DO III Past Paper

Tuesday, September 7, 2021

தலைமைத்துவம் வினாவிடைகள் Leadership 04



தலைமைத்துவத்தின் அடிப்படை தேவைகள் (Basic of Leadership) எவை?

1) சட்டபூர்வமான தேவை

2) அமைப்பிற்கு இருக்கும் அந்தஸ்து

3) அமைப்பிற்குள் எல்லோருக்கும் மேலான உயர்ந்த இடம்

4) பதவியின் தன்மை

5) கல்வித்தகைமை

6) நிபுணத்துவம்

7) அமைப்பு பற்றிய விசேட அறிவு

8) பிறப்புரிமை

9) வெளியுலக மரியாதையும், கௌரவமும்

 

ஒரு அமைப்பிற்குள்ளே ஒரு தலைமைத்துவம் அமைவதற்கு சாதகமாய் அமையும் காரணங்கள் எவை?

 

1) வாய்ப்பு

2) அமைப்பிற்குள் இருப்பவருக்கு பொருத்தமான வாய்ப்பு

3) ஒழுங்கமைத்தலில் உள்ள அனுபவம்

4) நிறுவனத்திற்கு போதிய பணமில்லாமை

5) நிறுவனம் பற்றிய ஒரு தோற்றப்பாட்டை காட்டுவதற்கு

6) நிறுவனத்தில் உள்ளவர்களிடையே தெரிந்தவராக இருத்தல்

7) நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினரை அமர்த்துதல்

8) செல்வாக்கு,

 

தலைமைத்துவத்தின் தன்மைகள் (Nature of Leadership) எவை?

 

1) எதேச்சாதிகாரத் தலைமைத்துவம்

2) ஜனநாயகத் தலைமைத்துவம்

3) முழுமையான சுதந்திர தலைமைத்துவம்

தலைமைத்துவத்தின் கடமைகள்  (Duties of a leadership) எவை?

 

1) கிடைக்கக்கூடிய வளங்களை அடையாளம் காணல்

2) அவ்வளங்களை பாவிப்பதில் உள்ள தடைகளை அறிந்து அகற்றுதல்

3) மதிப்பிடுதலும், எதிர்காலத்தை முன்னுணர்தலும்

4) வரவு செலவு திட்டத்தை தயாரிததல்

5) செய்து முடிக்க வேண்டிய வேலையைத் திட்டமிடுதல்

6) வேலையை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை வகுத்தல்

7) வேலை ஒழுங்காக நடைபெற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தல்

8) தேவையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஏற்பாடுகளைச் செய்தல்

9) வேலையின் கஸ்டமான பகுதிகளை இனம்காணல்

10) திட்டமிட்ட வேலைகளையும், பொறுப்புக்களையும் பகிர்ந்தளித்ல்

11) ஊழியரைப் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுத்தல்

12) குறிக்கோளை மீள் பரிசோதனை செய்தல்.

 

தலைமைத்துவத்தின் குணவியல்புகள் (Leadership Qualities) எவை? 

 

1) ஒழுங்கமைப்பு ஆற்றல்

2) வேலைப்பகிர்வில் ஆர்வம்

3) ஆளணியை தெரிவு செய்தல், பயிற்றுவித்தலில் திறமை

4) தொடர்பாடும் திறமை

5) தன்னம்பிக்கை

6) நேர்மை

7) நுண்ணறிவு

8) பக்கம் சாராமை

9) ஊக்குவிக்கும் திறமை

10) அதிகாரக் கையளிப்பில் விருப்பம்

11) அனுபவம்

12) நிபுணத்துவம்

13) நல்ல சிந்தனை

14) மற்றவரால் மதிக்கப்படுதல்

15) நம்பிக்கைக்குரியவராயிருத்தல்

16) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை

17) சொத்துக்களை பேணுவதில் திறமை

18) சுய அபிவிருத்தியில் ஆற்றல்

 

ஊக்குவித்தலில் அடங்கும் மூன்று கோட்பாடுகள் எவை?

 

1) தேவைக்கோட்பாடு

2) திருப்திக் கோட்பாடு

3) ஊக்குவித்தல் கோட்பாடு

மாஸ்கோவின் தேவைக் கோட்பாடு பற்றி தெளிவு படுத்துக?

 

மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே வேலை செய்கின்றனர். அவர்களின் தேவைகள் என்ன என்பதையறிந்து அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கையெடுக்கலாம்.

