DO III Past Paper

Tuesday, September 7, 2021

மேற்பார்வை வினாவிடைகள் Supervision Question and Answer 03



மேற்பார்வை (Supervising) என்றால் என்ன?

 

ஒரு மேற்பார்வையாளர் வேலை ஓட்டத்தை வழி நடத்தியும், கட்டுப்படுத்தியும், அவசியமான அளவிற்கு ஒருங்கிணைத்தும் மற்றவர்களின் வேலைகளை அதிகாரத்தோடு கண்காணிக்கும் முறை மேற்பார்வை எனப்படும்.

மேற்பார்வை மூன்று வகைப்படும் அவை எவை?

 

1) வேலையை மையமாக கொண்டது

2) ஊழியரை அடிப்படையாக கொண்டது

3) பொருளை அடிப்படையாக கொண்டது

 

மேற்பார்வையாளர் ஒருவர் அக்கறையுடன் செயற்பட வேண்டிய விடயங்கள் யாவை? 

1) அலுவலகத்தின் குறிக்கோள், திட்டம், நிகழ்ச்சித்திட்டங்கள், முன்னுரிமைகள்

2) தனக்குரிய கடமைகள், பொறுப்புக்கள்.

3) அலுவலகத்தில் செய்யப்பட வேண்டிய வேலையின் தன்மை, விபரங்கள்.

4) தனிப்பட்டவர்களது ஆற்றல்களும், ஒருவரை மற்றொருவரின் இடத்திற்கு மாற்றக் கூடிய நிலையும்.

5) வேலை செய்முறைகளின் வினைத்திறமை

6) தனது பிரிவைச் சேர்ந்த பதவியினரின் உறவு நிலை

7) குறைபாடுகளைக் கண்டுபிடிக்கும் விழிப்புணர்ச்சியும், அவற்றைச் சரி செய்யும் ஆற்றலும்.

 

மேற்பார்வையாளரிடம் எவ்வாறான விடயங்களில் சிறந்த அறிவு இருக்க வேண்டும்?

 

1) அலுவலகத்தின் குறிக்கோள் பற்றிய அறிவு

2) தனது வேலைகள்,பொறுப்புகள் பற்றிய அறிவு

3) தலைமைதாங்கும் திறமை

4) திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், ஒருங்கிணைத்தல், கட்டுப்பாடு செய்தல் ஆகியவற்றில் நிரம்பிய அறிவு.

5) செய்முறைகளை விருத்தி செய்வதில் திறமையும், செயல்நுட்பமும்

6) மேற்பார்வை கோட்பாடு பற்றிய அறிவு.

 

கட்டுப்பாடு செய்தல் என்றால் என்ன?

 

நிர்ணயிக்கப்ட்ட குறிக்கோளை கிடைக்கப்பெற்ற முடிவுகளுடன் ஒப்பீட்டு ரீதியில் ஆராய்தலும், அளவீடு செய்தலும்.

 

கட்டுப்பாடு செய்தலின் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எவை?

 

1) திட்டமிட்ட செயல்திட்டங்களையும், அளவீடுகளையும் ஒப்பீடு செய்தல்.

2) விதிகளுக்கும், பிரமாணங்களுக்கும் அமைய வேலைகளை செய்தல்

3) செலவீன அடிப்படையில் நடைபெற்ற வேலைகளை மதிப்பீடு செய்தல்

4) சரியான அளவையும், தரத்தையும் பரிசீலித்தல்

5) வேலை சுரக்குமிடத்தை இனம்கண்டு வேலைப்பளுவை குறைத்தல்.

கட்டுப்பாடு செய்தலின் போது மேற்பார்வையாளர் ஒருவர் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் எவை?

 

1) விதிகள், பிரமாணங்கள் பற்றிய தெளிவான அறிவு.

