக்காக பங்களிப்புச் செலுத்தியுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பிலாயின் பிணையாளர்களை முன்வைப்பதற்குப் பதிலாக அந்தக் கடன் பாதுகாப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். (Agrahara Loan Security Insurance) 
 
 
வங்கிகள் மூலம் சொத்துக் கடன் பெற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களை குறிப்பிடுக.
 
 
1) வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான தகுந்த ஒரு காணியைக் கொள்வனவு செய்ய. (Purchasing of Land) 
 
 
2) கடன் விண்ணப்பதாரருக்குச் சொந்தமான காணியொன்றில் புதிதாக ஒரு வீட்டை நிர்மாணிக்க. 
 
 
3) வீட்டுடனான ஒரு காணியை அல்லது மாடி வீடொன்றைக் கொள்வனவு செய்ய. 
 
 
4) நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு வீட்டைத் திருத்தி அமைப்பதற்கும் புதிதாக ஒரு பிரிவை நிர்மாணிக்கவும்.
 
 
5) பகுதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றின் மீதி வேலைகளை முடிவுறுத்த, 
 
 
 
6) வீடொன்றை நிர்மாணிக்கப் பொருத்தமான காணியொன்றைக் கொள்வனவு செய்து அதில் வீடொன்றைக் கட்ட.
 
 
7) கடன் விண்ணப்பதாரருக்குரிய காணியொன்றில் புதிதாக வீடொன்றைக் நிர்மாணிக்க / நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றைத் திருத்தியமைக்க புதிதாக ஒரு புதிய பகுதியைக் கட்ட / பகுதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றின் எஞ்சியுள்ள பணிகளை முடிக்க.
 
 
8) சுவர்ணபூமி / ஜயபூமி அன்பளிப்புப் பத்திரத்தினூடாக வழங்கப்பட்டுள்ள காணியொன்றில் வீடொன்றை நிர்மாணிக்க நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றைத் திருத்தியமைக்க / புதிதாக ஒரு புதிய பகுதியைக் கட்ட / பகுதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றின் எஞ்சிய பணிகளை முடிக்க.
 
 
9) அரசாங்கத்தினால் அல்லது தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்படும் வீடமைப்புக் கருத்திட்டமொன்றிலிருந்து வீட்டு அலகொன்றை அல்லது தொடர்மாடி வீட்டுக் கருத்திட்டமொன்றிலிருந்து வீட்டு அலகொன்றை கொள்வனவு செய்தல். – 08/2005(X) (2013.01.31)
 
 
வங்கி மூலம் சொத்துக்கடன் பெற்றுக் கொள்வதற்கான தகைமைகளை குறிப்பிடுக.
 
 
1) அரச சேவையை அல்லது மாகாண அரசாங்க சேவையைச் சேர்ந்த ஓர் உத்தியோகத்தராக இருத்தல் வேண்டும்.
 
 
2) ஓய்வூதிய உரித்துடைய ஐந்து வருட சேவைக் காலத்துடன் கூடிய பதவியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஓர் உத்தியோகத்தராக இருத்தல் வேண்டும்.
 
 
ஐந்து 05 ஆண்டுசேவைக் காலமொன்றுடன் ஓய்வூதிய சம்பளத்துடனான பதவியொன்றில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளவரும் புதிய பதவியொன்றில் நியமனம் பெற்று அப்புதிய பதவியில் நிரந்தரமாக்கப்படாதவருமான உத்தியோகத்தர் அவரது முந்திய பதவியில் கிடைக்கவிருந்த மட்டுப்பாடு வரை ஆதனக் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
 
 
3) கணவனும் மனைவியுமாகிய இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்களாயின் இருவரும் தனித்தனியாகக் கடன் பெற்றுக் கொள்ளத் தகுதியுடையவர்களாவர்.
 
 
கணவனும் மனைவியுமாகிய இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்களாயின் அதே வங்கியிலிருந்து இணைந்த கணக்கொன்றின் கீழ் கடனைப் பெற்றுக் கொள்ளலாம்.
 
 
4) கடன் விண்ணப்பதாரரின் வாழ்க்கைத் துணை அரசாங்க உத்தியோகத்தரல்லாவிடினும், வாழ்க்கைத் துணைக்குரிய காணியொன்றில் வீட்டைக் கட்டுவதற்காக இணைந்த கணக்கொன்றின் கீழ் கடனைப் பெற்றுக் கொள்ள முடியும். 
 
 
5) ஐந்து வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலமொன்றைக் கொண்ட ஓய்வூதிய உரித்துள்ள முப்படையின் தொண்டர் படைக்குரிய உத்தியோகத்தர் / வேறு உத்தியோகத்தர் ஒருவராதல் வேண்டும்.
 
 
6) ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத தொடர்ச்சியான சேவைக் காலமொன்றைக் கொண்ட வயது 55 வருடங்கள் வரை சேவையிலீடுபட அவகாசமுள்ள உத்தியோகத்தரொருவரென திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்படுகின்ற பொலிஸ் உபசேவை உத்தியோகத்தர் ஒருவராதல்.
 
 
7) ஆதனக் கடனைப் பெற்றுக் கொள்ள முடிவது சேவைக் காலத்திற்குள் ஒரு தடவை மாத்திரமேயாகும். 
 
 
வங்கி மூலம் வழங்கப்படும் சொத்துக்கடன் அறவீட்டு கால எல்லையினை குறிப்பிடுக
 
காணிக் கடன் அறவீட்டுக் காலப்பகுதி ஆகக் கூடிய காலம் 25 வருடங்கள் அல்லது உத்தியோகத்தருக்கு 60 வயது பூர்த்தியாதல் ஆகிய இரண்டில் முன்னராக வருகின்ற காலத்திற்குள் முழு மொத்தக் கடன் தொகையையும் தீர்த்துக் கொள்ளக் கூடியதாக மீள் அறவீட்டுக் காலப்பகுதியைத் தீர்மானித்தல் வேண்டும்.
 
 
வங்கி மூலம் வழங்கப்படும் சொத்துக்கடன் தொகையினை குறிப்பிடுக.
 
உத்தியோகத்தருக்கு உரிமை பெற முடிந்த ஆகக் கூடிய கடன் தொகை உத்தியோகத்தரின் படிகள் தவிர்ந்த 7 ஆண்டுகளின் திரட்டிய சம்பளம் அல்லது 30 இலட்சம் ரூபா ஆகிய இரண்டிலும் குறைந்த தொகை.