DO III Past Paper

Friday, December 23, 2022

Commuted Travelling Allowance MSO II EB

Commuted Travelling Allowance CTA Claim, Combined Allowance Duty Time, New PSC Rules

Model Paper with answer








Answer

1. i. அரசியல் உரிமைகளை அனுபவிப்பதற்கு உரித்து இல்லாத அலுவலர்கள் யார் எனக் குறிப்பிடுக?

நீதித்துறை அலுவலர்

ஆயுதப் படைச் சேவைகளின் அலுவலர்

பொலீஸ்படை உத்தியோகத்தரொருவரும் பொலிஸ் கடமைகளை நிறைவேற்றுகின்ற ஏனைய சமாதான அலுவலர்களும் (உ-ம் கிராம சேவை அலுவலர்)

சிறைச்சாலை அலுவலர்

அரசாங்க சேவையிலுள்ள பதவிநிலை அலுவலர் அல்லது மேற்பார்வை அலுவலர்

தேர்தல் திணைக்களத்தில் (பாராளுமன்ற, உள்ளுராட்சி) சேவையாற்றுகின்ற அலுவலர் அவர் அதில் தொடர்ந்து சேவையாற்றும் வரை

ii. அரசியல் உரிமை அற்ற அலுவலர் ஒருவருக்கு தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் எவை?.

சனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மக்கள் தீர்ப்பு, உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் என்பவற்றில் பங்குபற்றுதல்;

சனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மக்கள் தீர்ப்பு, உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் என்பவற்றில் போட்டியிடுகின்ற வேட்பாளரொருவருக்கு ஏதேனுமொரு விதத்தில் உதவி புரிதல்;

சனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மக்கள் தீர்ப்பு, உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் என்;பவற்றில் தான் பெயர் குறித்து நியமனம் செய்யப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்தல்.

iii. அரசாங்க சேவைகளுக்காக சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோருகின்ற ஒழுங்கு முறையை விளக்குக

சட்டமா அதிபரிடம் மதியுரை அல்லது ஆலோசனை கோருகின்ற போது அவ்வாறு மதியுரை அல்லது ஆலோசனை கோரப்படுவது என்ன விடயம் தொடர்பாகவென தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.

உரிய விடயம் தொடர்பான பூரண விடயங்களடங்கிய நிகழ்வு வெளிப்படுத்துகையொன்றையும் அவருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

அத்தோடு அலுவலகக் கோவையொன்று சமர்ப்பிக்கப்படின் அதன் உரிய பக்கங்களில் தொடர்பு விபரங்களும் குறிப்பிடப்படல் வேண்டும்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பாக முன்பும் சட்டமா அதிபரிடம் அபிப்பிராயம் வினவப்பட்டிருப்பின் அது தொடர்பாக அவர் வெளியிட்ட அபிப்பிராயம் பற்றிய தொடர்பினையும் குறிப்பிடல் வேண்டும்.

2.i. குற்றஞ்சுமத்தப்பட்ட அலுவலர்களுக்காக எதிர்க்காப்பு அலுவலர் தோற்றுவது தொடர்பாக தாபனவிதிக்கோவை ஏற்பாடுகளை குறிப்பிடுக.
XLVIII 18ம் பிரிவின்படி
ஒழுக்காற்று அதிகாரியின் எழுத்துமூல முன்னங்கீகாரத்துடன் பொருத்தமான ஒருவரை தன் சார்பில் எதிர்க்காப்பு அலுவலராக நியமித்துக் கொள்வதற்கு குற்றஞ்சாட்டப்பட்ட அலுவலர் உரித்துடையவராவார்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அலுவலர் அத்தறுவாயில் தன் சார்பில் தோற்றுவதற்காக அரச சேவையில் உள்ள அல்லது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நபரொருவரை எதிர்க்காப்பு அலுவலராக நியமித்துக் கொள்ளலாம்.

குற்றஞ்சாட்டப்படுள்ள அலுவலரொருவர் ஒழுக்காற்று விசாரணையின் போது அவர் சார்பில் எதிர்க்கப்பபு அலுவலராக சட்டத்தரணியொருவரை நியமித்துக் கொள்ளக் கோரியுள்ள சந்தர்ப்பத்தில் குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் தன்மைக்கேற்ப அத்தகைய ஒரு வெண்டுகோளை சம்மதிப்பதற்கு ஒழுக்காற்று அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.

எதிர்க்காப்பு அலுவலராக பெயரிடப்பட்டுள்ள நபர் அரச ஊழியரான சட்டத்தரணி ஒருவராக இருப்பின் ஒழுக்காற்று அதிகாரியானவர் அவரை அரச அலுவலரொருவர் எனக்கருதுதல் வேண்டும்.

