DO III Past Paper

Friday, December 16, 2022

நியமனம் இடமாற்றம் அட்டவணை MSO II

Model Paper with answer MSO II EB exam








Answer

I. அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயற்பாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அரச நியமனம் தொடர்பான பொது நிபந்தனைகள் யாவை என்பதை விளக்குக..நியமிப்புச் செய்யும் அதிகாரி சேவைப்பிரமாணக்குறிப்புக்கு அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு இணங்க நேர்முகப் பரீட்சைச் சபைகளை நியமித்தல் வேண்டும்.நேர்முகப் பரீட்சைச் சபையொன்று சேவைப் பிரமாணக் குறிப்பு அல்லது ஆட்சேர்ப்புத் திட்டம் விதித்துரைக்காதவிடத்து தலைவர் அடங்கலாக ஆகக்குறைந்தது 03 உறுப்பினர்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

நேர்முகப் பரீட்சையில் புள்ளிகள் குறித்தொதுக்கப்படுமிடத்து புள்ளியிடல் திட்டமானது வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களைக் கோருகின்ற விளம்பரத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பகாரர் ஒவ்வொருவரும் நேர்முகப் பரீட்சைச் சபையின் பூரண அமர்வினால் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு உள்ளாக்கப்படல் வேண்டும்.

நேர்முகப் பரீட்சை முடிவடைந்த உடன் நேர்முகப் பரீட்சைச் சபையினர் விண்ணப்பகாரர்கள் பெற்ற புள்ளிகளின் ஒழுங்கில் திறன் அடிப்படை நிரலை தயாரித்தல் வேண்டும். அதில் ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பமிடல் வேண்டும்.;.

திறமை ஒழுங்கில் நியமிப்புகளை செய்யுமிடத்து கடைசி வெற்றிடத்துக்கு சமமான புள்ளிகளைப் பெற்ற பல விண்ணப்பகாரர்கள் இருக்குமிடத்து கையளிக்கப்பட்ட தத்துவம் உள்ள அதிகாரி, வெற்றிடங்களை நிரப்பாமல் விட்டு விட்டு அதை உடனடியாக ஆணைக்குழுவிற்கு அறிவித்து அதன் அறிவுறுத்துரைகளைக் கோருதல் வேண்டும்.;.

ஆட்சேர்ப்பானது போட்டிப் பரீட்சையொன்றின் பெறுபேறுகள் மீது மட்டுமே செய்யப்படுமிடத்து நியமிப்பானது போட்டிப் பரீட்சையில் விண்ணப்பகாரர்களினால் பெறப்பட்ட புள்ளிகளின் திறமை அடிப்படையில் மட்டும் செய்யப்படல் வேண்டும்..

II. அரச சேவைக்கு நியமிப்பதற்கு தகுதியற்றோர் யாவர்?.

  1. கருணை மாற்றுவழியாக ஓய்வுபெறுவிக்கப்பட்ட, அல்லது ஒரு தண்டனையாக ஓய்வுபெறுவிக்கப்பட்ட அல்லது முறைமையான ஒழுக்காற்று விசாரணைக்குப் பின்னர் பதவி நீக்கஞ்செய்யப்பட்ட அல்லது தமது பதவியை வெற்று வெறிதாக்கிய ஒருவர்
  2. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கு எதிராக புரிந்த குற்றவியல் தவறொன்றின் காரணமாக சட்ட நீதிமன்றமொன்றினால் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவர்
  3. கடன்தீர்க்க வகையற்றவர் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட ஒருவர்
  4. இலங்கைப் பிரசையல்லாத அல்லது பிரசாவுரிமையில்லாத ஒருவர்

III. மீண்டும் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு தகுதியற்றோர் யாவர்?.
வினைத்திறனின்மைக்காக கட்டாய இளைப்பாறுகைக்குட்படுத்தப்பட்ட
வேலை நீக்கத்துக்குப் பதிலீடாக கருணையுள்ள மாற்று நடவடிக்கைக்காக இளைப்பாறலுக்குட்படுத்தப்பட்ட
ஒழுக்காற்று விசாரணையின் பின்பு சேவையிலிருந்து நீக்கப்பட்ட
தனது பதவியிலிருந்து தானே விலகி மீண்டும் கடமைகளைத் தொடங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆள் ஒருவர்

அரசாங்க சேவையில் மீள நியமனம் பெறத் தகைமையற்றவராவார்.

