DO III Past Paper

Monday, October 31, 2022

Model Paper 10 DO III EB Exam Office System

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தரம் III, II அலுவலர்களுக்கான வகுப்புக்களில் வழங்கப்படும் மாதிரி வினாப்பத்திரங்கள் இத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. இவ்வகுப்புக்களில் நீங்களும் கலந்துகொள்ள முடியும்.






பொருத்தமான விடையை புள்ளிக் கோட்டின் மீது சுருக்கமாக எழுதுக.

  1. லிட்ல் பீல்ட் (Little Field) என்பவரது கருத்துப்படி ஆவண முகாமைத்துவம் என்றால் என்ன?
    அலுவலக முறைமைகளில் ஆவணங்களாக கருதப்படும் அறிக்கைகள், படிவங்கள், கோவைகள், கடிதங்கள், ஊனுஇ ந-அயடை;. ஆகியவற்;றைக் கட்டுப்படுத்துதல்
  2. பக்கங்களை மையமாக வைத்து படிவங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஆவற்றை குறிப்பிடுக.
    ஓற்றை பக்க படிவம்
    பல்பக்க படிவம்
  3. அலுவலக வழிகாட்டி நூல்கள் 5 வகைப்படும் இவற்றில் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பு வரைபடம் எந்த வழிகாட்டி நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கும்?.
    நிறுவன வழிகாட்டி
  4. கோவைப்படுத்தலின் பிரதான நோக்கங்கள் மூன்று தருக.
    தேவையான போது பெற்றுக் கொள்ளல்
    விரைவாக பெற்றுக் கொள்ளல்
    பாதுகாப்பாகப் பெற்றுக் கொளளல்
  5. அலுவலகங்களுக்கான பொறுப்புக்களை திட்டமிடும் பொழுது இரண்டு வகைகளில் அவற்றை செயற்படுத்தலாம். ஆவற்றை குறிப்பிடுக.
    மையப்படுத்தல்
    பரவலாக்கல்;.
  6. அலுவலகமொன்றுக்கான தளக்கோலமொன்றை தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டியஅ ம்சங்கள் மூன்று தருக?
    தேவையின் அளவுகளை நிர்ணயித்தல்
    கிளைகளை தீர்மானித்தல்
    அவற்றுக்கு தேவையான இடங்களை தீர்மானித்தல்
  7. கிடைக்கும் கடிதங்களில் குறிப்புக்கள் எழுதிக்கொள்ளும் வகையில் பேணப்படும் கோப்பு முறை எது? புத்தக கோப்பு முறை
  1. பொறுப்புக்களை ஒருமுகப்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள் 3 தருக?
    சேவை பெறுனர்கள் அதிருப்தியடைவர் (எல்லா கருமங்களையும் ஒரே இடத்தில் மாத்திரம்)
    கீழ்மட்ட ஊழியர்கள் தீர்மானங்கள் எடுக்க முடியாது
    கோவை மற்றும் அலுவல்கள் அதிகதரித்தல்
  2. கைவிடப்படும் கோப்புக்கள் என்றால் என்ன?
    கோவையின் நடவடிக்கைகள், மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்கும் காலம் என்பன நிறைவு பெற்று அழிப்பதற்கோ, அல்லது பதிவேட்டறைக்கோ அனுப்புவதற்கோ தீர்மானிக்கப்பட்ட கோவைகள் கைவிடப்படும் கோப்புக்கள் எனப்படும்
  3. அலுவலகமொன்றை திட்டமிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான அம்சங்கள் மூன்று தருக.
    அலுவலகத்தின் அமைவிடம்
    உள்ளார்ந்த சூழல்
    தளக்கோலம்

பகுதி II

1.I. அலுவலக வழிகாட்டி நூல்களில் நிறுவன வழிகாட்டியில் உள்ளடங்கும் விடயங்களை குறிப்பிடுக.
நிறுவனத்தின் தூரநோக்கு
செயற்பணிக் கூற்று
திணைக்களத்தின் ஒழுங்கமைப்பு வரைபடம்.
அதிகாரங்கள்
பொறுப்புக்கள்