எவரேனும் ஒரு எதிர்க்காப்பு அலுவலர் தான் தோற்றுகின்ற ஒழுக்காற்று விசாரணையை உரியபடி நடாத்துவதற்கு தடையேற்படும் வகையில் நடந்துகொள்வதாக நியாய சபைக்கு தெரியவரும் சந்தர்ப்பத்தில் நியாய சபை அதுதொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை குற்றஞ்சட்டப்பட்டுள்ள அலுவலரின் ஒழுக்காற்று அதிகாரியானவருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஒழுக்காற்று அதிகாரியானவர் அவ் எதிர்க்காப்பு அலுவலருக்காக தான் வழங்கிய சம்மதத்தை நீக்கிவிட்டு மற்றொரு எதிர்க்காப்பு அலுவலரை நியமித்துக் கொள்ளுமாறு குற்றஞ்சாட்டப்பட்ட அலுவலருக்கு விதிப்பதற்கு முடியும்.

ii. அலுவலர் ஒருவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கையொன்று எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சேவையிலிருந்து கேட்டு விலகும் கடிதம் கிடைக்கப் பெறும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?

அரச அலுவலர் ஒருவருக்கு எதிராக முறைமைசார் ஒழுக்காற்று நடவடிக்கை முறைமையொன்று ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆயினும் ஒழுக்காற்று கட்டளை விதிக்கமுன் அந்த அலுவலர் பதவி விலகுவதற்காக எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்தால் அவரின் வேண்டுகோளை மறுக்க வேண்டும்.

அலுவலர் பதவி விலகுதல் மறுக்கப்பட்டபின் கடமைக்கு சமூகமளிக்கத்தவறினால் ஒழுக்காற்று அதிகாரியானவர் தாபன விதிக்கோவையின் ஏ அத்தியாயத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலுவலர் தற்போது பணித்தடைக்கு ஆளாகியும் அவருக்கு எதிராக தற்போது நடாத்தப்படுகின்ற முறைமைசார் ஒழுக்காற்று விசாரணையில் சமூகமளிக்கத்தவறியும் இருப்பின் அச் சந்தர்ப்பத்தில் ஒழுக்காற்று அதிகாரியானவர் தாபன விதிக்கோவையின் ஏ அத்தியாயத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

iii. தாபன விதிக் கோவையின் V ஆம் அத்தியாயத்தின் 4ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் அரச சேவையிலிருந்து கேட்டு விலகுதல் பற்றிய ஏற்பாடுகள் யாவை?

திணைக்களத் தலைவர் மூலம் நியமன அதிகாரிக்கு ஒருமாத அறிவித்தல் கொடுத்து அல்லது அதற்குப் பதிலாக ஒருமாத வேதனத்தைக் கொடுத்து உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவியினின்றும் விலகலாம்.

நியமன அதிகாரி அவருடைய கேட்டுவிலகலை ஏற்க மறுக்குமிடத்து, உத்தியோகத்;தர் கடமைப் பொருட்டுச் சமுகமளிக்கத்தவறின், அவ்வாறு கடமைக்கு சமுகமளித்தல் நிறுத்தப்பட்ட நாள் முதல் அவர் பதவியை விட்டு நீங்கியவராகக் கருதப்படுவார்.

ஓய்வூதிய உரித்துடைய உத்தியோகத்தர் ஒருவர் கேட்டு விலகினால், ஓய்வூதியமொன்றிற்கோ அல்லது பணிக்கொடையொன்றிற்கோ உள்ள உரிமைகள் அனைத்தும், உரித்தற்றுப் போகின்றதென, திணைக்களத் தலைவர் அவ்வுத்தியோகத்தருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும்.

கேட்டு விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டமை உரிய உத்தியோகத்தருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படல் வேண்டும்.

3.i. அரச சேவைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தரின் தனி நபர் கோவையில் உள்ளடக்க வேண்டிய ஆவணங்கள் பத்தினை பெயரிடுக?

நியமனக் கடிதத்தின் பிரதி

கடமை பொறுப்பேற்றல் கடிதம்

வரலாற்றுத்தாள்

விதவைகள், அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பிரகடனத்தின் பிரதி

தேசிய ஆள் அடையாள அட்டையின் சான்றுப்படுத்திய பிரதி

பிறப்புப் பதிவுச் சான்றிதழ்

பதவிக்குரிய அடிப்படைக் கல்வித் தகைமைகளை உறுதிப்படுத்தும் கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளின் சான்றிதழ்களின் ஒளிப்படப் பிரதிகள்

படிவம் பொது 160 இல் சேவை உடன்படிக்கை

படிவம் பொது 261 இல் சொத்துகளின் பிரகடனம்

சுகாதாரம் படிவம் 169 மீதான மருத்துவ அறிக்கை. Medical Report

சத்தியப் பிரமாணத்தின் மூலப் பிரதிகள்

ii. அரசாங்க இல்லங்களை வழங்குவதற்கு உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிகாட்டல்கள் ஐந்தினை குறிப்பிடுக.