  1. I. வைத்திய காரணங்களுக்காக அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மீண்டும் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நிறைவேற்றத் தேவையான விடயங்கள் எவை?
    அவர் இளைப்பாறிய நேரத்தில் 50 வயது பூர்த்தியடையாதவராய் இருத்தல்வேண்டும்.

அவர் பதவியிலிருந்து இளைப்பாறிய திகதியிலிருந்து ஒரு வருடமாவது கழிந்திருத்தல் வேண்டும்.

அவர் இளைப்பாற முன்பு அவரது வேலையும் நடத்தையும் திருப்திகரமாக இருந்திருத்தல் வேண்டும். (எனினும் அவரது நோய் காரணமாக அவரது வேலையில் அதிருப்தி ஏற்பட்டிருப்பின் அது அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்குத் தடையாக அமையாது.)

முறைப்படி அமைக்கப்பட்ட மருத்துவ சபை ஒன்றினால் அவரது சுகநிலை வேலைக்குத் தகுதியான நிலையில் உள்ளதாகப் பின்பு தீர்மானிக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.

அவர் நரம்புக் கோளாறு அல்லது உள நோய் காரணமாக இளைப்பாறும்படி செய்யப்பட்டவரானால் செயலாளரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

II. அரச அலுவலர்கள் எந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்காக இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்குக?
i. நிறுவனமொன்றிலுள்ள வெற்றிடமொன்றை நிரப்புவதற்கு;
(iii) நிறுவனமொன்றில் வினைத்திறன் ஆக்கத்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு;
(iv) ஒழுக்காற்று நடைமுறையின் தேவைகளை நிறைவு செய்வதற்கு;
(v) ஓர் ஒழுக்காற்றுக் கட்டளையைச் செய்முறைப்படுத்துவதற்கு;
(vi) உத்தியோகத்தர் பரந்த துறையில் அனுபவம் பெறுவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு;
(vii) உத்தியோகத்தருக்கு அவரின் தொழில்சார் அபிவிருத்திக்கும் அவருடைய தேர்ச்சிகளை மேம்படுத்துவதற்கும் சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு;
(viii) உத்தியோகத்தரினால் அனுபவிக்கப்படும் சொந்தக் கஷ்டங்களுக்கு நிவாரணமளிப்பதற்கு.

III. அரச அலுவலர் ஒருவர் இடமாற்றம் பெறும் முறைகள் எவை?
i) வருடாந்தம் செய்யப்படும் இடமாற்றங்கள்
(ii) சேவையின் அவசரத்; தேவைகளின்; பேரில்; செய்யப்படும் இடமாற்றங்கள்
(iii) ஒழுக்காற்று காரணங்களின் பேரில் செய்யப்படும் இடமாற்றங்கள்
(iv) உத்தியோகத்தர்களினால் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் மீது செய்யப்படும் பரஸ்பர இடமாற்றங்கள்.

I. அரச அலுவலர் ஒருவரால் செய்யப்படும் தவறுகள் தொடர்பாக தாபன விதிக் கோவையின் II ஆம் தொகுதியின் இரண்டாம் பிரிவிலே குறிப்பிடப்பட்டுள்ள தவறுகள் யாவை எனச் சுருக்கமாக விளக்குக?
ஒரு அதிகாரியின் திறமையின்மை,
கவனக்குறைவு,
நேர்மையின்மை,
முறையற்ற அலட்சியம்
ஒழுக்கமின்மை
மற்றும் முதலாம் அட்டவணையில் அடங்காத குற்றங்கள்

II. ஒழுக்காற்று அதிகாரியின் பொறுப்புக்கள் யாவை எனக் குறிப்பிடுக.

சம்பந்தப்பட்ட விசாரணை அனாவசியமான முறையில் தாமதப்படுவதென தெரியவருமாயின் அந்தத் தாமதங்களை தவிர்ப்பதற்காக உரிய நடவடிக்கை எடுப்பது

முறைமைசார் ஒழுக்காற்று விசாரணையொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விசாரணையை ஒத்தி வைப்பதை தவிர்க்கும் வகையில் மேற்பார்வை செய்தல்.

