DO III Past Paper

Sunday, November 21, 2021

வினாவிடைகள் DO III EB Exam Office System 2022

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் III  இற்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ளது. அதற்கமைய குறித்த பரீட்சைக்கான அலுவலக நடைமுறைகளின் மாதிரி  வினாவிடைகள் கீழே தரப்பட்டுள்ளன. 


01. “பெனி ஹெக்கட்” என்பவரது கருத்துப்படி அலுவலகம் என்ன?

நிறுவனத்தின் இலக்கை அடைவதற்காக தகவல்களைத் திரட்டிச் சேகரித்துப் பாதுகாத்து தேவையான போது வெளியிடப்படும் இடமே அலுவலகம் ஆகும்.

௦2. அலுவலகமொன்றை திட்டமிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான அம்சங்களை குறிப்பிடுக.

அ) அலுவலகத்தின் அமைவிடம்,

ஆ) உள்ளார்ந்த சூழல்,

இ) தளக்கோலம். 

03. அலுவலகமொன்றுக்கான தளக்கோலமொன்றைத் தெரிவு செய்யும் போது
கவனிக்க வேண்டிய அம்சங்கள் எவை?

அ) அலுவலக தேவையின் அளவுகளை நிர்ணயித்தல்

ஆ) கிளைகளைத் தீர்மானித்தல்.

இ) அவற்றுக்கு பொருத்தமான இடங்களைத் தீர்மானித்தல்  

04) அலுவலகத் தளக்கோலம் (Office Layout) எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது? அவை எவை?

அலுவலகத்தின் தளக்கோல முறை மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

1. திறந்த தளக் கோலம். 

2. மூடிய தளக் கோலம். 

3. பல் திசை நோக்கிய தளக் கோலம்.

05. அலுவலக தளக்கோல வகைகளை விளக்குக.

திறந்த தளக் கோலம் (Open Layout)

திறந்த மண்டபத்திலே பல மேசைகள் இடையிலே எவ்வித திரைகளுமின்றி காணப்படுகின்றதும், ஒரே பார்வையில் அனைத்து அலுவலர்களையும் கண்காணிக்கக் கூடியதுமான தளக்கோலம்.

மூடிய தளக் கோலம் (Closed Office Layout)

தனித்தனியாக மறைக்கப்பட்ட பல அறைகள் காணப்படும் வகையில் அமைக்கப்பட்ட தளக்கோலம் மூடிய தளக்கோலமாகும். 

பல் திசை நோக்கிய தளக்கோலம் (Panoramic Office Layout)

இது ஜேர்மனிய முகாமைத்துவவியலாளர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டதொரு முறையாகும்.

இத்தளக்கோலம் திறந்த தளக்கோல முறையை ஒத்தது. ஆயினும் வட்ட வடிவமாக கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள் போன்றவற்றுக்கு பொருத்தமாக அமைக்கப்பட்டது.

தளக்கோலத்தை நடைமுறைப்படுத்தி அலுவலகங்களின் முன்னேற்ற ஆய்வு (Progress review) செய்யப்படும்.

06. பதவியணினரைத் திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் எவை?

அ) தேவையை நியாயப்படுத்திக் கொள்ளல்.

ஆ) செலவைக் கட்டுப்படுத்துதல்

இ) நிறுவனத்தின் பிரதான இலக்குகளுக்கேற்பத் திட்டமிடல்.

ஈ) தற்காலிக, அமைய ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்ள
முடியுமா? எனத் தீர்மானித்தல்.

07. திறந்த தளக்கோலத்தின் நன்மைகளை குறிப்பிடுக.

அ) பாரிய இடைவெளியை முழுமையாகப் பாவிப்பதனால் மறைப்பதற்காகப் பயன்படும்  இட அளவு  சேமிக்கப்படும்.

ஆ) மேற்பார்வையாளர் ஒரே பார்வையில் சகல அலுவலரையும் கண்காணிக்கக் கூடிய வசதி

இ) ஊழியர்கள் சொந்த விடயங்களில் கவனம் செலுத்துவது கடினம்.

ஈ) இலகுவாக ஏனையோருக்கிடையேயும், சேவை பெறுனருக்கிடையேயும் கருத்துப்பரிமாற்றங்களைச் மேற்கொள்ளலாம்.

உ) தேவையான சந்தர்ப்பங்களில் தேவையான வகையில் தளக் கோலத்தை இலகுவாக மாற்றிக் கொள்ளலாம்.

ஊ) தளக்கோலத்தினை மாற்றுவதற்கான செலவை சேமிக்கலாம். 

08. திறந்த தளக்கோலத்தின் தீமைகளை குறிப்பிடுக.

அ) சகல தேவைகளுக்கும் சேவை பெறுநர் ஒரே அலுவலகத்தையே நாடவேண்டி இருத்தல்.

ஆ) சேவை பெறுநர், அலுவலர்கள் நடமாடும் போது தடங்கள் ஏற்படல்.

இ) சத்தம் கட்டுப்படுத்த முடியாததால்  சேவை வழங்கல் பாதிக்கப்படும்.

ஈ) குளிர், வெப்பநிலை போன்ற காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்த முடியாததால் முழுக் காரியாலயமும் பாதிக்கப்படலாம்.

09. மூடிய தளக்கோலத்தின் நன்மைகளை  குறிப்பிடுக. 

அ) பதவிநிலை உத்தியோத்தர்கள் சுதந்திரமாகவும் இடைஞ்சலின்றியும் கடமையாற்ற முடியும்.

ஆ) இரகசியங்களை  பாதுகாத்து கடமைகளில் ஈடுபட முடியும்.

இ) நேர்முகப் பரீட்சை, புலன் விசாரனைகள் என்பவற்றுக்கு மிகவும் பொருத்தமாகக் காணப்படல்.

10. ஒழுங்கமைப்பு வரைபடம் (Organization Chart) என்றால் என்ன?

அலுவலகத்திலுள்ள பதவியணியினரிடையே பொறுப்புக்கள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் அலுவலருக்கிடையிலான தொடர்புகள் பற்றியும் சேவை பெறுனரும், ஏனையோரும் அறிந்து கொள்வதற்காக வரையப்பட்டு காட்சிப்படுத்தப்படும் வரைபடமே ஒழுங்கமைப்பு வரைபடம் எனப்படும்.

11. மூடிய தளக்கோலத்தின் தீமைகளை  குறிப்பிடுக.

அ) கூடிய இடவசதி தேவைப்படல்.

ஆ) குறைந்த இடப்பரப்பாக காணப்படுவதால் கடமையாற்றுவதில் சிரமம் ஏற்படும்.

இ)  அலுவல்களுக்குடையிலான தொடர்பு குறைக்கப்படுதல்.

12. ஒழுங்கமைப்பு வகைகள் யாவை?

 அ) வரிசை ஒழுங்கமைப்பு – (Line organization)

ஆ) செயற்பாட்டு ஒழுங்கமைப்பு – (Functional organization)

இ) வரிசை செயற்பாட்டு ஒழுங்கமைப்பு – (Line and functional organization)

13. செயற்பாட்டு ஒழுங்கமைப்பு – (Functional organization) யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

இம் முறை முதலில் F.W. டேலர் என்பவரினால் அறிமுகப்படுத்தப்பட்டது

தாபன விதிக்கோவை வினாவிடைகள்
நிதி நடைமுறைகள் வினாவிடைகள்
கடந்தகால வினாப்பத்திரங்களுக்கான விடைகள்