DO III Past Paper

Saturday, December 3, 2022

Special Model Paper Office System DO III

எமது நிறுவனத்தினால் நடாத்தப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கான வகுப்புக்களில் கற்பிக்கப்பட்ட வினாப்பத்திரம் ஒன்று கீழே விடைகளுடன் தரப்பட்டுள்ளது.

Answers

  1. விசேட சிறப்பியல்புடைய சேவைகளையும் பணிகளையும் ஒரே இடத்திலிருந்து நிர்வகிப்பதிலுள்ள நன்மைகள் இரண்டு தருக?

i. சேவைகளை விரைவாக வழங்க முடியும்.
ii. மேற்பார்வை செய்தல் இலகு.

2. நிறுவனமொன்றுக்கு அலுவலக முறையானது முக்கியமானது என்பதற்கான இரு காரணங்களை தருக.

i. தகவல்களை பாதுகாக்க முடியும்

ii. நிறுவனத்தின் இலக்கினை விரைவாக அடைய முடியும்

  1. பணியாட் குழுவுக்கான வழிகாட்டலின் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள அலுவலக செயற்பாட்டு கையேட்டு வகைகள் இரண்டினை குறிப்பிடுக?

i) கொள்கைப்பிரகடன வழிகாட்டி
ii) நிறுவன வழிகாட்டி

  1. அலுவலகமொன்றில் பயன்படுத்தப்படும் எழுத்து மூலமான தொடர்பாடல் முறைகள் இரண்டினை குறிப்பிடுக?

i) கடிதம் மூலமான தொடர்பாடல்
ii) இலத்திரனியல் தபால்
iii)குறிப்புக்கள் மூலமான தொடர்பாடல்
iv)அறிக்கைகள் மூலமான தொடர்பாடல்

  1. நேரியல் ஒழுங்கமைப்பின் நன்மைகள் இரண்டு தருக?
    i) நிர்வாக மட்டங்களை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்
    ii நிறுவனத்தை இலகுவாக வழிநடாத்த முடியும்
    iii. இலகுவாக தீர்மானம் எடுக்க முடியும்,
  2. கோப்பு ஒன்றில் கடிதங்களை இணைக்கும் போது கவனத்தில் கொள்ளப்படும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகள் இரண்டினை குறிப்பிடுக?

புத்தகக் கோப்பிடும் முறை,
பிளந்த கோப்பிடும் முறை

7. அரச அலுவலர்களை பயிற்றுவிப்பதிலுள்ள நன்மைகள் இரண்டு தருக.
i. வேலையோட்டத்தில் தாமதம், பிழை ஆகியவற்றினை குறைத்தல்
ii. மேற்பார்வையின் மீது நேரத்தை மீதப்படுத்தல்.

8. அலுவலரை பயிற்றுவிக்கும் முறைகள் இரண்டு தருக.

நிறுவனத்தின் பின்னணிப் பயிற்சி

உத்தியோகத்தரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பயிற்சி

9. 5S கோட்பாடுகளுக்குரிய முக்கியமான படிமுறைகள் இரண்டை குறிப்பிடுக.
i. பிரித்தெடுத்தல்
ii. ஒழுங்குபடுத்தல்

10 ஒன்றிணைந்த கோவையின் அனுகூலங்கள் இரண்டு தருக.
i. காகிதாதிகள் செலவு குறைவு
ii. விடய அலுவலருக்கு வேலை நேரம் சேமிக்கப்படும்

பகுதி II


  1. வரைபு

விவசாய அலுவல்கள் ஆணையாளர் நாயகம்,
விவசாய அலுவல்கள் திணைக்களம்
2018.10.02

சகல மாகாண ஆணையாளர்களுக்கும்,
விவசாய அலுவல்கள் மாகாணத்திணைக்களம்.

பிரதேச செயலாளர் மட்டத்திலான சிறந்த வீட்டுத்தோட்ட தெரிவுப் போட்டி

விவாசாய அலுவல்கள் திணைக்களத்தினால் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் பிரதேச செயலாளர் மட்டத்திலான சிறந்த வீட்டுத்தோட்ட தெரிவுப் போட்டி ஒன்றினை நிகழ்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவ்வருடம் டிசம்பர் மாதம் இப்போட்டியை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை தீர்மானிக்கும் பொருட்டான கூட்டம் எதிர்வரும் 2018.10.10ம் திகதி மு.ப 9.00 மணிக்கு திணைக்களத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எனவே இக்கூட்டத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகி;ன்றீர்கள்.

