DO III Past Paper

Monday, May 2, 2022

DO III Model Paper with Answer - Office System

அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இற்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்காக எமது நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற வகுப்புக்களில் வினியோகிக்கப்படுகின்ற மாதிரி வினாப்பத்திரங்கள் Development Officer Grade III Model Paper with Answer – Office System அதற்கான விடைகளுடன் இத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன.

கடந்த வகுப்பில் கற்பிக்கப்பட்ட வினாப்பத்திரம் கீழே விடைகளுடன் தரப்பட்டுள்ளது. இவ்வகுப்புக்களில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமெனின் தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.





1) சிறந்த கோவைப்படுத்தல் முறையினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் இரண்டினை குறிப்பிடுக?
கடமைகள் இலகுவானதாக இருத்தல்
ஆவணங்களை உடன் பெற்றுக்கொள்ள வசதியினை கொண்டிருத்தல் கோவைப்படுத்தல் ஆவணங்களுக்கு பாதுகாப்பினை அளிக்கின்றது.

2) ஆரம்ப ஆவணங்கள் முதலிலும் அடுத்துவரும் ஆவணங்கள் அதன் பின்னாலும் திகதி ஒழுங்கின்படி கோவையிடும் முறையின் பெயர் என்ன? புத்தக கோவை

3) ஒரு விடயத்துடன் தொடர்புபட்ட கடமைகளை நிறைவேற்றும் படிமுறைகளை உள்ளடக்கிய கோவையின் பெயர் என்ன? நடைமுறைக்கோவை

4) கிடைத்த கடிதங்களில் குறிப்புக்கள் எழுதப்படாத கோப்பு முறையின் பெயர் என்ன? பிளந்த கோவை

5) கோவை வகைகள் 6 வகையுள்ளன. ஆவற்றில் இரண்டின் பெயரை குறிப்பிடுக. விடயக்கோவை, மத்திய கோவை

6) குறிப்புத்தாள்கள் இல்லாத கோப்பு முறையின் பெயர் என்ன? புத்தக கோவை

7) ஒரு விடயத்துடன் தொடர்புபட்ட பல கோவைகளுக்கு பொதுவாக ஆரம்பிக்கப்படும் கோவையின் பெயர் என்ன? மத்திய கோவை

8) அலுவலகங்களில் கோவை செய்யும் முறைகள் மேற்கொள்ளப்படுவதற்கான தேவைப்பாடுகள் இரண்டினை குறிப்பிடுக? ஆவணங்களை தரம்பிரித்து கடமைகளை மேற்கொள்ளல், ஆவணங்களின் பாதுகாப்பு

9) பிளந்த கோவை முறையில் உள்ள நன்மைகள் இரண்டினை குறிப்பிடுக.
1) குறிப்புத்தாள்களின் மூலம் கோவையின் வரலாற்றை அறியலாம்.
2) பதவிநிலை அலுவலர் தீர்மானம் எடுப்பதற்கு இலகுவாகின்றது.

10) பிரயாண முற்பணம் வழங்கும் விண்ணப்பங்கள் விடயம் முடிவுற்ற நாளிலிருந்து எவ்வளவு காலத்திற்கு பேணப்பட வேண்டும்? – கணக்காய்வு முடியும்வரை

1. I. அலுவலகத்தில் கோப்புக்களை பேணுகையில் விடயக்கோப்பு (ஊயளந குடைந) எனும் ஒருவகை விடயக்கோப்பு பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை கோப்புக்கள் ஒவ்வொரு கோப்பினதும் இயல்பிற்கேற்ப மூன்று வகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று உடனடி விடயக்கோப்பாகும். ஏனைய இரு வகுதிகளும் எவை?
1) நடவடிக்கை எதிர்பார்க்கும் விடயக்கோப்பு
2) முடிவடைந்த விடயக்கோப்பு

II . தேவையற்ற ஆவணங்கள், பதிவேடுகளை அகற்றுவதன் முக்கியத்துவத்தை விளக்குக.
1) இடவசதியை பெற்றுக்கொள்ளல்
2) புதிய கோவைகளின் பாவனையை இலகுவாக்கல்
3) ஆவணங்களை தேடுவதற்கான நேரம் குறைக்கப்படும்
4) நேரம் சேமிக்கப்படுவதால் செய்யப்படும் வேலை அளவு அதிகரிக்கும்
5) தூய்மை பேணப்படும்.

2. I. தேர்தல் திணைக்களத்தின் நிர்வாகப்பிரிவில் தேர்தல் தொடர்பான கோவையொன்றின் கோவை இலக்கம் ADM/ELGEN/2/13 ஆகும். இக்கோவையில் உள்ள இறுதிக்கடிதத்தின் எனது இலக்கம் ADM/ELGEN/2/13/134 ஆகும். தற்பொழுது புதிதாக கடிதமொன்று இக்கோவையினூடாக அனுப்ப வேண்டியிருப்பின் அக்கடிதத்தின் எனது இலக்கம் என்ன?

ADM/ELGEN/2/13/135

II. இடமாற்றம் பெற்று வருகை தரும் அலுவலரொருவர் கடமை பொறுப்பேற்கும் போது பெற்றுக் கொள்ள வேண்டிய ஆவணங்கள் எவை? (சு.நிருபம் 7/2017இன்படி)

விடய கோவைபதிவேடு மற்றும் கோவைகள்

கிடைக்கப்பெறும் கடிதங்கள் தொடர்பான பதிவேடு (பழைய/புதிய)

ஆவணக்காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டவணங்கள் தொடர்பான பதவேடு

அனுப்ப வேண்டிய மற்றும் பெற்றுக்கொள்ள வேண்டிய அறிக்கைகள் தொடர்பான பதிவேடு

சுட்டட்டை

நினைவூட்டற் தினப்பதிவேடு

தன்வசமுள்ள அரசின் பொருட்கள் தொடர்பான பதிவேடு

3. I. கோப்பிடும் முறைகளை குறிப்பிடுக.

II. கடிதக்கோப்பொன்று சிறப்பாக பேணி வருவதற்காக எடுக்க வேண்டிய செயற்படி முறைகளை விபரிக்குக.
1) கோப்பு முறைமைகளிற்கிணங்க கோப்பிடல்
2) கோவைக்கு பொருத்தமான இலக்கமிடல்
3) சுட்டட்டை பாவித்தல்
4) அசைவட்டை பாவித்தல்
5) கோவை ஆவணங்களுக்கு பொருத்தமாக தொடர் இலக்கமிடல்

  1. I. கோவைப்படுத்தல் என்பது எதனை குறிக்கின்றது?

தேவை ஏற்படும்போது உடனே பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல், பாதுகாத்தல் ஆகிய செயன்முறையை குறிக்கின்றது.

II. தற்பொழுது அரச அலுவலகங்களில் கோவையிடல் முறைகள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கான காரணங்களை குறிப்பிடுக?
1) நிதிப்பற்றாக்குறைகள் காரணமாக காகதாதிகள் பற்றாக்குறை
2) உத்தியோகத்தர்களுக்கு சிறந்த பயிற்சியின்மை
3) உத்தியோகத்தர்களுக்கு நீண்டகாலமாக ஒருவிடயத்தையே வழங்கப்பட்டுள்ளதால் வினைத்திறன் குறைவடைகின்றமை
4) சிறந்த மேற்பார்வை இல்லாமை
5) கணக்காய்வு,பரசீலனைகள் என்பன குறவைடைந்துள்ளமை