2) முகாமை பற்றிய அறிவு,

3) தனது சொந்தப் பொறுப்பை தெளிவாக விளங்கிக் கொள்ளும் ஆற்றல்

4) ஊழியரை பயிற்றுவிக்கக்கூடிய ஆற்றல்

5) மனித உறவு பற்றிய அறிவு

6) நேரத்தை திறமையுடன் பயன்படுத்தும் ஆற்றல்

7) ஊழியரை மதிப்பீடு செய்யும் போது பக்கச் சாராத தன்மை

8) ஒழுக்காற்று முறை பற்றிய அறிவு

9) பிரச்சினைகளை இலகுவாக அணுகித் தீர்க்கும் திறமை

10) சிறந்த தலைமைத்துவத்தை பேணுதல்

 

கட்டுப்பாடு செய்தலின் படிமுறைகள் எவை?

1) மதிப்பீடு செய்தல்

2) அளவீடு செய்தல் 

3) ஒப்பிடுதல்

4) ஏற்ற நடவடிக்கையெடுத்தல்

5) வேண்டிய இடத்து திட்டத்தை மாற்றுதல்.

6) பொறுப்புக்களையளித்தல்

 

மதிப்பீடு எவ்வாறு செய்யப்படுகிறது?

1) அறிக்கை மூலம் தகவல்களை சேகரித்தலும், மீள்மதிப்பீடு செய்தலும்

2) பரிசோதனை

3) இடத்திற்குச் செல்லல்

4) விசாரித்தல்

5) கணக்கீடு (பௌதீக ரீதியில்)

அளவிடுகல்

தீர்மானிக்கப்பட்ட தரத்துடன் அளவிடுதல். (தரம், அளவு, காலம், நிதி, ஆகியவற்றுடன் ஒப்பீட்டு அளவீடு செய்தல்)

 

ஒப்பிடுதல்

ஏனைய சம நிறுவனங்களுடன் ஒப்பிடுதல், கடந்த  ஆண்டுகளுடன் ஒப்பிடுதல்.

 

கட்டுப்பாடு

நிதிக்கட்டுப்பாடு, உற்பத்திக் கட்டுப்பாடு, தரம் மீதான கட்டுப்பாடு, செலவு மீதான கட்டுப்பாடு.

 

கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்  உள்ளடக்கும் விடயங்கள் யாவை?

 

1) தொழிற்சாலைகளுக்கு அடிக்கடி விஜயம் செய்தல், சுற்றிப்பார்த்தல், பரிசோதித்தல், விரையம் ஊழலை இது தவிர்க்கும்.

2) உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை (Product) எதிர்பார்க்கப்பட்ட தரத்துடன் ஒப்பிடுதல்

3) பாவனையாளர்களை சந்தித்து அவர்களிடம் கேட்டு முறைப்பாடுகளை பெறுதல்.

4) ஊழியர்களுடன் கலந்துரையாடல்

5) பழுதுபார்த்தல், பராமரித்தல் நடவடிக்கைகளை உரிய நேரத்தில் செய்தல்

6) குறைபாடுகளையும் தவறுகளையும் சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல்

7) ஊழியர்களின் திறமையையும் ஈடுபாட்டையும் மதிப்பீடு செய்தல்

8) ஏனைய தொழிநுட்ப சக்திகளை கையாண்டு செலவுகளை குறைத்தல்

 

கட்டுப்பாட்டு வீச்செல்லை எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?

 

ஒரு முகாமையாளர் எத்தனை கீழமைந்த ஊழியர்களைத் திறமையாக மேற்பார்வை செய்யலாமென்பதை இது குறிப்பிடும். ஓவ்வொரு நிறுவனத்துக்கும் அதன் தன்மை செயல், திறமை என்பவற்றைக் கொண்டு வீச்செல்லை நிர்ணயிக்கப்படும்.

 

கட்டுப்பாட்டு வீச்செல்லையை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறுகின்ற விடயங்கள் எவை?

 

1) முகாமையாளரின் வல்லமை  (6 -10 பேர் வரை)

2) கையாளப்படும் கட்டுப்பாட்டு முறைகளின் வினைத்திறமைகள்.

3) பிரத்தியேக உதவியாளர்களை பாவித்தல்

கட்டுப்பாட்டு வீச்செல்லை அளவுக்கதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடுகள் யாவை?

 

1) திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், ஒருங்கிணைத்தல், கட்டுப்படுத்தல் ஆகியவற்றைச் செய்யப் போதியளவு நேரம் இருக்காது.