இவரின் கோட்பாட்டின்படி பூர்த்தியடைய வேண்டிய மனிதனின் தேவைகள்

1. உடல் ரீதியான தேவை

2. பாதுகாப்பு தேவை

3. மற்றவரால் மதிக்கப்படும் தேவை

 

திருப்திக் கோட்பாடு தொடர்பாக பேஸ்பெக் கூறியிருப்பது என்ன?.

 

ஒரு திருப்தியடைந்த ஊழியன் உற்பத்தித்திறன் மிகுந்த ஊழியன்.

ஒரு நிறுவனத்தில் அதிருப்தியடைந்த ஊழியர்கள் அடிக்கடி விலகலாம் அல்லது வேலையில் அக்கறை காட்டாமல் இருக்கலாம். எனவே நிறுவனத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஊழியருக்கு திருப்தியளிக்கக்கூடிய செயற்பாடுகளை கையாள வேண்டும்.

 

ஊக்குவித்தல் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் எவை?

 

அ) ஒருவர் செய்யும் மேலதிக சக்திக்கேற்ப வெகுமதியளித்தல்.

ஆ) ஒருவரின் செயல்திறனை அளவிட்டு அதற்கேற்ப ஊழியரைக் கௌரவித்தல்

இ) ஊழியர் விரும்பும் வெகுமதியை அளித்தல்.

 

ஊக்கவிப்பு முறைகள் எவை?

 

1) வேலைகளைக் கணித்தல்

2) சம்ளங்களும் கூலிகளும்

3) ஊக்குவிப்புக்கான வேறு விசேட திட்டம்

4) பிரச்சினைகளை அடையாளம் காணல்

5) சுகாதார வசதிகள்

6) ஊழியர் குறிக்கோளை நிர்ணயித்தல்

7) ஊழியரின் சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை இனம்காணல்.

 

முகாமையாளர் தனது ஊழியரை ஊக்குவிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எவை? (management)

1) கூடுதலான சம்பளத்தை உறுதி செய்தல் அல்லது ஏனைய வெகுமதிகள்

2) ஊழியருக்கு வேலையில் பயிற்சியளித்தல்

3) ஊழியர்கள் ஒருவரில் ஒருவர் தங்கி வேலைசெய்யும் நிலையை ஏற்படுத்தல்

4) ஊழியர் ஒருவரின் செயற்திறனை மதிப்பீடு செய்து முன்னேற்றக் கூடிய வழிவகைகளை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தல்

5) ஊழியரை பாதிக்கக்கூடிய தீர்மானங்களை முன்கூட்டியே அறிவித்தல்.

6) பதவியுயர்வு திட்டம், நடைமுறைப்படுத்தல் (Promotion)

7) அலுவலக தள அமைப்பையும் சுற்றாடலையும் வசதியாக வைத்திருத்தல்.

 

ஊழியருக்கு மனக்குறைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?

 

1) பாகுபாடு,

2) கூடுதலான தண்டனைகள்

3) ஓப்பந்த நடவடிக்கை முறைகளை மீறுதல்

4) பதவி நீக்கம் செய்தல்

5) வேலைப்பகிர்வு

6) வினைத்திறமையை அளவிடுதல்

7) மேலதிக நேர வேலையை அளவிடுதல்

8) முதுமுறையை தீர்மானித்தல்

 

மாநாடு நடாத்தும் போது கவனிக்க வேண்டிய படிமுறைகள் எவை?

 

1) மாநாட்டின் குறிக்கோளை தெளிவாக அறிந்திருத்தல்

2) பங்கு கொள்வோரின் தரம், அறிவு போன்றவற்றை அறிந்திருத்தல்

3) மாநாட்டின் நோக்கத்தை பங்கு கொள்வோருக்கு விளக்குதல்

4) பங்கு பற்றுவோருக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துதல்.

5) கருத்துப் பரிமாற்றத்திற்கு வகைசெய்து கொடுத்தல்

6) பிரச்சினையேற்படும் போது சுருக்கமாக தீர்த்துவைத்தல்

7) விவாதிக்கப்படும் விடயம் பற்றி விழிப்பாக இருத்தல்

8) பங்குபற்றுவோரின் கருத்துக்களை விரும்பி செவிமடுத்தல்

9) தடைகளை கவனமாக தவிர்த்துக் கொள்ளல்

10) பங்குபற்றுவோர் கலந்துரையாட இடமளிக்க வேண்டும்.

