DO III Past Paper

Wednesday, March 23, 2022

Model Paper MSO III EB Exam Office System

Model Paper - Management Service Officer Grade III EB Exam Office System

கீழே தரப்பட்டுள்ள மாதிரி வினாப்பத்திரம் போன்ற வினாப்பத்திரங்களின் மூலம் கற்பிக்கப்படுகின்ற ZOOM வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளது. 




01. Penny Hakett என்பவரது கருத்தின்படி அலுவலகம் ஒன்றின் செயற்பாடுகள் இரண்டினை குறிப்பிடுக.

அ) எதிர்கால தீர்மானமெடுத்தலுக்காக தகவல்களை வழங்குதல்,

ஆ) செயற்பாடுகள் தொடர்பாக பரிசோதித்தலும் கட்டுப்படுத்தலும்,

இ) நிதி நடவடிக்கையில் உறுதித்தன்மையை பேணல்

ஈ) நோக்கினை அடையக்கூடிய வகையில் செயற்பாடுகளை வழிநடாத்துதல்,

உ) தேவையான தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ளல்,

ஊ) சொத்துக்களை பாதுகாத்தல்,

02. ஒழுங்கமைப்பு வகைகள் எவை?

அ) வரிசை ஒழுங்கமைப்பு
ஆ) செயற்பாட்டு ஒழுங்கமைப்பு
இ) வரிசை செயற்பாட்டு ஒழுங்கமைப்பு

03. செயற்பாட்டு ஒழுங்கமைப்பு மூலமான நன்மைகள் இரண்டினை குறிப்பிடுக,

1) சம்பந்தப்பட்ட பிரிவுகளில் கடமையாற்றுபவர்களுக்கு சிறப்பு தேர்ச்சி உருவாகும்

2) விளைதிறன் அதிகரிக்கும்

3) மேற்பார்வை உத்தியோகத்தருக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.

4) இலகுவாக தீர்மானம் எடுக்க முடியும்.

5) கிளையுடன் சம்பந்தப்பட்ட வகையிலான கொள்கைகள் கருத்துக்கள் பேணப்படும்.

6) கடமைகள் சீராக வழிநடத்தப்படும்.

04. நவீன கோவைப்படுத்தல் முறைகள் இரண்டினை குறிப்பிடுக?

அ) கிடைக்கோப்பிடல் முறை – இது தற்போது அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் முறை

ஆ) நிலைக்குத்து கோப்பிடல் முறை – இக்கோவையில் கடிதங்கள் கட்டப்படமாட்டாது.

இ) நுண்கோவை முறை – (உதாரணம் கமரா பிலிம் ரோள்) இது இப்போது வழக்கத்தில் இல்லை

ஈ) இலத்திரனியல் கோவை முறை – கணினி கோவைப்படுத்தல், இது முறையாக அனுமதிக்கப்படவில்லை.

05. அலுவலகங்களில் சேவை எனும் விளைவினைப் பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் 5 வளங்களில் இரண்டினை குறிப்பிடுக.

1) மனிதன் (Man)

2) பொருட்கள் ( Materials)

3) கருவிகள் (Equipment’s)

4) நேரம் (Time)

5) இடம் (Space)

06. குறிப்புத்தாள்களுக்கு இடப்படும் இலக்கம் எது?

உரோம இலக்கம்

07. குறுக்கு தொடர்பு குறிப்பு வகைகளை குறிப்பிடுக,

தனிக்குறிப்பு
இரட்டைக்குறிப்பு

08. பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சேவையிலுள்ள பிரதேச செயலகத்தின் நிர்வாக கிளையில் கடமையாற்றும் விடய அலுவலர் ஒருவர் குறிப்புத்தாள் குறிப்பு ஒன்றினை திணைக்களத்தலைவருக்கு சமர்ப்பிக்கும் போது குறிப்பிட வேண்டிய பதவி ஒழுங்கினை குறிப்பிடுக?

பிரதேச செயலாளர்/நிர்வாக உத்தியோகத்தர்/ பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்

09. நிர்வாக கிளையொன்றில் சுயவிபரக்கோவைகளை பேணும் அலுவலர் ஒருவர் “சுயவிபரக்கோவை பொது” எனும் பெயரில் கோவை ஒன்றினை புதிதாக ஆரம்பித்தார். இக்கோவை எந்த கோவை வகைகளுக்குள் அடங்கும்?

மத்திய கோவை

10. அலுவலக குறிப்பில் உள்ளடங்க வேண்டிய நான்கு பகுதிகள் எவை?

1) கிடைத்த கடிதத்தின் சாரம்

2) சமர்ப்பித்த விடயத்தின் வரலாறு

3) நன்மை உண்மைநிலை
விடய அலுவலரின்

4) சிபார்சு வரைபுக்கடிதம்

11. நினைவுகூர் நாளேட்டில் (Call up diary) குறித்துக்கொள்ளக்கூடிய இரண்டு விடயங்களை குறிப்பிடுக.

1) எதிர்வரும் நாட்களில் அனுப்பப்படவுள்ள பதில் கடிதங்கள்,

2) எதிர்வரும் நாட்களில் திணைக்களத்தலைவருக்கு வழங்க வேண்டிய கோவைகள், கடிதங்கள் தொடர்பான விபரங்கள். 

12. இயக்கப்பத்திரம் என்றால் என்ன?

மேலதிகாரிகளுக்கு அல்லது ஏனைய கிளைகளுக்கு அனுப்பப்படும் கோவைகள் தொடர்பான விபரங்களை பதிந்து வைத்துக் கொள்ளும்  அசைவு பதிவேடு அல்லது அசைவட்டை

13. கிடைக்கும் கடிதங்கள் தொடர்பான பதிவேடொன்றில் உள்ளடங்கும் விடயங்கள் இரண்டினை குறிப்பிடுக.

தொடரிலக்கம்

கடித இலக்கம்

திகதி

பற்றுச்சீட்டிலக்கம்

யாரிடமிருந்து

விடயம்

வழங்கப்பட்ட திகதி

பெற்றுக்கொள்பவர் கையொப்பம்

14. “இடைக்கால மறுமொழி” என்றால் என்ன?

கடிதமொன்று கிடைக்கப்பெற்று ஒரு வாரத்திற்குள் இறுதியான பதிலை அனுப்பி வைக்க முடியாதவிடத்து இடைக்காலப் பதில் ஒன்றை பொதுப் படிவம் 108ல் அனுப்பி வைத்தல் வேண்டும்.

மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கச் செய்ய முடியாவிடத்து, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றதென்பதையும் இறுதியான பதிலொன்றை எப்போது எதிர்பார்க்கலாமென்பதையும் குறிப்பிடடு; காலத்துக்குக் காலம் இடைக்கால பதில்கள் அடிக்கடி அனுப்பப்பட்டு வரலும் வேண்டும். தா.வி.கோ xxviii – 3.8

15. மனித வளங்களுக்கும் இயந்திர வளங்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசங்கள் இரண்டினை குறிப்பிடுக.

1) மனித வளங்களுக்கு பயிற்சிதேவை இயந்திர வளங்களுக்கு தேவையில்லை. – சம்பளம் தயாரித்தல்

2) மனித வளங்களுக்கு கூடிய நேரம் தேவைப்படுவதுடன் பிழைகள் ஏற்படலாம். இயந்திரவளங்கள் அப்படியில்லை – பணம் எண்ணும் இயந்திரம்

3) மனித வளங்களுக்கு சம்பளம் தேவை, இயந்திரங்களுக்கு தேவையில்லை.