DO III Past Paper

Friday, September 17, 2021

மீள்நியமனம் செய்யும் போது வழங்கப்படும் சம்பளம் Salary paid at the time of reassignment - 29



ஒரு உத்தியோகத்தர் முன்னைய பதவிக்கு மீள்நியமனம் செய்யும் போது செலுத்தப்படும் சம்பளம் எவ்வாறு தீர்மானிக்கப்படும்?

உத்தியோகத்தர் ஒருவர் ஒழுக்காற்று நடவடிக்கையின் மீது பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டு தான் முன்னர் வகித்த கீழ்நிலை தரமொன்றிற்கு அல்லது பதவியொன்றுக்கு மீள நியமனம் செய்யப்படுமிடத்து, அவ்வாறு மீள்நியமனம் செய்கின்ற போது அவருக்கு செலுத்த வேண்டிய சம்பளத்தை அவரது ஒழுக்காற்றுக் கட்டளையில் (Disciplinary Order) விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தீர்மானித்தல் வேண்டும். 

பதவி இல்லாதொழிக்கப்பட்டமை காரணமாக எவரேனுமோர் உத்தியோகத்தர் முன்னர் வகித்த பதவிக்கு மீள் நியமனம் செய்யப்படுமிடத்து, அவருக்குரிய சம்பளம் எவ்வாறு தீர்மானிக்கப்படும்?

அ) அவர் முன்னர் வகித்த பதவியில் தொடர்ந்தும் சேவையாற்றி குறித்த பதவியின் சம்பளத் திட்டத்திற்கமைய சம்பள ஏற்றங்களையும் உழைத்திருப்பின், அதன் பிரகாரம் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய சம்பளமாகும்.

ஆ) யாதேனுமொரு காலப் பகுதிக்கு அவரது சம்பள ஏற்றமானது (Salary Increment) தாமதிப்புச் செய்யப்பட்டிருப்பின், அக்காலப் பகுதிக்காக அவருக்கு சம்பள ஏற்ற நன்மைகளை வழங்க முடியாது.

உத்தியோகத்தர் ஒருவர், அவரது வேண்டுகோளின் மீது அவர் முன்னர் வகித்த பதவிக்கு நியமன அதிகாரியின் பரிந்துரை மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துக்கிணங்க மீள நியமனம் செய்யப்படும் போது, அவரது சம்பளம் எவ்வாறு வழங்கப்படும்? 

அ) இவ்வாறு மீள்நியமனம் ஒரு புதிய நியமனமாகக் கருதப்பட்டு அவ்வாறு புதிதாக நியமிக்கப்படும் பதவிக்குரிய சம்பளத்திட்டத்தின் ஆரம்பச் சம்பளத்தை அவருக்கு வழங்குதல் வேண்டும். (Basic Salary)

ஆ) ஆரம்பச் சம்பளத்தை விடவும் கூடிய சம்பளம் ஒன்றினை அவருக்கு வழங்குவதே நியாயமானதெனத் தெரிகின்ற விஷேட சந்தர்ப்பங்களில், அதற்காக தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியினை, குறித்த உத்தியோகத்தரை அப்பதவிக்கு மீள நியமிப்பதற்கு முன்னர் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

அரசாங்க சேவைக்கு வெளியேயுள்ள சேவை ஒன்றிற்கு அரசாங்கக் கொள்கை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவர், அவரின் முந்திய பதவிக்கு மீண்டும் நியமிக்கப்படும் போது அவரின் சம்பளம் எவ்வாறு அமையும்? 

அ) அவர் அப்பதவியில் தொடர்ச்சியாக பணியாற்றி அப்பதவிக்கான சம்பள ஏற்றங்களையும் அவர் பெற்றிருப்பாராயின், வழங்க வேண்டியிருந்த சம்பளப் படிமுறையிலேயே அவரை வைத்தல் வேண்டும்.

ஆ) எவ்வாறாயினும், அவரை அந்தச் சம்பளத்தில் வைக்க முடிவது அவருக்கென விதிக்கப்பட்டுள்ள வினைத்திறன்காண் தடைப் பரீட்சைகளில் அவர் உரிய காலத்தில் சித்தியடைந்திருந்தால் மாத்திரமேயாகும். 

அரசாங்க சேவைக்குப் புறம்பான சேவையொன்றிற்கு அரச கொள்கை அல்லாத காரணமொன்றிற்காக விடுவிக்கப்பட்டிருக்கின்ற உத்தியோகத்தர் ஒருவர், அவர் முந்திய பதவிக்கு மீண்டும் திரும்புமிடத்து, அவருக்கான சம்பளம் எவ்வாறு வழங்கப்படும்? 

அ) அவரை விடுவிக்கும் போது இறுதியாக வழங்கப்பட்ட சம்பளத்தில் அவரை வைத்தல் வேண்டும்.

ஆ) அவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த காலத்திற்காக அவருக்கு எவ்வித சம்பள ஏற்ற நன்மையையும் பெற்றுக் கொள்ளும் உரித்துக் கிடையாது. 

 

பணித் தடையின் போது செலுத்தப்படும் சம்பளம் தொடர்பாக தாபன விதிக் கோவையின் VII ஆம் அத்தியாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை குறிப்பிடுக.

அ) பணித்தடை செய்யப்பட்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய காலப் பகுதியினுள் அவர் பதிலளிப்பதற்குத் தவறுமிடத்து அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணம் ஏதுமின்றி விசாரணைக்கு சமுகமளிக்காமல் இருக்குமிடத்து, அவர் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வரை அல்லது விசாரணைக்கு சமுகமளிக்கும் வரை அவரது சம்பளத்தினை இடைநிறுத்துவதற்கு திணைக்களத் தலைவர் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

ஆ) பணித்தடை செய்யப்பட்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையின் தீர்வாக அவர் சேவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்படுமிடத்து அவருக்குக் கொடுப்பனவு செய்யப்படாமல் இடைநிறுத்தப்பட்ட எந்த வேதனாதிகளையும் வழங்கக் கூடாது.