அதிகார கையளிப்பின் (Delegation of Power) போது அதிகாரத்தை கையளிப்பவரால் கருத்திற் கொள்ள வேண்டிய அம்சங்கள் எவை?

 

1) கையளிக்கப்பட வேண்டியவரின் அனுபவம்

2) முகாமையறிவு

3) நுண்ணறிவு

4) கீழமைந்தோரின் திறமை

 

அதிகாரம் கையளித்தலின் அவசியம் என்ன?

 

1) வேண்டப்படும் சகல வேலைகளையும் முகாமையாளர் ஒருவரோ அல்லது மேற்பார்வையாளர் ஒருவரோ தனித்து செய்ய முடியாது.

2) ஒரு முகாமையாளரிடம் ஒரு குறிப்பிட்ட சிறப்புத்திறமை இருந்த போதிலும் சிலவேளைகளில் மற்றொருவர் அவரிலும் சிறப்பாக செய்ய முடியும்.

3) எவ்விடத்தில் நடவடிக்கை நிகழ்கிறதோ அவ்விடத்தில் தீர்மானத்தையெடுக்க கையளிப்பு வழிவகுக்கின்றது.

4) ஒரு பணியாளரிடம் பெருமளவு தற்றுணிபு முயற்சிகளை வழங்கும் போது நிறுவனத்தின் அலுவல்களில் தன்னை முற்றாக அர்ப்பணிக்கச்செய்யும்.

 

அதிகாரக் கையளிப்பு தோல்வியுறக் காரணம் என்ன?

 

1) கையளிப்பு பற்றிய நுணுக்கத்தை கையளிப்பவரும், கையளிப்பை பெறுபவரும் தெளிவாக அறிந்து கொள்ளாமை

2) கட்டுப்பாடு பற்றி சில மேற்பார்வையாளர்களிடமுள்ள அளவுக்கு மிஞ்சிய ஆர்வம். இதன் காரணமாக கீழ் அமைந்தோருக்கு ஏற்படும் மனத்தாக்கல்கள்

3) கீழ் அமைந்தோர் செயற்பாடு சம்பந்தமான அறிவுறுத்தல் இல்லாமை

4) கீழமைந்தோருக்கு பயிற்சி இல்லாமை

5) தனக்கு கீழ் கடமை புரிபவரிடம் மேலதிகாரிக்கு நம்பிக்கையில்லாமை

6) மேற்பார்வையாளர் மத்தியில் தன்னம்பிக்கை இல்லாமை

7) தனக்கு விரும்பிய வேலைகளை தம்மிடம் வைத்திருக்க வேண்டுமென மேலதிகாரியின் விருப்பம்

8) தாம் விரும்பியவற்றை பெறவேண்டுமென்ற கீழமைந்தோரின் விருப்பம்

9) கீழமைந்தோரிடையே உள்ள உறவுமுறையில் தெளிவு இல்லாமை

10) வேலைக்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுக்க தவறுதல்

11) முறையான தொடர்பு இல்லாமை

கையளித்தலை வெற்றி பெறச் செய்வதற்கான முக்கிய அம்சங்கள் எவை?

 

1) கையளிப்பு கோட்பாடு பற்றிய தெளிவும், அதன்மீது நம்பிக்கையும்.

2) அடைய வேண்டிய நோக்கம் சம்பந்தமான கருத்திணக்கம்

3) மற்றவர்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற மேற்பார்வையாளரிடமுள்ள ஆர்வம்

4) பரஸ்பர நம்பிக்கை

<

5) மேற்பார்வையாளரிடமுள்ள தன்னம்பிக்கை

6) பொறுப்பை பெறுபவரிடமுள்ள தன்னம்பிக்கை

 

அதிகாரக் கையளிப்பு விதிகள் எவை? 

 

1) கையளித்தலின் நோக்கத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளல்

2) நோக்கத்தையும் குறிக்கோளையும் தெளிவாக வரையறை செய்தல்

3) கீழமைந்தோரின் குணநலன்களை, வல்லமையையறிந்து கொள்ளல்

4) எதைக் கையளிக்கலாம், எதைக் கையளிக்க முடியாது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுதல்

5) செயல்திறன் பற்றிய கருத்திணக்கம்

6) பயிற்சி திட்டமொன்றை உருவாக்கி கீழமைந்தோருக்கு பயிற்சியளித்தல்

7) கையளித்தலின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்தல்

8) ஒருமித்த குழு மனப்பான்மையை பேணுதல்

9) வேலையின் அளவுக்கு ஏற்ப கையளித்தலை செய்தல்