DO III Past Paper

Thursday, November 3, 2022

EB Exam DO III Model Paper 11 Office System

அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 111 இற்கான அலுவலக முறைமைகள் மாதிரி வினாப்பத்திரம் விடைகளுடன்

இதற்கான வகுப்புக்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வினாப்பத்திரத்திலுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும்.

Development officer eb exam model paper series 11 with answer







படிவம் முக்கியமான நான்கு பகுதிகளை கொண்டதாக அமைய வேண்டும் அவற்றை குறிப்பிடுக?
இலக்கம் – அடையாளம் காண்பதற்காக இலக்கம் வழங்கப்படல்
தலைப்பு – உரியநோக்கத்தை தெரிவித்தல்
அறிவுறுத்தல் – படிவத்தை நிரப்புவதற்கு துiணை புரியும் வகையில்
படிவத்தின் அங்கம் – எளிய வசன நடை, கோடுகள், பெட்டிகள்,

அலுவலகமொன்றில் பயன்படுத்தப்படும் எழுத்து மூலமான தொடர்பாடல் முறைகள் இரண்டினை குறிப்பிடுகள்.
கடித தபால் முறை
இலத்திரனியல் தபால் முறை

செயற்திறன் மதிப்பீடு செய்வதன் நன்மைகள் இரண்டு தருக?.
கடமைப் பொறுப்புக்களை அறியக் கூடியதாகவுள்ளது
எத்துறையில் பயிற்சி தேவையென இனம்கண்டு அதனை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும்.

அலுவலக கைநூலில் உள்ளடங்கும் விடயங்கள் இரண்டு தருக.
செய்யக்கூடிய வேலைகளை எந்த முறையில், யாரால், எங்கு, எப்பொழுது, செய்ய வேண்டும் என்ற விளக்கம்
பாவிக்கப்பட வேண்டிய படிவங்களும், அவை எவ்வாறு பாவிக்கப்பட வேண்டும் என்பதும்

படிவங்கள் பயன்படுத்துவதால் அலுவலகங்களுக்கு கிடைக்கக் கூடிய பயன்கள் இரண்டு தருக.
தகவல்களை விரைவாகவும் துல்லியமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்
தகவல்களை விரைவாக நரல்படுத்தலாம்.

அலுவலர்கள் நினைவூட்டற் பதிவேட்டினை பேணவேண்டும் என திணைக்களத்தலைவர்கள் வலியுறுத்துவதற்கான காரணம் என்ன?
பொதுமக்கள் சேவைகள் உரிய தினத்தில் முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக

ஒரு அலுவலரின் சுயவிபரக் கோவையுடன் வரலாற்றுத்தாள் பேணப்படுவதற்கான காரணம் என்ன?
ஊழியர் தொடர்பான வரலாற்றினை மிக இலகுவாக அறிந்து கொள்வதற்காகவும், ஓய்வுதியத்திற்கான செயற்பாடுகளுக்கு சமர்ப்பிப்பதற்காகவும்.

அழிக்கப்படாது பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் 2 தருக?
கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பான கோவையொன்று
செயலாற்றுகை பற்றிய ஆவணமொன்று அல்லது பதிவேடொன்று:

“குறுக்கு குறிப்புக்கள் இடல்” என்பதால் கருதப்படுவதென்ன?
கிடைக்கப்பெறும் கடிதத்தில் உள்ள விடயம் தொடர்பாக ஏற்கனவே கிகைகப்பெற்று கோவையிடப்பட்டுள்ள கடிதங்களின் தொடர் இலக்கங்களை குறித்துக்காட்டல்

உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றின் தொடர்பாடலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் மூன்று தருக.