II. அலுவலக வழிகாட்டி நூல்களினால் கிடைக்கப்பெறும் நன்மைகள் 5 இனை குறிப்பிடுக.
நிறுவனத்தைப் பற்றிய அனைத்து விடயங்களையும் அலுவலர்களும் சேவை பெறுனர்களும் அறிந்து கொள்வதற்கு உதவும்.
பணி புரியும் ஊழியர்கள் கைநூல்களின் வழிகாட்டல்களின் படி அன்றாடக் கருமங்களை ஆற்றுதல் இலகு.
பணியாளர் – சேவை பெறுனர் தொடர்பு இலகுவில் பேணக்கூடியதாகக் காணப்படும். ஏனெனில் நிறுவன அலுவல்கள் பற்றி இரு தரப்பினரும் நன்றாக அறிந்திருப்பதனால். |
ஒவ்வொரு பணியாளர்களினாலும் கடமைகள் வரையறுக்கப்பட்டிருப்பதனால் கண்காணிப்பது இலகு.
புதிதாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்தோரைப் பயிற்றுவிக்க வழி காட்டி நூல்கள் பெரிதும் உதவும்.

2.I. ஆவண முகாமைத்துவத்தின் முக்கிய நோக்கங்கள் 5 தருக.
நிறுவனத்தைப் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு
நிறுவனத்தின் முன்னேற்றத்தை அளவீடு செய்வதற்கு
நிறுவனத்தின் பிழைகளை திருத்திக் கொள்வதற்கு
சட்டத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு
நிறுவனத்தின் அன்றாடச் செயன்முறைகளுக்கு உதவியாக இருப்பதற்கு

II. கோவைகளின் அசைவினை பதிவு செய்வதற்கான அசைவட்டையில் உள்ளடங்கும் விடயங்கள் எவை?.
தொடர் இலக்கம்
கோவையின் பெயர்
கோவையின் இலக்கம்
திகதி
கோவை அனுப்பப்படுவதற்கான காரணம்
கோவை யாருக்கு அனுப்பப்படுகிறது
கோவை மீளக்கிடைக்கும் திகதி

3. I. பணியாட் குழுவினரை பயிற்றுவிப்பதன் மூலம் நிறுவனத்திற்கு கிடைக்கும் அனுகூலங்கள் எவை?
பிற சொத்துக்களைப் போலவே பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்களும் நிறுவனத்தின் சொத்தாகும்.
பொதுமக்களை திருப்திப் படுத்துவதற்கு பயிற்சி பெற்ற பகுதியினரை ஒரு வழிமுறையாக காணல்
வேலையோட்டத்தில் தாமதம், பிழை ஆகியவற்றினை குறைத்தல்
மேற்பார்வையின் மீது நேரத்தை மீதப்படுத்தல்.
கையளிப்பை சுலபமானதாக செய்தல்

II. பணியாட் குழுவினரை பயிற்றுவிக்கும் பிரதான முறைகள் எவை?.

நிறுவனத்தின் பின்னணிப் பயிற்சி

உத்தியோகத்தரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பயிற்சி

அடிப்படைபயிற்சி (உதாரணம்)
a. நிருவாக முறைமை
b. அலுவலக முறைமை
c. பொதுமக்கள் தொடர்பு முறைகள்.

4. I. சீரான மாதிரி படிவம் ஒன்றினை தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் எவை?

படிவத்தின் தேவை (நோக்கம்)

இலகுவான மொழி

விரைவாக நிரல்படுத்தக் கூடியவகையில் தரவுகள் அமைதல்

கோவையிடுவதற்கான அளவு

இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளக் கூடியவகையில் அமைதல்

தகவல்களை தெரிவிக்க போதுமான இடைவெளி

II. அலுவலகமொன்றின் பணிகளை ஒருமுகப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள் எவை?
கண்காணிப்பது இலகு
தரப்படுத்தல் இலகு
அபிவிருத்தி செய்வது இலகு
கட்டுப்பாடு செய்தல் இலகு
குறைந்த வளங்கள் போதுமானது.