DO III Past Paper

Tuesday, April 12, 2022

MSO III Model Paper AR

Efficiency Bar Examination for Officers in Grade III of Public /Provincial Management Service
Officers Service (MSO) – 2022

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III இற்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்காக எமது நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற வகுப்புக்களில் வினியோகிக்கப்படுகின்ற மாதிரி வினாப்பத்திரங்கள் அதற்கான விடைகளுடன் இத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. 

கடந்த வகுப்பில் கற்பிக்கப்பட்ட வினாப்பத்திரம் கீழே விடைகளுடன் தரப்பட்டுள்ளது. இவ்வகுப்புக்களில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமெனின் தொடர்புகொள்ள முடியும்.







விடைகள்

1. அரசாங்க உத்தியோகத்தர்கள் எல்லா வேலைநாட்களிலும் அலுவலகங்களில் கடமைபுரிய வேண்டிய நேரம் என்ன?

முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.15 மணி வரையாகும்.

2. அரசாங்க அலுவலகமொன்று பொது விடுமுறை நாட்கள் தவிர்ந்த வேறு எந்த நாளிலும் மூடப்பட வேண்டுமாயின் யாரின் அனுமதி பெறப்பட வேண்டும்?

உரிய அமைச்சின் செயலாளரிடம்

3. அரசாங்கத்தின் எந்தவொரு திணைக்களத்திற்கும் உத்தியோகத்தருக்கும் விடுக்கப்படுகின்ற ஒரு பொதுவான அறிவித்தல் வெளியிடப்படும் பிரசுரம் எது?

வர்த்தமானி

4. வர்த்தமானியை வெளியிடும் திணைக்களம் எது?

அரசாங்க அச்சுத் திணைக்களம்

5. அரசாங்க அலுவலகங்கள் யாவும் பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கென எல்லா வேலைநாட்களிலும் திறந்திருக்கும் நேரம் என்ன?

பிற்பகல் 3.00 மணி வரையும் திறந்திருத்தல் வேண்டும்

6. திணைக்களத் தலைவர் ஒருவர் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்க முடியாத பொதுமக்கள் வகுதியினர் இரண்டினை குறிப்பிடுக?

1) பணியாட்குழு உறுப்பினர்களிடமிருந்து தேர்தல்களின் போது ஆதரவு திரட்டும் நோக்கத்துடன் வருபவர்கள்

2) ஒப்பப்பணம் திரட்டும் அல்லது பணம் சேகரிக்கும் நோக்கத்துக்காக வரும் பொதுமக்கள்

7. செயலாற்றுகை தரங்கணிப்பு மேற்கொள்ளப்படும் காலம் தொடர்பில் கீழ்வரும் அலுவலர்களின் கால இடைவெளியினை குறிப்பிடுக.

பதவி நிலை அலுவலர்கள் – ஜனவரி 1 – டிசம்பர் 31

பதவிநிலை அல்லாதவர்கள் – ஆண்டேற்ற திகதி தொடக்கம் அடுத்த ஆண்டேற்ற திகதியின் முதல் தினம் வரை

8. ஒரு அலுவலரினால் பயன்படுத்தப்படும் கீழ்க்குறிப்பிடும் பதிவேடுகள் தொடர்பில் தெளிவு படுத்துக?

நினைவூட்டற் தினக்குறிப்பேடு: எதிர்வரும் நாட்களில் செய்ய வேண்டிய வேலைகளை நினைவு படுத்தும் வகையில் அந்தந்த தினங்களில் குறித்துக்கொள்ளும் பதிவேடு

தினக்குறிப்பேடு: குறித்த ஒரு நாளில் செய்து முடிக்கப்பட்ட வேலைகளை பதிவு செய்து கொள்ளும் பதிவேடு.

9. கோவைகள் பயன்பாடு தொடர்பில் பேணப்படும் கீழ்வரும் ஆவணங்கள் தொடர்பாக தெளிவு படுத்துக.

சுட்டட்டை: கோவைகள் இருக்கும் இடத்தினை சுட்டிக்காட்டும் ஆவணம்

அசைவட்டை: கோவைகளின் அசைவினை பதிவு செய்யும் ஆவணம்

10. கடமை ரீதியான கடிதத் தொடர்புகள் அனைத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிகள் இரண்டினை குறிப்பிடுக.

1) கூடியவரை ஒரு கடிதம் ஒரு விடயத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.

2) ஒவ்வொரு கடிதத்தினதும் இலக்கமும் திகதியும் அக்கடிதத்தின் வலதுபக்க மேல் மூலையில் இடப்படல் வேண்டும்;

3) கடிதமொன்றில் திகதி இடப்பட வேண்டியது, உத்தியோகத்தர் ஏதேனுமோர் இடத்தில் இருந்து கொண்டு அதில் கையொப்பமிடும் சந்தர்ப்பத்திலாகும்.

4) கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் விடயம் அதன் தலைப்பாக சுருக்கமாகக் காட்டப்படல் வேண்டும்.