DO III Past Paper

Saturday, October 1, 2022

Model Paper DO III EB Exam Computer test with answers

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கான மாதிரி வினாப்பத்திரம் விடைகளுடன்








Part II

I. நீங்கள் ஏதாவது தகவலை இலங்கை வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவில் தேடிப்பார்க்க வேண்டியுள்ளதெனக் கொள்க ஆனால் அவர்களது இணையத்தளத்தின் முகவரி தெரியாது ஆயின் இணையத்தை பயன்படுத்தி அவ் இணையத்தளத்தை தேடுவது எவ்வாறு?

PSC அல்லது PSC NP எனும் எழுத்துக்களை தேடற்பொறியில் தட்டெழுத்திட்டு தேடுவதன் மூலம் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் இணையத்தள முகவரியை அறிந்து அதன் மூலம் உரிய இணையத்திற்கு செல்ல முடியும்.

II. இலவச மின்னஞ்சல் சேவையை வழங்குனர்களின் இரண்டு பெயர்களை தருக?

Google, Yahoo

III. மின்னஞ்சல் பாவனையில் பயனர் பெயரின் (User name) நோக்கம் யாது?

மின்னஞ்சலுக்கான ஒரு விலாசமாக பிரயோகித்தல்

2

I. கணினி வலையமைப்பாக்கத்தின் அனுகூலங்கள் எவை?.

அ) தரவுகளையும் தகவல்களையும் கணினிகளுக்கிடையே பரிமாறக் கூடியதாக இருத்தல்
ஆ) தரவுகளை குறைந்த இடத்தில் தேக்கி வைத்தல்
இ) வளத்தை பொதுவாக பயன்படுத்தல்
ஈ) ஒருமுகப்படுத்திய மென்பொருட்களை கட்டுப்படுத்தல்
உ) யாதாயினும் ஓர் இடத்தில் என் நேரத்திலும் இணைப்பதற்கான ஆற்றல்
ஊ) பாதுகாப்பு
எ) மின்னஞ்சல்

II. வலையமைப்பாக்கத்தின் தீமைகள் எவை?

அ) தரவுகளுக்கு குறைந்த பாதுகாப்பு
ஆ) வலையமைப்பு தகர்வுறுதல்
இ) நச்சுநிரல்
ஈ) கணினி தவறுகள்
உ) பயிற்சி தேவைகள்

3) e-Government செயற்திட்டம் வெற்றியடையாமைக்கான காரணங்கள் நான்கு தருக.

அ) துறைசார்ந்த தொழிநுட்பவியலாளர்கள் பற்றாக்குறை
ஆ) நிதி பற்றாக்குறை
இ) வளங்கள் பற்றாக்குறை
ஈ) போதிய பயிற்சிகள் வழங்கப்படாமை

4

1 PS/2 துறை

2 சமாந்தரத் துறை

3 HDML துறை

4 RJ 45 துறை

5 ஒலிச் சாதன துறை

6 USB துறை

7 வீடியோ துறை

8 தொடர் நிலை துறை

5 I கணினிகளை வலையமைப்பாக்குவதன் அடிப்படை நோக்கங்கள் எவை?

தொடர்பாடல், வளங்களை பகிர்ந்து பயன்படுத்தல்

II. கணினி வலையமைப்பை பயன்படுத்தி பகிர்ந்து கொள்ளக்கூடிய வளங்கள் எவை?.

வன்பொருள் – பிறிண்டர், ஸ்கேனர்
மென்பொருள்
தரவுகளும் தகவல்களும்

இந்த வகுப்புக்களில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமாயின் தொடர்பு கொள்ளுங்கள்