DO III Past Paper

Sunday, September 5, 2021

சலுகை வட்டி அடிப்படையிலான சொத்துக்கடன் Offer interest based Property loan - E Code Q and A -17



அரச அலுவலர்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் வங்கியினால் வழங்கப்படும் சொத்து கடனுக்கான வட்டி வீதத்தினை குறிப்பிடுக. (Interest Rate)



அரச அலுவலர்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் வங்கியினால் வழங்கப்படும் சொத்து கடனுக்கான அறவீடு (Loan Recovery) எவ்வாறு மேற்கொள்ளப்படும்?

 

அ) வட்டி கணிப்பிடப்படுவது குறைந்து செல் கடன் நிலுவையின், சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டி அடிப்படையிலாகும்.

 

ஆ) உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிடப்படுகின்ற கடன் தவணைக் கட்டணமும் வட்டி உள்ளடங்கிய மாத தவணைக் கட்டணமும் (Monthly Instalment) மொத்தக்கடனைச் செலுத்தி முடியும் வரை தவணைக் கட்டணங்களாக அறவிடப்படல் வேண்டும்.

 

சலுகை வட்டி அடிப்படையில் வங்கியினால் (Bank) வழங்கப்படும் சொத்து கடனுக்கான பிணை எவ்வாறு வழங்கப்பட வேண்டும்?

 

உரிய விடயங்களுக்கான கடன் கோருகின்ற சொத்துக்களை வங்கியில் அடகு வைத்தல் (Mortgage)  வேண்டும். 

 

சலுகை கடன் தவணைக் கட்டணங்களினை அறவீடு செய்து வங்கிக்கு பண அனுப்பீடு செய்யும் விடயத்தில் திணைக்களத்தின் செயற்பாட்டினை குறிப்பிடுக. (Bank Instalment)

அ) உத்தியோகத்தர் சேவையாற்றுகின்ற நிறுவனமானது வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட கடன் தவணைக் கட்டணம் உத்தியோகத்தரின் சம்பளத்திலிந்து கழிக்கப்படுகின்ற வட்டி மற்றும் அரசாங்கத்தால் தாங்கிக் கொள்ளப்படுகின்ற வட்டி என்பவற்றை மாதாந்தம் உரிய வங்கிக்கு அனுப்புதல் வேண்டும்.

 

ஆ) உத்தியோகத்தர் சார்பில் அரசாங்கம் தாங்கிக் கொள்கின்ற வட்டித் தொகையினை அரசாங்கத்தின் செலவாக பொதுத் திறைசேரியின் ஆலோசனைகளின் பேரில் கணக்கில் வைத்தல் வேண்டும்.

 

இ) ஏதேனும் காரணத்தினால் உத்தியோகத்தருக்குச் சம்பளம் செலுத்தப்படாத சந்தர்ப்பத்தில் நிறுவனத் தலைவர்கள் சலுகை கடன் தவணைக் கட்டணம் அறவிடப்படாமை பற்றி உரிய வங்கிக்கு தாமதிக்காமல் அறிவித்தல் வேண்டும்.

 

ஈ) பதவி வெறிதாக்கலின்போது அல்லது சேவை நீக்கத்தின் போது கடன் மீதி தொடர்பில் வங்கியின் பொது ஒழுங்கு விதிகளைக் கையாளுதல் வேண்டும்.

 

உ) பணித்தடை, பதவி நீக்கம், பதவி துறப்பு அல்லது சேவையிலிருந்து ஓய்வு பெறலின் போது கடன் விண்ணப்பதாரர் தவணைக் கட்டணங்களை வங்கியின் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக அரசாங்கம் தாங்கிக் கொள்கின்ற வட்டியின் வித்தியாசம் உள்ளிட்ட வகையில் தனிப்பட்ட முறையில் வங்கிக்குச் செலுத்துதல் வேண்டும்.

 

ஊ) பணித் தடைக்குள்ளான உத்தியோகத்தர் ஒருவர் மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டால் பணித்தடைக்குள்ளான காலப் பகுதிக்குள் அவரால் செலுத்தப்பட்ட தவணைக் கட்டணங்களுக்குரிய கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு மீள் நிரப்பப்பட நடவடிக்கையெடுக்கப்படும். 

 

1) உத்தியோகத்தரின் தவறேதுமில்லையெனத் தெரிவித்து அவர் மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டால் அவரால் செலுத்தப்பட்ட கடன் தவணைகள் உள்ளிட்ட அரசாங்கம் தாங்கிக் கொள்கின்ற வட்டி முழுமையாக அவருக்கு மீள வழங்கப்படல் வேண்டும்.

 

2) உத்தியோகத்தர் ஏதேனும் தண்டனைக்கு உட்பட்டு மீள் சேவையில் அமர்த்தப்பட்டால் தண்டனையின் தன்மையைக் கருதாது செலுத்தப்பட்ட தவணைக் கட்டணங்களில் உள்ளடங்கிய அரசு ஈடு செய்கின்ற வட்டியின் அரைவாசி மட்டுமே மீள் நிரப்பப்பட வேண்டும்.

 

எ) கட்டாய லீவில் அனுப்பப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பிலான அறவீட்டினை வழமையான முறையில் வங்கிக்கு அனுப்பீடு செய்ய வேண்டியதுடன் வட்டியின் வித்தியாசத்தை அரசாங்கம் தாங்கிக்கொள்ளும்.