கையொப்பம்
விவசாய அலுவல்கள் ஆணையாளர் நாயகம்,
விவசாய அலுவல்கள் திணைக்களம்

2.

மாதிரி சுற்றுநிருப வரைபு
உள்ளக சுற்று நிருப இலக்கம்:

மாநகர ஆணையாளர்,
மாநகர சபை
திகதி

சகல உத்தியோகத்தர்களுக்கும் நுகவெல


அலுவலக செயற்பாடுகள்
உள்வருகை வெளிச்செல்கை
சகல அலுவலர்களும் அலுவலகத்திற்கு கடமைக்காக சமூகமளிக்கும் நாட்களில் விரலடையாளப்பதிவு இயந்திரத்தில் வருகை, செல்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
வெளிக்கள கடமைக்காக செல்கின்ற அலுவலக அலுவலர்கள் வெளிக்கள கடமைகளின் பின்னர் அலுவலகத்தில் இருந்து வெளிச் செல்வதை விரலடையாள பதிவு இயந்திரம் மூலம் உறுதிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் ஓட்டப்பதிவுகள் போன்ற வேறு அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தலாம்.
அலுவலகத்திலிருந்து வெளியே செல்வதற்கான அனுமதி

அனுமதியினைப் பெறாது அலுவலகத்திலிருந்து வெளியே செல்வதற்கு உத்தியோகத்தர் ஒருவருக்கு அனுமதி கிடையாது.

 கடமை நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்வதற்கு முறையான விண்ணப்பப் படிவம் ஒன்றினை உரிய அனுமதி வழங்கும் அதிகாரிக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

சீருடை

சீருடைக் கொடுப்பனவை பெற்றுக்கொண்டுள்ள உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சீருடை அணிய வேண்டும். இதனை மீறும் அலுவலர்களிடமிருந்து குறித்த சீருடை கொடுப்பனவு அறவிடப்படுவதுடன் ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இச்சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் 2018.05.15ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.
கையொப்பம்
நாமல் பத்திரன
மாநகர ஆணையாளர்
மாநகர சபை
நுகவெல

3

தேசியக்கொடியை ஏற்றுதல்.

தேசியகீதம் இசைத்தல்.

நாட்டிற்காக உயிர்நீத்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி

எல்லா அலுவலர்களும் ஊழலற்ற நாட்டை உருவாக்குவதாக உறுதிமொழி எடுத்தல்.

நிறுவனத் தலைவர், ஊழலற்ற நாட்டை உருவாக்கும் செயற்பாட்டுக்கு அரச அலுவலர்களின் பங்களிப்பைப் பெறுவதற்கான தேவையைச் சுட்டிக் காட்டும் சிற்றுரையொன்றை இறுதியில் நிகழ்த்துதல்.


வரைவு
எனது இலக்கம்:
மாநகர ஆணையாளர்,
மாநகர சபை
மெதநல
திகதி

தலைவர்,
பிரதேச சபை,
……………..

பிரதான வீதிகளை ‘காபட்’ செய்வதற்கான வேலைத் திட்டம் – 2023

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில், மெதநல மாநகர சபையின் கீழ் உள்ள சகல பிரதேச சபை பிரிவுகளிலும், பிரதான வீதிகளை ‘காபட்’ செய்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் முதலாவது கட்டமாக ஒரு பிரிவுக்கு, 50 கிலோமீட்டர் நீளத்துக்கு உட்பட்டு, பல்வேறு வீதிகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான ஒதுக்கீடுகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ் அபிவிருத்தி வேலைத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக, இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 2023.01.15 ஆம் திகதி மு.ப. 9.00 மணிக்கு, மெதநல மாநகர சபை அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதால் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கையொப்பம்
மாநகர ஆணையாளர்,
மாநகர சபை,
மெதநல.