2) போதியளவு பணிப்புரை இல்லாதவிடத்து தொழிலாளர் குழப்பமடைவர்

3) வேலையின் தரம் பாதிக்கப்படலாம்

 

தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களை குறிப்பிடுக?

 

அ) நோக்கங்களை வகுக்கம் போது

ஆ) மாற்று வழிகளை தெரிவு செய்யும் போது

இ) தற்போதுள்ள நிலையிலிருந்து மாற்றம் செய்யும் போது

ஈ) முகாமைத்துவ நடவடிக்கைகளான திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்தல், மீளாய்வு செய்தல், ஒருங்கிணைத்தலின் போது.

 

தீர்மானமெடுத்தலின் படிமுறைகள் (Process of Decision Making) எவை?

 

1) நோக்கங்களையும், இலக்குகளையும், குறிப்பாக இனம்காணல் (Identify Specific goals & objectives)

2) பிரச்சினையை இனங்காணல் ( Identify Problem)

3) மாற்று வழிகளை உருவாக்கல் (Develop alternatives)

4) மாற்று வழிவகைகளை மதிப்பாய்வு செய்தல் (Evaluate alternatives)

5) சிறந்த மாற்று வழியைத் தெரிவு செய்தல். (Choose the best alternatives)

6) தேர்ச்சியைக் கட்டுப்பாடு செய்தல். (Progress Control)

 

தீர்மானமெடுத்தலை பாதிக்கும் காரணிகள் எவை?

 

அ) நேரம்

ஆ) நிதி மட்டுப்படுத்தல்கள்

இ) அரசியல் சூழ்நிலை

தற்றுணிபை பிரயோகித்தல் (Exercise of Discretion) எந்த அடிப்படையில் மேற்கொள்ளப் படலாம்?

 

இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கும் போது கீழ்வரும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

 

தனது விசேட அறிவு ( Special Knowledge)

சேவை முதிர்ச்சி

அனுபவம் (Experience)

தீர்மானமெடுக்கும் காலத்தின் அரசியல் சமூக சூழ்நிலை

தனது மனநிலை

 

ஒருமுகப்படுத்தல் Centralization என்றால் என்ன?

 

நிறுவனத்தின் நிருவாக கட்டுப்பாட்டினை ஒரு குறிப்பிட்ட மையத்தில் இணைத்தல் ஒருமுனைப்படுத்தல் எனப்படும்.

 

ஒருமுகப்படுத்தலில் அடங்கும் அம்சங்கள் எவை? 

 

1) தலைமைக் காரியாலயத்திலிருந்து கிளைக் காரியாலயங்களை பரிசோதித்தல்

2) அறிவுரை வழங்கல்

3) அறிக்கைகளை பெறுதல்

பன்முகப்படுத்தல் (Decentralization) என்றால் என்ன?

 

நிருவாகம் சம்பந்தமான தீர்மானத்தையெடுத்து அதனைச் செயற்படுத்துமதிகாரத்தை கீழமைந்த மட்டங்களுக்கு பிரித்து வழங்குதல் பன்முகப்படுத்தல் எனப்படும்.

 

ஒருமுகப்படுத்தலின் நன்மைகள் (Advantages of Centralization) எவை?

 
1) சிறந்த நிருவாக கட்டுப்பாடு
2) வேலைக் குவிப்புகளை இலகுவாக கையாளலாம்
3) குறிப்பிட்ட தரமான அளவு மேற்பார்வை செய்ய முடியும்.
4) இயந்திரங்களைப் போதியளவு பயன்படுத்தலாம்
5) விசேட திறமை, நிபுணத்துவத் திறமைகளின் சேவையைப் பெற முடியும்.
6) ஊழியர்களைப் பயன்படுத்துவதில் கூடுதலான நெகிழ்ச்சி இருக்கும்.
 
 
ஒருமுகப்படுத்தலின் குறைபாடுகள் (Disadvantages of Centralization) எவை?
 
1) கூடுதலான கட்டுப்பாடு விரக்தியை ஏற்படுத்தும்
2) கூடுதலான கடிதத்தொடர்பு பதிவுகள் இருக்கும்
3) நடைமுறையில் அடிமைச்சாயல் இருக்கும்
4) வேலை நடைமுறையில் தாமதம் ஏற்படும்.