 

ஏ) பெண் உத்தியோகத்தர் ஒருவர் பிரசவ லீவின் நிமித்தம் அரைச் சம்பளத்தைப் பெறுகின்ற சந்தர்ப்பமொன்றில் கடன் தவணையும், வட்டியும் தனிப்பட்ட முறையில் வங்கிக்குச் செலுத்தப்பட வேண்டுமென்பதோடு வட்டியின் வித்தியாசம் அரசாங்கத்தினால் மீள் நிரப்புச் செய்யப்படும்.

 

ஐ) உத்தியோகத்தர் ஒருவர் சம்பளமற்ற விடுமுறை பெற்றுக் கொள்கின்ற போது தவணைக் கட்டணங்களையும் வட்டியையும் (Instalment and Interest) அறவிடல் தொடர்பாக வங்கியின் பொதுச் சட்ட விதிகளைப் பின்பற்றல் வேண்டும்.

 

ஒ) சேவைக் காலத்திற்குள் உத்தியோகத்தர் ஒருவர் காலஞ்சென்றால் அல்லது பூரணமாக செயலிழந்த நிலைமைக்கு தள்ளப்பட்டால் அல்லது வைத்திய காரணங்களுக்காக ஓய்வு பெறச்செய்தால் அத்தினத்திற்கு வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவையினை மட்டும் கடன் உத்தரவாத நிதியின் மூலம் ஒரேதடவையில் கணக்கு தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சலுகை வட்டி அடிப்படையில் வங்கியில் சொத்துக்கடன் பெறும்போது உத்தியோகத்தர் செலுத்த வேண்டிய கட்டணங்களை குறிப்பிடுக.

 

1) கடன் விண்ணப்பங்களின் முன்னேற்பாட்டுக் கட்டணம். 

 

2) பரிந்துரைக்கப்பட்ட ஒரு வங்கி மூலம் கடன் பெறுகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களான மதிப்பீட்டு அறிக்கை, சட்டத்தரணிக்கான கட்டணங்கள், பிரயாணச் செலவுகள் என்பவற்றிற்காக ரூபா 7500/= அல்லது கடன் தொகையில் 1% வீதம் ஆகிய இரண்டில் எத்தொகை குறைவாகவுள்ளதோ அத்தொகையைக் கொடுப்பனவு செய்ய வேண்டும்.

 

3) உத்தியோகத்தரால் செலுத்தப்பட வேண்டிய ஆகக் குறைந்த தொகையை அவரின் விருப்பத்திற்கிணங்க, பணமாகக் கொடுப்பனவு செய்ய அல்லது கடன் தொகைக்காகச் செலுத்தப்படுகின்ற முதலாம் தவணையிலேயே கழிப்பனவு செய்வதற்கோ அல்லது கடன் தொகையில் மாதாந்தம் தவணைக்குள் உட்சேர்த்தோ அறவிட நடவடிக்கையெடுக்க முடியும்.

 

4) காணிப்பதிவு அலுவலகத்திலிருந்து பிரித்தெடுப்புகைகளைப் பெற்றுக் கொள்ளல், உரித்தறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளல், நில அளவை, நிலப்படக் கட்டணம், அற்றோனித் தத்துவப் பதிவுக் கட்டணம் மற்றும் உரித்து உறுதிகளில் பிழைகள் இருந்தால் அவற்றை காப்புறுதி செய்வதற்காக ஏற்படுகின்ற செலவு என்பவற்றைக் கடன் தொகைக்குள் உட்சேர்த்து மாதாந்த தவணை தீர்மானிக்கப்படல் வேண்டும்.

 

5) உரித்துறுதிகளில் தவறுகளிருப்பின் அதனைக் காப்புறுதி (Insurance) செய்வது இன்றியமையாததாகும்.

 

சொத்துக் கடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தலும் மற்றும் பரிந்துரைக்கின்ற நடைமுறையையும் குறிப்பிடுக.

 

அ) ஒரு கடன் விண்ணப்பதாரர் 26 ஆம் பின்னிணைப்பிற்கு அமைய விணப்பப் படிவத்தை 2 பிரதிகளில் தயாரித்து கடனைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்ற வங்கியினால் விநியோகிக்கப்பட்ட பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தோடு 29 ஆம் பின்னிணைப்பிற்கமைய உரிய ஆவணங்களை திணைக்களத் தலைவருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

 

ஆ) திணைக்களம் உரிய விண்ணப்பத்தை பதிவேடொன்றில் உள்ளடக்கி வழங்க முடியுமான கடன் தொகையைத் தீர்மானித்து கடன் விண்ணப்பதாரர் விருப்பம் தெரிவித்துள்ள வங்கிக்கு ஒரு வாரத்திற்குள் பரிந்துரைக்கப்பட்ட கடனை அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

 

இ) கடன் விண்ணப்பதாரர் உரிய கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த வங்கியின் சட்ட விதிகளுக்கு இணங்கவும் சுற்றறிக்கைகளுக்கு அமைவாகவும் தேவையான தகவல்களை மூன்று மாத காலம் பூர்த்தியாக முன்னர் வங்கிக்குச் சமர்ப்பித்து கடன் தொகை அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வங்கி அது பற்றி திணைக்களத்திற்கு அறிவித்தல் வேண்டும்.