காத்திருப்புப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த காலம்.

பிள்ளைகளின் எண்ணிக்கை (18 வயதுக்குக் குறைந்த ஆண் பிள்ளைகள் மற்றும் விவாகமாகாத பெண் பிள்ளைகள் மாத்திரம்)

வாழ்க்கைத்தர நிலைமை முக்கியமாக மோசமாகவிருக்குமிடத்து, அதைப்பற்றியும் வாடகை வீடொன்றில் குடியிருக்கும் உத்தியோகத்தர் ஒருவராயின், அவரின் சேவை நிலையத்திற்கும் அவரின் வதிவிடத்துக்குமான தூரம்

உத்தியோகத்தரினது சாதாரண கடமைகளின் இயல்பிற்கேற்ப, அவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வசித்தல் அல்லது இரவுக் கடமைக்காக வரவேண்டிய அவசியமா என்ற விடயம்.

உத்தியோகத்தரின் பதவி நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்ற விடயம்.

நடந்து செல்ல அல்லது போக்குவரத்துச் செய்ய இயலாத விதத்திலான கடும் நோயினால் பீடிக்கப்பட்டிருத்தல் என்ற விடயம்.

4.i. இடமாற்றம் பெற்றுச் சென்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் சம்பந்தமாக அவரது முந்திய நிறுவனத் தலைவரினால் புதிய நிறுவனத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆவணங்களைப் பெயரிடுக.

இற்றைப்படுத்தப்பட்ட வரலாற்றுத்தாளுடன் இற்றைப்படுத்தப்பட்ட பெயர்வழிக்கோப்பு;

உத்தியோகத்தருடைய அடுத்த சம்பள ஏற்றத்தைக் கொடுப்பனவு செய்வதற்காக உத்தியோகத்;தரின் கடைசிச் சம்பள ஏற்றத்திகதியிலிருந்து இடமாற்றத்தின் நடைமுறைப்படுத்தல் திகதிவரையுள்ள காலப்பகுதிக்கான அவருடைய எழுத்திலான சிபாரிசு;

உத்தியோகத்தரின் செயலாற்றுகை மதிப்பீட்டு அறிக்கை;

உத்தியோகத்தரின் லீவு விபரங்கள்;

உத்தியோகத்தரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட விடுமுறைப் புகைவண்டி ஆணைச் சீட்டுகள் பற்றிய கூற்று;

உத்தியோகத்தரின் சம்பள விபரங்கள்;

உத்தியோகத்தரி;ன் கடன் வரவு மீதிக்கூற்று;

தனது நிறுவனத்தில் சேவையாற்றிய மொத்தக் காலப்பகுதிக்கேற்ப உத்தியோகத்தரின் விதவைகள் ஃ தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் பங்களிப்புத் தொகை தொடர்ச்சியாக அறவிடப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்.

ii. அமைச்சு செயலாளர்களின் கடமைப் பொறுப்புக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நான்கினை குறிப்பிடுக.

அமைச்சரின் பொதுப் பணிப்புரைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைவாகத் தனது அமைச்சின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத் திணைக்களங்களின் நடிவடிக்கைகளை மேற்பார்வை செய்வார்.

அமைச்சின் கீழுள்ள திணைக்களத் தலைவர்கள் ஊடாக அரசாங்கக் கொள்கைகளைச் செயல்படுத்துதல் செயலாளரின் பொறுப்பாகும்.

திணைக்களமொன்றிற்குரித்தான அமைச்சரவைத் தீர்மானங்களை அமைச்சின் செயலாளர் அத்திணைக்களத்துக்கு அறிவிப்பார். இத்தீர்மானங்கள் செயல்படுத்தப் படுகின்றமைக்குப் பொறுப்பாயிருத்தல் செயலாளருக்குரிய பணியாகும்.

செயலாளர் திணைக்களமொன்றின் கோப்பில் அமைச்சரின் கவனத்துக்கென குறிப்பெழுதுவாராகில் அமைச்சர் தனது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அக்கோப்பில் எழுத வேண்டும்.

செயலாளரொருவர் தனது மேற்பார்வையின் கீழுள்ள திணைக்களமொன்றிற்குரிய எல்லாத் தாபன விடயங்களுக்கும் பொதுவாகப் பொறுப்புக் கூறுதல் வேண்டும். ஒழுங்கு விதிகளாலோ அல்லது பொது நிருவாக அமைச்சின் செயலாளரினாலோ அல்லது தாபனப் பணிப்பாளரினாலோ செயலாளருக்குக் கையளிக்கப்பட்டுள்ள தாபன விடயங்கள் தொடர்பான பணிகளை அவர் ஆற்றுதல் வேண்டும்.