தான் கட்டளை விதிக்க வேண்டியுள்ள ஒழுக்காற்று விசாரணையொன்றுக்குரிய இறுதி அறிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தாமதமின்றி பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுத்தல்

தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் ஒழுக்காற்று விசாரணை அறிக்கையை மிகவும் நிதானமாக பரிசீலனை செய்து தாமதமின்றி தனது ஒழுக்காற்று கட்டளையை விதித்தல்

ஒழுக்காற்று விசாரணை முடிவுக்கு வரும் சந்தர்ப்பத்தில் தனது முடிவுக்கு அடிப்படையான காரண காரணிகள் அனைத்தையும் ஒழுக்காற்று கோவையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் குறிப்பிடல்

I. அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற கடிதம் ஒன்றின் விடயங்களை இன்னொருவருக்கு தொடர்பாடல் செய்யும் போது பின்பற்ற வேண்டிய சரியான ஒழுங்குமுறை யாது?.
கிடைத்த கடிதத்தின் சாரம்
சமர்ப்பித்த விடயத்தின் வரலாறு
நன்மை, உண்மை நிலை

II. உத்தியோகபூர்வ கடித ஆவணங்களின் கட்டுக்காப்பு, கட்டுக்காப்பை பேணுதல், பாதுகாப்பு மற்றும் அழித்தல் தொடர்பாக தாபனக் கோவையிலுள்ள ஏற்பாடுகளை விளக்குக.

தனது பொறுப்பிலுள்ள அரசாங்க அலுவலகத்தின் அனைத்து எழுத்தாவணங்களினதும் பாதுகாப்பு, கட்டுக்காப்பு, என்பன தொடர்பாக திணைக்களத் தலைவர் அல்லது ‘பொறுப்பு வாய்ந்த அலுவலர்” பொறுப்பாதல் வேண்டும்.

தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசாங்கப் பதிவேடுகளை தேசிய சுவடிக்கூடத்துக்கு அனுப்பவும் பெறுமதியற்ற பதிவேடுகளை உரிய அனுமதியுடன் அழிக்கவும் முடியும்..

நிரந்தரமாகப் பேணப்பட்டு வருவதற்காக தேசிய சுவடிக்கூடத்துக்கு மாற்றப்பட வேண்டிய பதிவேடுகளின் அட்டவணையையும் அத்துடன் பெறுமதியற்றவையெனக் கருதி அழிக்கப்பட வேண்டிய அன்றாட பதிவேடுகளின் அட்டவணையையும் தயாரித்தலும், திணைக்களத் தலைவரினால் தேசிய சுவடிக் கூட பணிப்பாளரை உசாவி மேற்கொள்ளப்படல் வேண்டும்.

தயாரிக்கப்பட்ட ஆரம்ப அட்டவணைகள், அவை அட்டவணைப்படுத்தப்படல் பூர்த்தியாக்கப்பட்டு ஒரு மாத காலத்தின் பின்னர் அங்கீகாரத்துக்காக தேசிய சுவடிக் கூடப் பணிப்பாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

பெறுமதியற்ற அறிக்கைகள் மற்றும் அழிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை அழிக்க வேண்டியது, திணைக்களத் தலைவரின் பொறுப்பு மற்றும் கட்டளையின்கீழ் மாத்திரமே ஆகும்.

அழிக்கப்பட்ட ஒவ்வோர் ஆவணம் அல்லது அறிக்கை தொடர்பில் பொருத்தமான பதிவேடொன்றில் எழுதி வைத்து அப்பதிவேட்டைக் கவனமாகப் பாதுகாத்து வைத்தல் வேண்டும்.

III. ஒழுங்கமைப்பு அட்டவணை மூலமாக அலுவலகமொன்றில் என்ன விடயங்கள் தெளிவாக்கப்படுகின்றதென்பதை விளக்குக.

1) கடமையின் கையளிப்பை காட்டும்
2) இது கூட்டிணைத்தலுடன் தொடர்புடையது
3) தனிப்பட்ட பதவிகளின் பொறுப்புக்களை குறிப்பிடுகிறது
4) கடமைகளை நிறைவேற்ற தேவையான அதிகாரத்தை வரையறை செய்கிறது,
5) இது ஊழியர்களின் ஊக்கத்தையும், ஒழுங்குணர்வையும் பாதிக்கிறது.