பகுதி 2

2 I. ஆவணங்களை கோப்பிடும் போது பிளந்த கோப்பு முறையால் கிடைக்கும் நன்மைகள் 5 தருக.
கடிதங்களின் சாராம்சங்களை குறிப்புத்தாள் மூலம் அறிந்து கொள்ள முடியும்
விடயத்தின் வரலாற்றினை குறிப்புத்தாள் மூலம் அறிந்து கொள்ள முடியும்
கடிதங்கள் தொலைந்தாலும் அது தொடர்பான தகவல்களை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.
திணைக்களத்தலைவர் விரைவாக தீர்மானம் எடுக்க முடியும்.
வேலை நேரத்தை சேமிக்க முடியும்

II. அசைவட்டை



3 I. படிவங்களின் கட்டுப்பாடு ஏன் அவசியமாகின்றது?
சிக்கனத்தை பேண
வீண்விரயத்தை தடுக்க
விற்பனை செய்வதை தடுக்க
படிவங்களை எழுதி பூரணப்படுத்தி மோசடி செய்வதை தடுக்க

II. கடிதக் கோப்பு பதிவேடொன்றை பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் எவை?.
நாளதுவரைப்படுத்தல்
புதிதாக ஆரம்பிக்கப்படும் கோவைகள் உரிய திகதி அடிப்படையில் பதிவு செய்யப்படல்
முடிவுறுத்தப்படும் கோவைகளுக்கான இலக்கங்களை வேறு புதிய கோவைகளுக்கு வழங்காதிருத்தல்
ஒரே இலக்கத்தில் வேறு கோவைகள் ஆரம்பிக்கப்படாதிருத்தலை தொடர்ச்சியாக உறுதிப்படுத்தல்
பதிவேட்டிலுள்ள நடப்பு கோவைகளின் எண்ணிக்கையையும் கையிருப்பிலுள்ள கோவைகளின் எண்ணிக்கையையும் தொர்ச்சியாக பரிசீலனை செய்தல்

4 I. அரச கடிதமொன்றை வரைவு செய்யும் போது அவதானம் செலுத்த வேண்டிய விடயங்கள் எவை?

எனது இலக்கம்.
பதில் கடிதமாயின் உமது இலக்கம்
அனுப்புபவரின் பெயர், அல்லது பதவிப்பெயர்
பொருத்தமான தலைப்பு சுருக்கமாக
பதில் கடிதமாயின் கிடைத்த கடிதத்தின் தலைப்பு வரைவுக்கடிதத்தின் தலைப்பாக அமைதல்
உள்ளடக்கம்
இணைப்புக்கள்
கையொப்பம்
பிரதிகள்

II. பதவிநிலை உத்தியோகத்தரின் ஒப்பத்துக்காக கடிதமொன்றை முன்வைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் எவை?

கடிதத்திற்கான விடயக்கோவையுடன் கடிதம் சமர்ப்பிக்கப்படல்
மேற்பார்வை அலுவலரூடாக கடிதம் சமர்ப்பிக்கப்படல்
திணைக்களத்தலைவரால் அனுமதிக்கப்பட்ட வரைபுக்கடிதம்
திகதி இடப்படாது கடிதத்ததை முன்வைத்தல்
குறிப்புத்தாளில் பொருத்தமான வகையில் குறிப்புக்கள் எழுதப்பட்டிருத்தல்
கடித விடயம் தொடர்பாக ஏற்கனவே கிடைக்கப்பெற்று கோவையில் உள்ள கடிதங்களின் தொடர் இலக்கங்கள் அலுவலகப்பிரதியில் குறித்துக்காட்டல் (குறுக்கு தொடர்பு குறிப்பு)
கடிதத்தில் குறிப்பிட்ட வகையில் இணைப்புக்கள் இணைக்கப்படடிருத்தல்
கடிதத்தின் முன்னுரிமை தொடர்பிலான அடையாளங்களுடன் சமர்ப்பிக்கப்படல்
அலுவலகப்பிரதியானது கோவையில் கட்டப்பட்டிருத்தல்
பிரதிக் கடிதங்கள் அனுப்புபவர்களுக்கு ஏற்றவகையில் அடையாளமிடல்