இ) அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையானது, பதவி நீக்கம் செய்வதிலும் பார்க்கக் குறைந்ததொரு தண்டனையாக அமையுமிடத்து, நிறுத்தப்பட்ட சம்பளம் வழங்குவது தொடர்பில் ஒழுக்காற்று அதிகாரி தீர்மானித்து அத் தீர்மானத்தை விசாரணை அறிக்கையில் (Inquiry Report) குறிப்பிடுதலும் வேண்டும்.

ஈ) உத்தியோகத்தருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து அவ்வுத்தியோகத்தர் விடுவிக்கப்படுவதாக ஒழுக்காற்று விசாரணையின் போது தீர்மானிக்கப்படுமிடத்து, கொடுப்பனவு செய்யப்படாமல் இடைநிறுத்தப்பட்ட சம்பளங்கள் அவருக்கு மீள வழங்கப்படல் வேண்டும்.

உ) இன் நடைமுறை தற்காலிக ஊழியர் ஒருவருக்கு அல்லது அமைய ஊழியர் ஒருவருக்கு ஏற்புடையதாகாது. 

தற்காலிக ஊழியர் ஒருவருக்கு அல்லது அமைய ஊழியர் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள், காரணமாக சம்பளம் வழங்கல் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? 

அ) அவர் நிரந்தரப் பதவியொன்றினை வகிக்குமிடத்து அவர் பணித்தடை செய்யப்படுவதற்குக் காரணமான ஒரு குற்றச் சாட்டாக நியமன அதிகாரி கருதினால், விசாரணை நடைபெறும் வரை அவரை சேவையில் அமர்த்திய நிபந்தனைகளின் பிரகாரம் அவரது சேவையினை முடிவுறுத்துவதாகும்.

ஆ) குறித்த விசாரணை முடிவடைந்ததன் பின்னர் அவரை மீளப்பணிக்கு அமர்த்துவது பொருத்தமானது என விசாரணையின் பெறுபேறுகள் மூலம் தெரியவருமிடத்து, அவரை மீளப்பணிக்கு அமர்த்த முடியும். 

உத்தியோகத்தர் ஒருவரின் “வேதனாதிகள்” என்பதன் மூலம் கருதப்படுவது யாது? 

அ) “வேதனாதிகள்” என்பது அவரது நிரந்தர பதவிக்குரிய சம்பளமாகும். 

ஆ) அதில் அவரது இணைந்த சம்பளம், வாழ்க்கைச் செலவுப்படி, வேறு எவையேனும் கொடுப்பனவுகள் இருப்பின், அவையும் அடங்கும். 

இ) கடமையினை நிறைவேற்றுகின்ற பிரயாணச் செலவினங்கள் (Travelling Allowance) , மற்றும் இணைந்தபடிகள் (Combined Allowance) என்பன இதில் உள்ளடங்காது.

பதவியிலிருந்து கேட்டு விலகுதல், தகுதிகாண் காலத்திற்குள் நியமனத்தை முடிவுறுத்தல், போன்ற காரணங்களுக்காக முன்னர் வகித்த சேவை முடிவுறுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவர் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் பணிக்கமர்த்தப்படுவாராயின், அவரின் சம்பளம் எவ்வாறு தீர்மானிக்கப்படும்? 

அவரது முந்திய சேவை முடிவுறுத்தப்படக் காரணமான நிகழ்வுக்கு முன்னர் அவர் பணியாற்றிய எந்தக் காலப் பகுதிக்கும் எவ்வித நன்மையினையும் பெற்றுக் கொள்ள அவருக்கு உரித்துக் கிடையாது. அவரின் சம்பளம் முதன்முதலாக நியமனம் செய்யப்படுகின்ற சம்பளம் தீர்மானிக்கப்படுகின்ற முறையிலாகும்.

<

அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வூதிய உரித்தின் அடிப்படையில் மீளப் பணிக்கமர்த்தப்படும் போது அவருக்கு சம்பளம் எவ்வாறு தீர்மானிக்கப்படும்? 

அ) அவருக்கு ஓய்வூதியச் சம்பளமொன்று வழங்கப்படுமாயின் அது, அவ்வாறு மீளப் பணிக்கமர்த்தப்பட்ட தினத்திலிருந்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆ) அவர் மீளப் பணிக்கமர்த்தப்படுவது, ஓய்வுபெறும் போது அவர் வகித்த பதவிக்கோ அல்லது தரத்திற்கோ அன்றி வேறொரு பதவிக்கு அல்லது தரத்திற்கெனில், அவரது கடந்த சேவைகளுக்காக அவருக்கு சம்பள ஏற்ற நன்மைகளை வழங்க வேண்டும்,

இ) அவர் மீளப் பணிக்கமர்த்தப்படுவது ஓய்வுபெறும் போது வகித்த பதவிக்கோ அல்லது தரத்திற்கோவெனின், ஓய்வுபெறும் போது பெற்றுக் கொண்டிருந்த சம்பளத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். மேலும், அவரது எதிர்கால சம்பள ஏற்றத் திகதியானது மீளப் பணிக்கமர்த்தப்பட்ட திகதியாகும்.

அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் ஈடுபடுத்தப்பட்டால் சம்பளம் எவ்வாறு வழங்கப்படும்? 

அ) சம்பளம் அப்போது வலுவிலுள்ள நிபந்தனைகள் மற்றும் ஏற்பாடுகளுக்குள் அமையும்,